அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) அறிவித்துள்ளார்.
இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் (Minister of Defense) மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த விடயங்களை இன்று (3.12.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கான முயற்சி தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல்
என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas devananda) வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுக்கு டக்ளஸ் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்...
கிளிநொச்சி (Kilinochchi) - பளை பகுதியில் அமைந்துள்ள சந்தை தொகுதியானது அப்பகுதியில் உள்ள மக்களின் அன்றாட தேவையினை பூர்த்தி செய்யும் இடமாக காணப்படுகிறது.
குறித்த சந்தை தொகுதியில் பல வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் தங்களுடைய அன்றாட வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றனர்.இந்நிலையில் எமது ஐபிசி தமிழ் குழுவினர் தாயகத்தின் உள்ளூர் உற்பத்தியாளர்களை மட்டுமன்றி உள்ளூர் உற்பத்திகளுக்கான காலமாக காணப்படும் சந்தை தொகுதிகளை நோக்கி பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்..இதன் ஒ...
யாழ். (Jaffna) நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து நேற்று தடைப்பட்டிருந்த நிலையில் குறிகாட்டுவானில் இருந்து பயணிகள் குமுதினிப்படகு மூலம் இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்தனர்.
நேற்று (02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து புறப்பட தயாரான வடதாரகை படகு இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. மாற்று படகு சேவைதிருத்த வேலையினை முடித்து பயணத்தை தொடராலாம் என தெரிவித்திருந்த நிலையில்
உடனடியாக மாற்று படகு சேவையும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என
தெரிவிக்கப...
அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள் எதிர்காலத்தில் சிறைச்சாலைக்கு செல்லவேண்டி ஏற்படும் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Vidyarathna) தெரிவித்துள்ளார்.
ரிதிமாலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆட்சியைக் கவிழ்ப்பதாக கருத்து வெளியிடும் எதிர்கட்சிகளுக்கு வெளியே தெரியாவிடினும், அவர்களின் பணி தொடர்பான கோப்புகள் உள்ளிருந்த...
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது நாடாளுமன்ற வார சபை அமர்வு இன்றையதினம் (03.12.2024) சபாநாயகர் அசோக ரங்வல
(Ashoka Ranwala)தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாரு குறிப்பிட்டுள்ளார்....
யாழ்ப்பாணம் - பலாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தின் (Jaffna International Airport) ஊடாக
பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.இந்த அறிவித்தல் வடக்கு மாகாண (Northern Province) ஆளுநர் நா.வேதநாயகனால் (N. Vedanayagan) பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகள் அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் தகவல் வழங்குவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.வட...
மாகாண சபை முறையை தொடர்பில் ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்துக்கு, அநுர அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam )கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தின் இன்றைய(03.12.2024) அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்கு குறிப்பிட்டிருந்த விடயத்தைத் த...
மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ (Litro) நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இம்முறை எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப இந்த நாட்டில் எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட வேண்டும்.மக்களுக்கு நிவாரணம்ஆனால் மக்களுக்கு நிவாரணம் வழங்...
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (03.12.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 767,435 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அனைத்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விரைவில் வெளியிடப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கமைய ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து தேசிய பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக்...
மாகாண சபையை அகற்றியே தீருவோம் என்று ஒருதலைப்பட்சமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறுவது ஏற்புடையதல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்(mano ganesan) தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "மாகாணசபை என்பது வேறு. சம உரிமை என்பது வேறு என்பதை ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிந்துகொள்ள வேண்டும்.
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E A/L Exam) நாளை (04.12.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன...
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (02.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.38 ஆகவும் விற்பனைப் பெறுமதி 294.98 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360.47 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 374.51 ஆகவும் பதிவாகியுள்ளது.
விற்பனைப் பெறுமதி
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.49 ஆகவு...
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ (Nihal Thalduwa) பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, புதிய காவல்துறை ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளராக கே.பி.மனதுங்க ( K.P.Manatunga) நியமிக்கப்பட்டுள்ளார்.
மனதுங்க இதற்கு முன்னர் கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றியிருந்தார். கடுமையான விமர்சனங்கள்
காவல்துறை ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய காலத்தில் ஊடகவியலாளர்கள் கேட்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (Criminal Investigation Department - Sri Lanka) பணிப்பாளராக மகளிர் பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி எச்.டபிள்யூ.ஐ. இமேஷா முதுமால (H.W.I. Imesha Mudumala) நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதி காவல்துறைமா அதிபர்கள், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 54 பேருக்கு இன்றையதினம் (03.12.2024) இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேசிய காவல்துறை <...
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரித்தானிய - அமெரிக்க இராணுவத் தீவான டியாகோ கார்சியாவில்(Diego Garcia) கடந்த 03 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று பிரித்தானியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு பிரித்தானியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சி...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் (Parliament Election) போட்டியிட்டோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.அதன்படி, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேட்சைக் குழுக்களின் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவினங்களைக் க...
உணவு வழங்கவில்லை எனக் கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பருத்தித்துறை - கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் சில குடும்பங்களுக்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களில் சில குடும்பத்தினருக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிராம சேவையாளர் உணவு வழங்க மறுத்தமையால் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.மக்கள் போராட்டம்...
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஹம்மத் சாலி நளீம் (Muhammad Salih Naleem) நியமிக்கப்பட்டுள்ளார்.எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (Sri Lanka Muslim Congress (SLMC)) கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.
இதன்பட...
நாட்டில் எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசியை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.ஜனாதிபதிக்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையே நேற்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அரிசியை வழங்கும் வகையில் நாட்டில் களஞ்சிய வசதிகளை அ...
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு தொடர்பாக முன்னாள் அரசாங்கம் கடைப்பிடித்த வினைத்திறன் இல்லாத நடைமுறையையே தற்போதைய அரசாங்கமும் கடைப்பிடித்து வருவதாகக் கிராம சேவகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக அந்தச் சங்கத்தினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் அஸ்வெசும கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவின்போது, பிழையில்லாத பொறிமுறை ஒன்றை...
மின் கட்டணம் குறைப்பு சதவீதம் 35% முதல் 40% வரை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க (Sanjeewa Dhammika) தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அ...
இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (03.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புலம்பெயர் அமைப்புக்களை ஒரு பொருட்டாகவும் மற்றும் கருத்தில் எடுக்காமலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தூக்கி எரிந்துள்ளதாக பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களின் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறை என்பது அநுர அரசால் கையாள தி...
திருகோணமலையைச் (Trincomalee) சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதனபடிப்படையில், எதிர்வரும், நான்காம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளதாக அழைப்பு கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.அச்சுறுத்தும் செயல்
இந்தநிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய விசாரனையை பயங்...
யாழில் (Jaffna) வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தோரை தாக்க முற்பட்டு பின்னர் வீட்டை
விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது யாழ், பொன்னாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின்
பழைய மாணவர் சங்க கணக்கினை வெளிப்படுத்துமாறு பொன்னாலை பகுதியில் வசித்து
வரும் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவர் கோரிக்கை விடுத்து
வந்துள்ளார்.தொடர்ந்த...
சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு (Bandula Gunawardane) குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி ஐம்பது ரூபாவில் இருந்து இருபது ரூபாவாக குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள வரி வருமான இழப்பு தொடர்பில் வாக்குமூலம் ப...
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் (PTA) தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இரட்டைத் நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றம் சாட்டியது.
நேற்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய, தேசிய மக்கள் சக்தி முன்னர் நிராகரித்த சட...
அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது.
அதிக விலைபல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.