பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து நெதர்லாந்தை சேர்ந்த யூடியூபர், கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.தடகள வீரர் அர்ஜென் ஆல்பர்ஸுடன் இணைந்து யூடியூப் சேனலை நடத்தி வரும் ஸ்டான் பிரவுனி, கடந்த ஜூலை 6 ஆம் தேதி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் உள்ள ஹோவெனென் ஏர்ஃபீல்டில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஸ்டான் பிரவுனியின் கின்னஸ் சாதனை வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ள
கியூபாவில் எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 120 பேர் படுகாயமடைந்துள்ளனர்.கனமழை காரணமாக, மடான்சாஸ் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீது மின்னல் பாய்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீ, மளமளவென எண்ணெய் கிடங்கு முழுவதும் பரவியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது கரும்புகை ஏற்பட்டதால், மீட்பு பணியில் ஈட
நாட்டின் வளர்ச்சிக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாராட்டுவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் மக்கள் பேரவையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசி அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனக்கு எதிரானவர்கள் அல்ல எனக் கூறினார். இதையும் படிக்க: இறந்த பன்றிகளை உயிர் பிழைக்க வைத்த அதிசயம்.. ’OrganEx’.. மருத்து
விஞ்ஞானத்தின் வளர்ச்சி நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. செயலிழந்த உறுப்புகளை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மற்றும் டெக்னாலஜியை பயன்படுத்தி உயிர்வாழ செய்யமுடியும் என்ற நிலையைத் தாண்டி இப்போது ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர் விஞ்ஞானிகள். அதாவது இறந்துபோன பன்றிகளுக்கு மீண்டும் உயிர்வர வைத்திருக்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். மேலும் இதன்மூலம் எதிர்காலத்தில் இறப்பு எ
ஈரானின் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம், மாநிலத்தின் கடுமையான கற்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் இனி விளம்பரங்களில் தோன்றுவதற்கு தடை விதிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.தளர்வாக ஹிஜாப் அணிந்துகொண்டு ஒரு பெண் ஐஸ்க்ரீமை கடிப்பதுபோன்ற மேக்னம் விளம்பரம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் ஈரானிய மதகுருக்களின் கோபத்தை தூண்டியதையடு
தைவானை தங்களது நாட்டின் ஒருபகுதியாக சீனா கருதிவரும் நிலையில், ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் நிறுவனம் அதனை தனி நாடாக விளம்பரப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.தீவு பகுதியான தைவானை தங்களது நாட்டு எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சீனா கூறிவருகிறது. ஆனால் தைவான் தன்னை சுதந்திர தனி நாடாக கூறி வருகிறது. இதனால் தைவான் தனி நாடா அல்லது சீன எல்லைக்குட்பட்டதா என்பது விவாதப்பொருளாக இருந்துவரும் நிலையில், அமெரிக்காவை சேர்
பயணிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்த ஜப்பான் அனுமதி அளித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்திருந்ததுது. எனவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், பயணிகளுக்கு
லுங்கி அணிந்து வந்திருந்ததால் திரையரங்குக்குள் நுழைய ரசிகருக்கு அனுமதி மறுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.ஸ்டார் சினிப்ளெக்ஸ், வங்காளதேசம் நாட்டின் ஒரு முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனம் ஆகும். இந்த திரையரங்குக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சமன் அலி சர்கார் என்பவர் லுங்கி அணிந்து சென்றுள்ளார். அப்போது இப்படி லுங்கி அணிந்து வந்தால் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றுக் கூறி
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற 46 பேரை ஆஸ்திரேலியா எல்லைப்படை கைது செய்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தனர்.இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி இலங்கையில் இருந்து ஒரு விசைப்படகில் 46 நபர்கள் சட்டவிர
ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதின் 77வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945 ஆம் ஆண்டு இதே நாளில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. லிட்டில்பாய் எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த பி-29 ரக எனோலாகெய் என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா மீது உலகின் முதல்
