மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதியளவு எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (19) 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏ முதல் டபிள்யூ வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேர இடைவெளியிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணி 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். ...
இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மக்களை ஒடுக்குவதில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் ஒத்த தன்மையுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், வன்முறை என இரு நாடுகளையும் அவர் ஒப்பிட்டார்.
அவரின் விளக்கப்படங்களின் பகுப்பாய்வு இரு நாடுகளுக்கும் இடையிலான சில ஒற்றுமைகளை வெளிப்படுத்துகிறது....
அண்மைக்காலமாக காவல்துறை தீவிர அரசியல் மயப்படுத்தப்பட்டமையே காவல்துறை மீது பொதுமக்களின் அதிருப்திக்கு காரணம் என காவல்துறை மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே விக்கிரமரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்தில் காவல்துறை எப்படி அரசியல்மயமாக்கப்பட்டது என்பதை அந்தக் கடிதத்தில் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.
01.01.2021 முதல் 03.11.12021 வரை அரசாங்கம் வழங்...
3 ஆவது யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு 14,000 இற்கும் அதிகமான இலங்கைப் படையினர் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். இன்று 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இத்தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் 396 அதிகாரிகள், மற்றும் ஏனைய தரங்களைச் சேர்ந்த 8,110 பேர் இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப்படையின் 450 அதிகாரிகளும் 3361 வீரர்களும் தரமுயர்த்தப்பட்டுள்னனர்.
இலங்கைக் கடற்படையின் 74 அதிகாரிகள் மற்றும் 2,010 வீரர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர...
Alert news for EPFO account holders and Tips you can use to avoid a big loss in tamil: இபிஎஃப்ஓ அமைப்பு ஒரு சேவைக்காக எந்த பணத்தையும் டெபாசிட் செய்யும்படி உங்களை ஒருபோதும் கேட்காது.
இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தைப் பார்த்த பலரும் தங்களுடைய மூளையின் பவரையும் தங்களின் ஆளுமைத் திறனையும் சரிபார்த்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
புதுடில்லி: டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ...
லக்னோ: உத்தர பிரதேசத்தில், புதிய மதராசாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்துவது என அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி ஆட்சியின் ...
கொழும்பு முன்னாள் மேயரும் ஊவா மாகாண ஆளுநருமான ஏ.ஜே.எம்.முஸ்ஸம்மிலின் புதல்வி ஷாஸ்னா முஸ்ஸமில், பிரித்தானிய பிராந்திய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கொன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் Milton Keynes சபைக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கொன்சர்வேடிவ் கட்சி இந்த பிராந்தியத்தில் பின்னடைவை சந்தித்த போதிலும் அங்கு முதலிடத்தை பெற்று ஷாஸ்னா முஸ்ஸம்மில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஷாஸ்னா கார்டிஃப் மெட்ரோபோலிட்டன்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால்
நினைவுகூரப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த
மாணவனால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து மாணவர்கள், விரிவுர...
காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக
கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்படட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் நடந...
நீதி வேண்டி நிற்கும் தமிழர்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம் என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project) அமைப்பு தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான இன்று குறித்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project) அமைப்பு வெளியிட்ட அறிக்கை வருமாறு...
"சிறிலங்காவில் முழுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப...
முதல் அரசியல் கொலையை, 1959ல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பெளத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார். அதன்பின் பெளத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு எம்பியுமான மனோ கணேசன் ஆவேசமாக பேசியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கடுமையாக கூறியிருந்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,"இன்றைய தினங்களில், 2009 ஆண்டில் தமிழ் மக்கள், நூறு, ஆயிர, இலட்சக்கணக்கில், கொல்லப்ப...
