தாண்டிக்குடி மலைப்பகுதியில் உள்ள புல்லாவெளி அருவி ஆபத்து மிகுந்ததாக உள்ளது, இதுவரை 14 உயிர்களை காவு வாங்கிய நிலையில் புல்லாவெளி அருவியில் தவறி விழுந்து பரமக்குடியை சேர்ந்த இளைஞரை தேடும் பணி ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது.
மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டால், விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டுமென மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதில் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார்.வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் சத்வானி கூறும்போது, “முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அன்று ஒன்றிய அரசு, ஒன்றிய பிரதமர் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் இன்று இந்திய பிரதமர் என்கிறார். எல்லாம் பயம், பயம், என்று முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தி திணிப்பைத்தான் எதிர்கிறோமே தவிர, இந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என நாம் சொன்னதில்லை என இந்தி படத்தை வெளியீடுவது தொடர்பான கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
‘‘கே.பழனிசாமி பக்கம் டெண்டர் கம்பெனியை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருப்பவர்கள் தொண்டர் அணியை சேர்ந்தவர்கள் உள்ளனர், ’’ என்று ஓ.பன்னீர்செல்வம் அணி அதிமுக மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆமீர்கானின் லால்சிங் சத்தா திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ரூ.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேசமயம் அக்சய்குமாரின் படம் ரூ.3கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும் நிலையில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்
திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.
எனக்கு வந்த பாலிவுட் வாய்ப்புகளை நிராகரித்து விட்டேன். தமிழ், தெலுங்கில் சிறந்த கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன் என நடிகை கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் ஏற்றுவதற்காக பலர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்
மேட்டூர் அணையில் இருந்து, உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. வெள்ள அபாயஎச்சரிக்கை இருப்பதால் கரையோரங்களில் பொதுமக்கள் புகைப்படம், செல்ஃபி எடுப்பது, வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும், என பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, நேற்று முன்தினம் நெல்லித்துறை ஊராட்சி, குண்டுக்கல் துறை என்ற இடத்தில் பவானி ஆற்றின் திட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்
தமிழகத்தில் நெல் கொள்முதலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 40 கிலோ எடையும், தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 75 கிலோ எடையும் வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட மதுரப்பாக்கம் கிராமத்தில் ஏரி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 18 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 137 பேர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்
திருவாலங்காடு அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் அகற்றப்பட்ட நிலையில், பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாயாரின் வீட்டை அகற்ற அதிகாரிகள் வராததால் வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சித் தலைவரை கிராம மக்கள் நேற்று சிறைபிடித்தனர்
75-வது சுதந்திர தினவிழா ஆக. 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-ம் ஆண்டாக தேசியக் கொடி ஏற்ற உள்ளார்.