தைவான் ராணுவத்திற்காக ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரி ஒருவர் இன்று காலை திடீரென மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் கடும் அதிருப்தியில் இருக்கிறது சீனா. இதையடுத்து தைவானை அச்சுறுத்தும் விதமாக சீன ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் ரஷ்யா-உக்ரைன் போ
உடல் நலக்குறைவு காரணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தன்னை போன்ற தோற்றமுடையவரை தனக்கு பதில் பொது இடங்களுக்கு அனுப்பி வருவதாக உக்ரைன் உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.ரஷ்ய அதிபர் புடின் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், பொது தோற்றங்களைத் தவிர்க்க, தனது தோற்றத்தை ஒத்திருக்கும் நபரை பயன்படுத்தினார் என்றும் உக்ரைனின் செய்தித்தளமான டிஎஸ்என் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் டெஹ்ரா
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சொந்தமாக ஜெட் வைத்திருப்பது பலரும் அறிந்த தகவல்தான். அவர் தற்போது ஜெட் மட்டுமன்றி தனியொரு விமான நிலையத்தையும் தனக்காக தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதை மறுத்துள்ளார் எலான் மஸ்க்.எலான் மஸ்க், டெக்ஸாஸில் புதிய விமான நிலையத்தை தொடங்க இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக தெரிவித்து வந்தன . குறிப்பாக ஆஸ்டோனியா என்ற ஊடகம்
கொரோனாவிலிருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் புதிய திருப்பமாக, மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி பைடனுக்கு கொரோனா உறுதியான நிலையில், மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கு ஏற்ப, கையில் இருந்து வெறும் துண்டை மட்டுமே வைத்து கத்தியுடன் வந்த திருடனை விரட்டிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.நெதர்லாந்து நாட்டில் டெவேன்ட்டர் நகரில் மெவ்லானா என்ற பெயரில் துருக்கி பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியை லடீஃப் பெக்கர் (47) என்ற பெண் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல தனது பேக்கரியை திறந்த பெ
பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் நிதியுதவி பெற்றதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.சர்வதேச பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒசாமாவின் உறவினரும் சகோதரரான ஷபீக் பின்லேடனிடம் இருந்து 2013ஆம் ஆண்டு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகை, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அறக்கட்டளைக்கு சென்றதால், தனிப்பட்ட காரணங்களுக
உலகம் வெப்பமயமாதலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மக்கள் தங்களுடைய ஆற்றலை சேமிக்கும் வகையில் முக்கியமான பழக்கத்தை கைவிடுவது நல்லது என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் கூறியிருக்கிறார்.கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் கழுத்தில் Tie அணியாமல் வழக்கமான ஆடையுடன் முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார், அதாவது, அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழ
ராமேஸ்வரம் மீனவரின் விசைப்படகு நடுக்கடலில் பழுதடைந்து காற்றின் வேகத்தால் இலங்கை கடல் பகுதிக்குச் சென்ற விசைப்படகை கயிறு கட்டி இழுத்து சக மீனவர்களிடம் ஒப்படைத்த இலங்கை கடற்படைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சேகர் பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் நேற்றிரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொ
குரோஷியாவிற்கு விடுமுறைக்குச் சென்று திரும்பிய பெண்ணுக்கு உயிர்பயத்தை காட்டியிருக்கிறது தன்னுடைய சூட்கேஸ். அப்படி என்ன இருந்தது அந்த சூட்கேஸில்?ஆஸ்திரியாவின் நாட்டர்ன்பாக் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் விடுமுறை பயணமாக குரோஷியா சென்றுள்ளார். அங்கிருந்து சனிக்கிழமை தனது வீட்டிற்கு திரும்பிய அவர், தனது சூட்கேஸிலிருக்கும் பொருட்களை வெளியே எடுத்துள்ளார். அப்போது அவருக்கு மரண பயத்தை காட்டியிருக்கிறது அந
அமெரிக்காவில் 7 வயது சிறுவன் வாஷிங் மெஷினுக்குள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ட்ராய் கோலெர் காலை 6.30 மணியளவில் காணாமல் போய்விட்டதாக சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் புகாரளித்ததற்கு கிட்டத்தட்ட 2-3 மணி நேரங்களுக்கு முன்பாக சிறுவன் காணாமல் போயிருப்பதாக ஃபாக்ஸ் நியூஸ் தகவல் வெளிய