காலிமுகத் திடலில் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்த கடந்த 9 ஆம் திகதி கொழும்புக்கு வந்ததாக கூறப்படும் பிரதேச சபை உறுப்பினர்கள் மூன்று பேர் மூன்று தினங்களுக்கு பின்னரே வீடுகளுக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் கொழும்பில் தங்கியுள்ளனர். போராட்டகாரர்கள் பதில் தாக்குதல் நடத்தி கொழும்பு பேர குளத்தில் தள்ளி விடப்பட்ட இந்த பிரதேச சபை உறுப்பினர்கள் மூன்று நாட்களுக்கு பின்னர், சடலத்தை எடுத்துச் செல்லும் மலர்ச்சாலைக்கு சொந்தமான வாகனத்தை தயார்படுத்தி வீடுகளுக...
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான பொது அஞ்சலி நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பகுதியில் உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கில் உள்ள பொது இடங்கள், பல்கலைகழகங்கள் என அனைத்து இடங்களிலும் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம் பெற்றது இது பற்றிய விரிவான செய்திகளையும்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று நாடாளுமன்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், இன்று தமது நாடாளுமன்ற உரையின்போது, இந்த அஞ்சலி நிகழ்வுக்கான அனுமதியை, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரிய நிலையில் அஞ்சலி நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பினர், முள்ளிவாய்க்காலில் இற...
"காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிடக்கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். அது இந்நாட்டின் விடுதலைக்கு வழிவகுக்கும்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,"மக்கள் பாதுகாப்பு கருதியே முன்னர் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அரசின் இரு...
Tamil Cinema Update : சினோகா கடைசியாக தமிழில் பட்டாஸ் என்ற படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு தற்போது சா பூ த்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Sara Tendulkars Reaction To Tim Davids Run-Out In Nail-Biter vs SRH is going Viral Tamil News: மும்பை அணியில் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு 46 ரன்கள் சேர்த்த டிம் டேவிட் பரிதமாக ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.
பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு கால கட்டத்திலும் எல்லோரும் அவரவர் சக்திக்கு மீறி எனது விடுதலைக்காக உழைத்துள்ளனர்.நேரடியாக அவர்களை சந்தித்து நன்றி சொல்லவேண்டும்” அத்துடன் இனிதான் நான் கொஞ்சம் காற்றை சுவாசிக்க வேண்டும் என தெரிவித்தார் பேரறிவாளன்.
30 ஆண்டு கால சிறை வாழ்க்கைக்கு பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செ...
32 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை இன்றைக்கு உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்...7 பேர் விடுதலையில் கழக அரசு முனைப்போடு செயல்படும் என்பது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 494-வது வாக்குறுதியாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மனிதாபிமான...
இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற வலியையும் வரலாற்றையும் தமிழினம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்ற நாளே இன்று(மே 18)இத்தனை ஆண்டுகள் உருண்டோடிப்போய் இருக்கின்ற தருணத்திலே இளையவர்களாக சிறுவர்களாக இந்த யுத்தத்தினுடைய சாட்சிகளாக எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
யுத்தத்தினுடைய சாட்சி என்பது அந்த இனத்தினுடைய வீரத்தை சொல்லும், அதேபோல் அவ்வினம் பட்டிருக்க கூடிய வலிகளை சொல்லும், அந்த இனம் எழுவதற்கான தங்களுடைய எண்ணங்களை சொல்லும் ஏனென்றால் அத்தனையும் ஒருசேரப...
நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாரஹேன்பிட்டி காவல்துறை போக்குவரத்து பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை சீராகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக குறுகிய காலத்திற்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு ...
2009 மே மாதம் எந்த மண்ணில் யுத்த வெற்றி கொண்டாட்டம் இடம் பெற்றதோ 13 வருடங்கள் கழித்து அதே மாதம் அதே மண்ணில் 2009 இறுதி யுத்தத்தில் இறந்தவர்களுக்கான நினைவுச்சுடரும் ஏற்றப்படிருக்கின்றது.
2009 இறுதியுத்தத்தின் போது மகிந்தவின் தலமையில் இருந்த சிங்கள இனவெறி அரசு மேற்குலக துணையுடனும் தடை செயப்பட்ட ஆயுதப் பிரயோகங்களுடனும் அப்பாவி தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்து விட்டு யுத்த வெற்றி எனும் பெயரில் கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக யுத்த வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடியது.
...