பிசிசிஐ ஒப்பந்தங்கள்: ரவீந்திர ஜடேஜா நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுடன் A+ பிரிவுக்கு உயர்த்தப்பட்டார், கே.எல் ராகுல் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
கொல்கத்தா : 2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இல்லம், ரவீந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதன் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறா
கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் ஹைதராபாத் விடுதலைக்காக பாடுபட்டவர்களை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந் துள்ளது. 149 நாட்களில் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,890-ஆக உயர்ந்துள்ளது.
டெபுடேஷனில் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
குடிமைப் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கு 15 மாதங்கள் ஆகிறது. இது நீண்ட நெடிய தேர்வு நடைமுறையாக உள்ளது. இதனால், மாணவர்களின் பொன்னான காலம் வீணடிக்கப்படுகிறது.
பஞ்சாப் போலீஸார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது அமைதியை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 353 பேரில் இதுவரை 197 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி மதுபான விற்பனை கொள்கை ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை பிறப்பித்த சம்மனை எதிர்த்து, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
தமிழகம் - குஜராத் இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பிணைப்பு இருக்கிறது என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி: ராகுல் காந்தியை மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். டெல்லி ராஜ்காட்டில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். குஜராத்தில் போராட வந்த காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகா
போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அறுதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் 15 ஆண்டுகால ஆட்சியை அகற்றி விட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 பேருடன் காங்கி
புதுடெல்லி: 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் 2023-24ம் ஆண்டுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கான ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2022-23
புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,890 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்ட
பிதார்: ஐதராபாத் விடுதலைக்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் மறந்து விட்டது என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் கோரட்டா கிராமத்தில் ஐதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவிடம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தை திறந்து வைத்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,‘‘ கடந்த 1948ம் ஆண்டு மே 9ம் தேத
புதுடெல்லி: ‘சவுராஷ்டிரா மக்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேயான ஆயிரம் ஆண்டு கால உறவை மீட்டெடுக்கும் வகையில் குஜராத்தில் அடுத்த மாதம் சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். அதன் 99வது நிகழ்ச்சிய
சண்டிகர்: அம்ரித் பால் சிங்குக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை பாட்டியாலா போலீசார் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினர் அண்மை காலமாக வெளிநாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 18ம
கொல்கத்தா: ‘மம்தா பானர்ஜி கடவுள் போன்றவர். பூசாரி கூட திருடன் ஆகலாம். ஆனால் கடவுள் ஒருபோதும் தவறு செய்ய முடியாது’ என மேற்கு வங்க மாநில அமைச்சர் சோபன்தேப் சட்டோபாத்யாய் பேசி உள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் தேர்வில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் பார்தா சட்டர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லக்னோ: ‘பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய கட்சிகளை தேசிய கட்சிகள் ஆதரிக்க வேண்டும்’ என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். உபி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரத்தில், காங்கிரசின் நடவடிக்கைகளுக்கு சமாஜ்வாடி ஆதரவு தெரிவிக்குமா, ராகுலுக்கு அனுதாபம் காட்டுமா என்பதல்ல கேள்வி. நாட்டின் ஜ
WPL 2023 Final: முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், டெல்லி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
SA vs WI Second T20: மேற்கு இந்திய தீவுகளுக்க இடையிலான டி20 போட்டியில், 259 ரன்கள் இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து எட்டி வெற்றிபெற்று வரலாற்று வெற்றியை தென்னாப்பிரிக்கா பெற்றுள்ளது.
வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதல் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதக் கொள்கைகள் தலைதூக்கின. இதையடுத்து அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம்
Nikhat Zareen Won Gold Medal: உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், வியட்னாம் வீராங்கனை ஙுயென் தி தம்மை வீழ்த்தி, இந்தியாவின் நிகத் ஜரீன் உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் தனது இரண்டாவது தங்கத்தை பெற்றார்.
சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் கான் குர்ஜர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தோட்டத்தில் கொக்கு வகையை சார்ந்த சாரசு கொக்கு என்றழைக்கப்படும் பறவை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்ததை அவர் பார்த்துள்ளார். அதனை மீட்ட அவர், உடல்நலன் தேர்ச்சி பெறவும் உதவியுள்ளார்.
ரோகித் சர்மாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கப்போகும் ஜோப்ரா ஆர்சர் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் முதன்முறையாக மும்பை அணிக்காக விளையாட இருக்கிறார்.