பேரறிவாளனைத் தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வரும் 23-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-வது ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இன்று (புதன்கிழமை) பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் செல்லும் கப்பலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பேச வாய்ப்பு கொடுக்காததால் திமுக கவுன்சிலர்கள் மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியின் ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாக இந்து மகா சபா புகார் கூறி உள்ளது. இவற்றை மீட்டெடுக்கும்படி வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி கடிதம் எழுதியுள்ளார்.
பேரறிவாளன் தீர்ப்பு தொடர்பான பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு, மீசையும் இல்லையா என்று கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளார் திமுக எம்பி செந்தில் குமார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
எரிபொருள் தேவையான வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என தெரிவித்து பல தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கி குறித்த அறிக்கை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பற்றிய விரிவான செய்திகளையும் மேல...
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதியளவு எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (19) 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏ முதல் டபிள்யூ வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேர இடைவெளியிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணி 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். ...
இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மக்களை ஒடுக்குவதில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் ஒத்த தன்மையுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், வன்முறை என இரு நாடுகளையும் அவர் ஒப்பிட்டார்.
அவரின் விளக்கப்படங்களின் பகுப்பாய்வு இரு நாடுகளுக்கும் இடையிலான சில ஒற்றுமைகளை வெளிப்படுத்துகிறது....
அண்மைக்காலமாக காவல்துறை தீவிர அரசியல் மயப்படுத்தப்பட்டமையே காவல்துறை மீது பொதுமக்களின் அதிருப்திக்கு காரணம் என காவல்துறை மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே விக்கிரமரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்தில் காவல்துறை எப்படி அரசியல்மயமாக்கப்பட்டது என்பதை அந்தக் கடிதத்தில் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.
01.01.2021 முதல் 03.11.12021 வரை அரசாங்கம் வழங்...
3 ஆவது யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு 14,000 இற்கும் அதிகமான இலங்கைப் படையினர் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். இன்று 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இத்தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் 396 அதிகாரிகள், மற்றும் ஏனைய தரங்களைச் சேர்ந்த 8,110 பேர் இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப்படையின் 450 அதிகாரிகளும் 3361 வீரர்களும் தரமுயர்த்தப்பட்டுள்னனர்.
இலங்கைக் கடற்படையின் 74 அதிகாரிகள் மற்றும் 2,010 வீரர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர...
விருதுநகரில் ராணுவ கேண்டீனில் முன்னாள் ராணுவத்தினருக்கு சரியான முறையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்டம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விருதுநரில் உள்ள இராணுவ கேண்டீனில் வீட்டிற்கு தேவையானப் பொருட்களை வாங்கிச் சென்று பயன்பெறுகிறார
பேரறிவாளனை விடுதலை செய்யும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் மாரு ராம் என்ற வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டி உள்ளது. அது என்ன வழக்கு, பேரறிவாளன் விடுதலைக்கும், இதற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பார்க்கலாம்.Maru Ram vs Union of india 1980 இதுதான் அந்த வழக்கின் பெயர். இது ஒரு குற்றவாளிக்கு கருணை காட்டும் குடியரசு தலைவருடைய அதிகாரம் குறித்து பேசக்கூடிய வழக்காகும்.அரசியல் சாசன பிரிவு 72 இன் கீழ் மத்திய
சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன், அற்புதம்மாள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் ஏற்கெனவே தமிழக அரசு மற்றும் முதல
“அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.மதுரை மாவட்டம் மேற்கு தொகுதியில் ரூ.37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர்,“கடந்த அதிமுக ஆட்சியில் நெல்லையில் உள்ள கல்குவாரிக்கு அனுமதி கேட்டனர். அதை ஆராய்ந்து பார்த்ததில் விபத்து ஏற்படும் அபாயம்
Alert news for EPFO account holders and Tips you can use to avoid a big loss in tamil: இபிஎஃப்ஓ அமைப்பு ஒரு சேவைக்காக எந்த பணத்தையும் டெபாசிட் செய்யும்படி உங்களை ஒருபோதும் கேட்காது.
இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தைப் பார்த்த பலரும் தங்களுடைய மூளையின் பவரையும் தங்களின் ஆளுமைத் திறனையும் சரிபார்த்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளனும் அவரது குடும்பத்தினரும் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முன்னாள் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஆயுள் தண்டனை முடிந்த நிலையிலும் அவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படவில்லை. இதற்காக
சென்னை: சாராய பாட்டில்களை பதுக்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று சொல்லும் அளவுக்கு இங்கு நிகழ்வுகள் நடப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.குற்றஞ்சாட்டியுள்ளார். போதைப் பொருட்களின் மையமாக சென்னை மெரினா கடற்கரை மாறி வருவதற்கு தனது கண்டனத்தை அரசுக்கு பதிவு செய்து கொள்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஊருக்குள் சாராய விற்பனை.. ஓட ஓட விரட்டி வெளுத்தெடுத்த மக்கள்..தலைதெறித்து ஓடிய கும்பல்..வைரல் வீடியோ
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இடும்பன் குளம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு வந்த தன்னை போலீசார் எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்து விட்டதாகவும், இந்து மதத்தில் பிறந்தது தனது தவறா என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோவில்
சென்னை: சென்னை மேயர் பிரியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் கவனமாகப் பேசும்படியும், விஷயம் தெரியவில்லை என்றால் துணை மேயரை பேசச் சொல்லவும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். சென்னை மேயர் பிரியா சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பல இடங்களில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கின்றன எனத் தெரிவித்தார். அம்மா உணவகங்கள்
சென்னை: பேரறிவாளன் விடுதலையில், ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது என விசிக மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் மனு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை