தென் கொரிய தலைநகர் சோலில் உள்ள சில்ட்ரன்ஸ் கிராண்ட் பார்க் என்ற உயிரியல் பூங்காவில் இருந்து தப்பித்த செரோ, மூன்று மணி நேரம் அதிகாரிகளுக்கு போக்குகாட்டி அங்குமிங்கும் ஓடித்திரிந்தது.
என் அப்பா நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தப்பட்டார், உங்கள் அமைச்சர்கள் என் அம்மாவை பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தினர். உங்கள் முதலமைச்சர் ஒருவர் தந்தை யாரென்று ராகுல் காந்திக்கு தெரியாது என்றார். ஆனால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
போலீசார் வடமாநிலத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இதை அடுத்து நாமக்கல் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் வந்து அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தார்.
வேலை போய்விட்டது என்பதை நினைத்து அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அமிதா கண்ணீர்விட்டு அழுதுள்ளார். ஓராண்டு முன்புதான் அமிதாவும் அவரது கணவர் மனோகர் பசல்கரும் இணைந்து வங்கி கடனில் புதிதாக வீடு வாங்கி இருந்தனர். அதன் மாத தவணையும் தொடங்கியிருந்தது.
காஷ்மீரில் இருந்து அக்ரூட் பருப்புகள், கன்னியாகுமரியில் இருந்து கிராம்பு, ராஜஸ்தானில் இருந்து அஸ்வகந்தா, தமிழ்நாட்டில் இருந்து ஏலக்காய் என தேர்வு செய்தனர்
ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் மகாத்மா காந்தி நினைவகம் அமைந்துள்ள ராஜ்காட்டில் நடந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
ஆபாசப் பட நடிகை வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டதாக கடந்த ஒரு வாரமாக இணையத்தில் போலி புகைப்படங்கள் பரவி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் இத்தகைய போலிகளை இனம் காண்பது எப்படி?
கோவிட்-19 நோய்த் தொற்றுக்குக் காரணமான வைரஸ் முதன் முதலில் மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பதற்கான "சிறந்த சான்றுகள்" கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.
நான் வாழ்வதற்கான வழியை ஆடுகள்தான் காட்டின. ஆடு வளர்ப்பால், 10 முதல் 12 லட்சம் மதிப்புள்ள வீடு கிடைத்தது, கார் கிடைத்தது. என் வாழ்க்கையில் நடப்பது எல்லாமே ஆடு வளர்ப்பு மூலம் தான் நடக்கிறது
கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் மின் வேலிகளில் விபத்திற்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த மாதத்தில் மட்டுமே ஐந்து யானைகள் இத்தகைய சம்பவங்களால் உயிரிழந்துள்ளன. இதற்கு என்ன காரணம்?
"என்னுடைய சுதந்திரத்தையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்தாத உறவும், வாழ்க்கையும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வகையில் 10 ஆண்டு காதல் தராத புரிதலையும் நெருக்கத்தையும் லிவ்-இன் வாழ்க்கை தந்துள்ளது" என்கிறார் கவிதா கஜேந்திரன்.
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் குவாலியர் ஐடிஎம் பல்கலைக்கழகத்தில் பேசியபோது "மகாத்மா காந்தி சட்டக்கல்வியில் பட்டம் பெறவே இல்லை" என்றார். இதன் உண்மைத் தன்மையை பிபிசி ஆராய்ந்தது.
மருத்துவம் மிகவும் நவீனமாகிவிட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். அன்யூரிச இரத்த நாள வீக்கங்களுக்கான , நுண்துளை (Endovascular)ரத்த நாள சிகிச்சைகளும் உள்ளன. அதனால் தீவிர நிலையில் சிகிச்சைக்கு செல்வதற்கு பதிலாக, ஆரம்பக்கட்டத்தில் கண்டறிவது சிறந்தது,என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் தவிர்ந்த ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் வரை கிடைக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் ரணில் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 499, 500 ஆகியவற்றின் கீழ் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 499வது பிரிவு, குற்றவியல் அவதூறு வழக்குகளில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்க வழிவகுக்கிறது.
பாரத் ஜோடோ யாத்திரைக்குக் கிடைத்த வரவேற்பையடுத்தே ராகுல் காந்தி மீது இப்படி ஒரு தாக்குதலைத் தொடுக்கிறார்கள். இது பா.ஜ.கவிற்கு பூமராங் ஆகவும்கூடும். ஆனால், இப்போதைக்கு "அதானி விவகாரத்தில் இருந்து கவனம் திரும்பியிருக்கிறது. அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும்" என்கிறார் சாய்நாத்.
தமிழீழத்திற்கு மீண்டும் ஒரு தலைவன் வரக்கூடாது என்பதற்கான நிகழ்ச்சி திட்டமாக இந்த கூற்றை பார்க்கிறோம். யாருக்கு தேவையோ, அவர்களுக்காக இவர்கள் வேலை செய்கின்றார்கள் என நாங்கள் காண்கின்றோம். என்கிறார் முன்னாள் போராளி அரவிந்தன்.
யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது என்பதுடன், இலங்கையின் தென் பகுதியில் விஷ்ணு கடவுளை வழிபடுவது பொதுவாகக் காணப்படுகின்றது என ஜனாதிபதி ரணில் கூறுகின்றார். மேலும், தென் பகுதியில் பல இந்து கடவுள்களை மக்கள் வழிபட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதயத்தின் அளவு மற்றும் தசைகள் பெரிதாவதால், அதன் ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது என்று ராக்கெட்ரி மாதவன் முதல் கிரகண காலங்களை கணகச்சிதமாக நம் பஞ்சாங்கங்கள் கணிக்கின்றன என்று சமூக ஊடக பதிவுகள் வரை அதைப் புகழ்ந்து பேசுகின்றனர். இது உண்மையா?
பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது என்று ராக்கெட்ரி மாதவன் முதல் கிரகண காலங்களை கணகச்சிதமாக நம் பஞ்சாங்கங்கள் கணிக்கின்றன என்று சமூக ஊடக பதிவுகள் வரை அதைப் புகழ்ந்து பேசுகின்றனர். இது உண்மையா?
அந்தக் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு, முந்தைய நிகழ்வுகளைப் போல பாஜகவுக்குள் நிலவும் உள்கட்சி கொந்தளிப்பைக் காட்டுவதாக மட்டும் முடியவில்லை.
இவர் சுகாதாரமற்று வாழ்ந்து வந்துள்ளார். கொட்டிலில் உணவு சமைத்தால், அந்த பாத்திரங்களை கழுவ மாட்டார். அடுத்த சமையலையும் அதிலேயே சமைத்துள்ளார். மீனை எடுத்து, அரிசியுடன் போட்டு, அப்படியே சமைத்துள்ளார்
பெர்லினின் நகர அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு விரைவில் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜெர்மன் மக்கள் இப்படி பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பதை விரும்புவது ஏன்?