பாகிஸ்தானில் தனது மனைவியிடம் தவறான உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தி மிரட்டிய காவலரின் மூக்கு, காது மற்றும் வாயை அவரது கணவர் வெட்டி எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.பாகிஸ்தானின் லாஹோர் நகரிலிருந்து 200 கிமீ தொலைவிலுள்ள ஜாங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. முகமது இஃப்திகார் என்ற நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டு காசிம் ஹயாத் என்ற போலீஸ் கான்ஸ்டிபிளை ஆளில்லாத இடத்திற்க
இஸ்ரேலில் பெண் சிறைக்காவலர்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இஸ்ரேல் நாட்டில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட கில்போவா சிறைச்சாலையில் பணியாற்றும் ஒரு பெண் காவலர் அந்த நாட்டு தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அந்நாட்டையே உலுக்கும் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்தார். “பாதுகாப்பு தொடர்பான குற்ற
மும்பையை சேர்ந்த 70 வயது மூதாட்டியொருவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இவர் தற்போது சமூக வலைதள உதவியால் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் என்ற பகுதியில் வசிக்கும் ஹமிதா பானோ, கடந்த 2002 ஆம் ஆண்டு துபாய்க்கு வீட்டுவேலையொன்றில் பணிபுரிவதற்காக மும்பையை விட்டு வெளியேறியுள்ளார். இதன் பின்னர் இப்போதுதான் இவருடைய இருப்பிடம் இவரது குடும்ப
அமெரிக்காவில் நடத்தப்பட்ட SPELLING BEE போட்டியில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஹரிணி என்ற சிறுமி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சிறுமி ஹரிணி லோகன் அமெரிக்காவில் Spelling Bee போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆங்கில வார்த்தைக்கான எழுத்துக்களை பிழையின்றி விரைவாக கூறுவதே Spelling Bee போட்டி. இப்போட்டியில் வென்றதன் மூலம் அமெரிக்க அதிபரின் மனைவி, துணை அதி
அமெரிக்காவின் கிரிப்டோ கரன்சி நிறுவனங்களில் பதிவு செய்வதற்காக linkedin, indeed போன்ற பணிகள் தொடர்பான தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளவர்களின் சுய விவரங்களை வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் திருடியிருக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.வட கொரியா அதிபர் கிங் ஜாங் உன் ஆட்சிக்கு ஆதரவாக நிதி திரட்டும் வகையில் மோசடி செய்பவர்கள், நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற முயற்சிப்பதாக Mandiant Inc-இன் பாதுகாப்
அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் அடுத்த தலைவராக சைஃப் அல்-அடெல் பொறுப்பேற்கலாம் என்று தெரிகிறது.ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று கொல்லப்பட்டார். 2001ஆம் ஆண்டு நடந்த அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான அய்மன
சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி தைவானில் தரையிறங்கினார் அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி.அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை திங்கட்கிழமை தொடங்கினார். இதனிடையே தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பினை தெரிவித்ததோடு, தைவானுக்குள் நான்சி பெலோசி நுழைந்தால் கடும் வி
விண்மீன் கூட்டத்தின் உருவாக்கம் பற்றிய ரகசியத்தை 50 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கேலக்ஸியை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்த படத்தின் மூலம் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.பார்ப்பதற்கு வளையங்களாக காட்சியளிக்கும் பிரகாசமான ஒளிகள் நமது சூரியனைப் போல பல கோடி கோடி விண்மீன்கள் கொண்ட விண்மீன் கூட்டம். 50 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கார்ட்வீல் உடுதிரளை (Galaxy) ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அகச
ஆக்ஷன் படங்களில் ஹீரோவை நோக்கி வில்லன் தாக்கும் போது அது மீண்டும் வில்லனை நோக்கியே தாக்குவது போல காட்சிகள் இருக்கும். இப்படியெல்லாம் உண்மையில் நடப்பதற்கு சாத்தியமே இல்லை.சினிமாக்களில் வேண்டுமானால் ட்ரிக் செய்ய வைக்கலாம் என நினைக்கலாம். ஆனால் நிஜமாகவே இப்படியான சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்திருக்கிறது. அதன்படி டெக்ஸாசில் கடந்த சனிக்கிழமையன்று பெண்ணை கொல்ல அவரது கழுத்தை
இலங்கை மன்னார் கடற்கரை பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், இதை யார் அங்கு வைத்தது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இலங்கை மன்னார் கடற்கரை பகுதியில் கஞ்சா புதைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல்களை கிடைத்துள்ளது.இதையடுத்து மன்னார் கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணி ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணில் புதைக்