டெல்லி:ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் வரக்கூடியவர்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். அமைச்சரவை பரிந்துரையை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளனர
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி முருகன் (38) கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் ஜாமினில் எடுக்கவில்லை என்பதால் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ள
கேன்ஸ்: ‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கிய நிலையில், பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை என்று நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை குறிப்பிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியா சார்பில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் கமல்ஹாசன
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, மகிந்த ஆதரவாளர்
டெல்லி: பருத்தி விலையை முறைப்படுத்த இந்திய பருத்தி கவுன்சில் அமைக்கப்படும்: அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். ஜவுளி, வேளாண்மை, வர்த்தகம், நிதி, தொழில்துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள் பருத்தி கவுன்சில் இடம் பெறுவர். இந்திய பருத்திக்கழகம், பருத்தி ஆராய்ச்சி நிலைய பிரதிநிதிகளும் பருத்தி கவுன்சிலில் இடமளிக்கப்படும் எனவும் கூறினார். புதிதாக அமைக்கப்பட உள்ள இந்திய பருத்தி கவுன்சிலின் முதல் கூட்டம்
டெல்லி: பருத்தி நூல் விலை உயர்வை குறைக்கக் கோரி ஒன்றிய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். நூல் விலையை குறைக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் தமிழக எம்.பி.க்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்தனர். &nbs
சென்னை: இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழகம் சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளத
சென்னை: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன் என திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். அற்புதம்மாளின் 31 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை காட்சிப்படுத்துவது ரொம்பவே சவாலானது என அவர் தெரிவித்துள்ளார். &nbs
கொழும்பு: இலங்கையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உட்பட 4 பேருக்கு வரும் 25ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்டதாக 4 பேரும் கைது செய்யப்பட்டன
பாரிஸ்: இந்திய திரைப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளார். மேலும் கதை எழுதும் விதம் மற்றும் விநியோகம் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என நினைக்கிறேன் என கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளா
பாரிஸ்: உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது என ஒன்றிய அமைச்சர் அனுராத் தாக்கூர் கூறியுள்ளார். 2,200 திரைப்படங்களை பழைய நிலைக்கு மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் அனுராக் தாக்கூர் பேசியுள்ளா
சென்னை: சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்தித்து பேசி வருகிறார். பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன், ஆகியோர் முதலமைச்சர் சந்தித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் தனது விடுதலைக்காக அழுத்தமான வாதங்களை முன்வைத்ததற்கு பேரறிவாளன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார
பீஜிங்: சீன விமான விபத்தில் 133 பேரின் சாவுக்கு, அந்த விமானத்தின் விமானியே காரணம் என்றும், அவர் வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கி விபத்து ஏற்படுத்தியதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சீன போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 133 பேரும் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த தகவல், அனை
கொல்கத்தா: திரிணாமுல் பெண் எம்பி நுஸ்ரத் ஜஹான் மாயமானதாக அவரது தொகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான், தனது முதல் திருமணம், அப்புறம் பிரிவு, மற்றொருவருடன் குழந்தையை பெற்றுக் கொண்டது, பின்னர் இரண்டாவது கணவரை அறிமுகம் செய்தது என்று அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் அவரத
கவுகாத்தி: அசாமில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது. ரயில் பாதைகள் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்துவரும் கனமழையால் 26 மாவட்டங்களில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்தது. மீட்பு நடவ
ஹாலிவுட்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஹாலிவுட் நடிகை ஸாராவுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்ட நிலையில், அவரது கணவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் என பலரும் பாலியல் ரீதியான தொல்லை வழக்குகளில் சிக்குவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஸாரா, 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க
புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் அடைந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சுற்றுச்சூழல் மாசு குறித்து ‘தி லான்செட் பிளானெட்டரி ஹெல்த்’ என்ற பத்திரிகையில் வெளியிட அறிக்கையில், ‘கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக 23 லட்சம் பேர் அகால மரணம் அடைந்துள்ளனர். அதே சீனாவில் 22 லட்
திருமலை: சித்தூர் அருகே வீடுவீடாக ஆய்வுக்கு சென்றபோது, ‘தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி’ முதியவர் ஒருவர், அமைச்சர் ரோஜாவிடம் வைத்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க ஜெகன்மோகன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு முன்னோட்டமாக ‘ஜெகன் அண்ணா சொந்த வீட்டு கனவு திட்டம்’, ‘இலவச வீட்டுமன
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த திருநங்கையான நடிகை, காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் நடிகையின் காதலன் தலைமறைவாகி விட்டார். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஷெரின் ெஷலின் மேத்யூ (24). திருநங்கை. சில மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த சில வருடமாக கொச்சி களமசேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியி
ராமநாதபுரம்: சாயல்குடி இரவு ரோந்து போலீசாரை ஆயுதங்கள் மூலம் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலையில் அமர்ந்து மது அருந்துயதை தட்டிக்கேட்ட காவலர்கள் மீது ஆயுதங்களால் கடுமையாக தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன
சென்னை: கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை டெல்லி அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 263 பேருக்கு விசா வழங்கியதில் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத
சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்து அவரின் தாயார் அற்புதம்மாளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடல் மூலம் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளா
சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் நாளை காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். வெள்ளைத்துணியால் வாயை கட்டிக் கொண்டு நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை போராட்டம் நடத்தப்படும். காங்கிரஸ் கட்சியினர் முக்கிய இடங்களில் நின்று அறப்போராட்டம் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளா
சென்னை: பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். அன்று அம்மா விதைத்த விதைக்கு கிடைத்த பலனாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இன்று பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2014ம் ஆண்டில் ஏழு நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூளுரைத்தார் எனவும் கூறினார
குஜராத்: குஜராத் மாநிலத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மார்பி என்ற இடத்தில் நடந்த விபத்தில் சிக்கியுள்ள மேலும் 30 பேரை மீட்க்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறத
சென்னை: பேரறிவாளன் விடுதலை: காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள நீதியானது இந்த நாட்டின் நீதியமைப்பின் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பேரறிவாளனுக்கு கிடைத்துள்ள விடுதலையை முன்மாதிரியாக கொண்டு சிறையில் வாடும் மீதமுள்ள அறுவரையும் விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் போராட்டத்தை தொ
சென்னை: புரட்சித் தலைவி அம்மாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி என பேரறிவாளன் விடுதலை குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். நிகரற்ற தலைவர் புரட்சி தலைவி அம்மாவின் நிர்வாகம் துணிச்சல் மிகுந்தது என்பது மீண்டும் நிரூபணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர
மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றம் செய்ய சுகுமார் என்பவரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பாலமுருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbs