பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தெற்காசிய நாடுகளில் ஒருவித பதற்றம் நிலவி வருகிறது.
மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மரக்காணத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய 13 மணி நேர சோதனை முடிவு பெற்றது. இந்த தீவிர சோதனையில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தனது கடையை குறி வைத்து மாநகராட்சி அதிகாரிகள் பொருட்களை அள்ளிச் சென்றதாக திமுகவைச் சேர்ந்த திருநெல்வேலி மாநகராட்சியின் 15 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஜய் என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், தயவுசெய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும், மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் - கொல்கத்தா வழித்தடத்தில் செல்லும் 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி மீது நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே சந்திரசேகர் ராவ் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆட்சி அமைக்க தனது பக்கம் இழுக்க முயற்சிப்பதாக கர்நாடக துணை முதல்வரான டிகே சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மிக்ஜாம் புயல் கரையை கடப்பதை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வருகின்ற 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் மக்களுக்கு எந்த நோயும் ஏற்படவில்லை. சிலர் வீண் வதந்திகள் பரப்பி வருகின்றனர். அதனை மக்கள் நம்ப வேண்டாம் எனவும், ஆலையில் நீண்டகாலமாக பணியற்றிய பணியாளர்கள் தங்களது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை இன்று வெளியிட்டனர்.
விவசாய நகை கடனை ரத்து செய்யாமல் அலைக்கழித்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஏரியை ஒரே நாள் இரவில் திறந்து சென்னையையே மூழ்கடித்த கேவலமான நிர்வாகத்தை கொடுத்த அதிமுகவுக்கு மழையை பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
மிக்ஜாம் புயல் காரணமாக அதிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் மிக முக்கிய பிரபலமாக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டோடு இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை தேவைப்படும் என மருத்துவமனை வெளியிட்டு இருந்த அறிக்கையை தொடர்ந்த திரை பிரபலங்கள் இப்போது கேப்டனை நேரில் சந்திக்க விரைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னையில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் குறித்து தேவசம்போர்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரவணை பாயாசத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கார்த்தியின் நடிப்பில் அமீரின் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இருப்பினும் இப்படத்தை பற்றி பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் இருந்து வருகின்றது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பருத்திவீரன் படத்தில் விஜய்யை இளைய எம்.ஜி ஆர் என குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தான் தற்போது செம வைரலாகி வருகின்றது