தமிழகத்தில் ஆளும் திமுக இந்தி எதிர்ப்பை வலியுறுத்தி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி இந்தி படத்தை ரிலீஸ் செய்வது சர்ச்சையானதால் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட தினத்துடன் தொடர்புபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்களை ப. சிதம்பரம் நிராகரித்தார்.
கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில், திமுக எம்.பி கனிமொழி பேசிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர் துரைமுருகன் திடீரென நிகழ்ச்சிக்கு வந்ததைப் பார்த்த கனிமொழி, பேச்சை நிறுத்திவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று அவரை அழைத்து வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பெரியாரை வைத்து இப்போது மீண்டும் பாஜக உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினை சார்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கவே திட்டமிட்டு இப்படி செய்வதாக திக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
காசாவில் போராளிக் குழு தளபதி வான்வெளி தாக்குதலில் பலி; சீனா போர் பயிற்சியை நிறுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐப்பான் வலியுறுத்தல்; விலங்குகளுக்காக உயிரை பயணம் வைக்கும் உக்ரைன் பெண்... இன்றைய உலகச் செய்திகள்
முதலீட்டாளர்கள் 25 வருட காலத்திற்கு ரூ.1,36,75,952 முதிர்வு மதிப்பு கொண்ட முறையான திரும்பப் பெறும் திட்டத்தை (SWP) வாங்கினால், அவர்கள் மாதத்திற்கு கூடுதலாக ரூ.1.03 லட்சத்தைப் பெறுவார்கள், மொத்த மாதாந்திர வருடாந்திரத் தொகை ரூ.1.5 லட்சமாக இருக்கும்.
SSLV ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-02 மற்றும் 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா புரோகிராம் மூலம் 750 பள்ளி மாணவிகள் தயாரித்த ஆசாதிசாட் (AzaadiSat) ஆகியவற்றை சுமந்து சென்றது.
குழந்தைக்கு பசிக்கும்போது, பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் தைரியமாக தாய்பால் கொடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி கோவையில், தாய்மார்கள் பொது இடத்தில் குழந்தைக்கு தாய்பால் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Optical Illusion: இந்த படத்தில் உள்ள காட்டில் பல விலங்குகள் மறைந்திருக்கிறது. அதிகமான விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களுக்கு விடை காண்பதில் மாஸ்டர்.
ரெப்போ வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஐசிஐசிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) உள்ளிட்ட வங்கிகளில் கடனுக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Optical Illusion: இந்த படத்துல கண்ணுக்குத் தெரிந்த பாண்டா கரடிகளை மட்டுமல்ல, கண்ணுக்கு தெரியாமல் மாயமாக மறைந்திருக்கும் பாண்டாக்களையும் சேர்த்து 12 பாண்டாக்களை 24 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.
ஆறு மாதங்களாக வீட்டிற்கு வராமல் செய்த கடின உழைப்புக்கு கை மேல் பலன்; U20 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் டிரிபிள் ஜம்ப்பில் தமிழக வீரர் செல்வா வெள்ளி வென்று வரலாற்று சாதனை
சாப்பிட்டதற்கு முன்பு நடப்பது நல்லது என்று கூறுவார்கள். இதைத்தான் மருத்துவர்கள் மற்றும் அரோக்கியத்தை பேணுபவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சாப்பிட்டபின் நடப்பது கூடுதல் நன்மைகள் அளிப்பதாக கூறப்படுகிறது.
பெருவில், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் சில அரசாங்க சேவைகளை அணுக முடியாது, மேலும் பெல்ஜியத்தில், வாக்களிக்காதவர்கள் பொதுத் துறையில் வேலை பெறுவது கடினம்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானையை, ஒருவர் தாக்கியதில் அதற்கு ரத்தம் கொட்டியது. இது அங்கு குவிந்த பக்தர்களுக்கு வேதனையளித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெண் பக்தர் புகார் அளித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் நாக்பூர் தலைமையகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் ஆர்எஸ்எஸ் தேசியக் கொடி உறவு குறித்து பார்க்கலாம்.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்த சீனாவின் யுவான் வாங் 5 என்ற ராணுவக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.