புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த சூழலில், மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத் தலைவராக எம்பி வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலை முன்வைத்து கட்சித் தலைமை இம்முடிவு எடுத்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்காததால் உடற்கல்வி துறை முதன்மை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் அருகே நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் குடும்பத்துடன் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்களாக நகராட்சி ஆணையர் வரவில்லை என நகர்மன்ற தலைவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவமனை ஊழியர்கள் கையூட்டு வாங்குவதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
டி.என்.பி.எல் போட்டிகளில் விளையாடும் போது ஐ.பி.எல் போட்டிகளுக்கு தயாராவதற்கான வாய்ப்பு கிடைப்பாதாக கிரிக்கெட் வீரர்கள் ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.வருகிற 12ஆம் தேதி போட்டிகள் தொடங்க இருப்பதையொட்டி டிஎன்பிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக வைத்திலிங்கம் எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குஜராத், புதுச்சேரி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்திலிங்கம் எம்பிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கோவை அவிநாசி சாலையில் மேம்பாலம் கட்டப்படும் பணிகள் நடைபெற்று வருவதால் லட்சுமி மில் சந்திப்பில் உள்ள சிக்னல் அகற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக யூ டர்ன் போடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தற்போதைய தமிழக சுகாதாரச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி தன்னை சாதிய ரீதியாக துன்புறுத்தியதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் நரனவாரே ஐஏஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தலைமைச் செயலாளருக்கு 2 பக்க புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டு வந்ததாக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமைக்குழு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் காவலர் தேர்வில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்ச்சி பெற்றதையடுத்து கிராமத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். தேர்ச்சி பெற்றவர்கள் பொதுமக்கள், பெற்றோர் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர்.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் லியோ, தளபதி 68 படங்களின் அப்டேட்கள் வெளியாகவுள்ளதாக இணையத்தில் பரவி வரும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
விருதுநகர் அருகே இரண்டு சிறுமிகளை பாம்பு கடித்த நிலையில், ஒரு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும் மற்றொரு சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பழனி அருகே பேருந்து நிறுத்ததை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றிய சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு உணவகத்தை அகற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாகூரில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. அதனால் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தாம்பரத்திலிருந்து காரைக்கால் பகுதிக்கும், காரைக்காலில் இருந்து தாம்பரம் வரையிலும் சிறப்பு கட்டண ரயில் ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் மட்டும் 13 பைசாவிலிருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம், அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. மற்ற மாநிலங்களில், இதைவிட அதிகம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுச்சேரி காவலர் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 11 பேருக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்வில் வெற்றி பெற்ற 11 பேரும் கிராம மக்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று 12 ஆயிரம் குடும்பங்கள் சார்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை வைத்துள்ளார்.
தர்மபுரியில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனம் கவர்ச்சியான விளம்பரங்களை வழங்கி பொதுமக்களை ஏமாற்றியுள்ளது. மேலும் தினந்தோறும் 1800 ரூபாய் வீதம் 100 நாட்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என கவர்ச்சி விளம்பரத்தை செய்துள்ளது. அதனை நம்பிய பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து தற்போது ஏமாற்றமடைந்து போலீசாரிடம் தொடர் புகாரை தெரிவித்து வருகின்றனர்.
அபிராமியிடம் கார்த்திக் தீபாவிற்கு ஆதரவாக பேச அபிராமியும் யோசிக்கிறாள்.அந்த சமயத்தில் ஐஸ்வர்யா அபிராமையிடம் வந்து தீபாவை பற்றி ஏற்றிவிட பார்க்கா கார்த்திக், நீங்க கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க என சொல்லி ஐஸ்வர்யாவை அடக்குகின்றான். இதையடுத்து கார்த்திக் ஆபிசுக்கு புறப்பட வழியில் மீனாட்சியை பார்க்கின்றான். மீனாட்சி காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு செல்ல அவளை காரில் ஏத்தி செல்கின்றான் கார்த்திக். மறுபக்கம் ஐஸ்வர்யா கார்த்தியின் உயிருக்கு ஆபத்து வர வைக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்கின்றாள். இந்நிலையில் காரில் கார்த்திக் மற்றும் மீனாட்சி செல்ல வழியில் ரூபாஸ்ரீயை பார்த்து காரில் ஏத்தி செல்கின்றனர்
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆபத்தான முறையில் மின்கம்பிகள் செல்வதாக பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக நிர்வாகியே குற்றஞ்சாட்டி இருக்கிறார். செத்தால் தான் அதிகாரிகள் வருவார்கள் என்றும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றும் அவர் கடுமையான விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.