இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்துக்குப் பிறகு முதன்முதலாக தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கடந்த டிசம்பர் 30 அன்று உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா். உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது.
கடந்த மாதம், முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். அவருடனான ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் நேர்காணல் எடுத்தது.அதில் இப்போது எப்படி இருக்கிறது, தினமும் என்ன செய்கிறீர்கள், கிரிக்கெட்டை எவ்வளவு மிஸ் செய்கிறீர்கள், உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்கிறீர்கள் போன்ற கேள்விகளை கேட்டதற்கு ரிஷப் பந்த் கூறியதாவது:
முன்பை விடவும் தற்போது நன்றாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து அட்டவணையின்படி பிசியோதெரபிஸ்ட் சொல்வதுபடி உடற்பயிற்சி பின்பு ஓய்வு பின்பு 2வது செஷன், 3வது செஷன் என இடைவிடாமால் செய்கிறேன். அடிக்கடி பழங்கள், நீராகாரம் எடுத்துக் கொள்கிறேன். நான் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறேன் என்பதை சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த நேரத்தில்தான் நான் வாழ்க்கையில் ஒன்று கற்றுக் கொண்டேன். காலையில் எழுந்து பல் துலக்கும்போது கூட மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் இதையெல்லாம் சாதாரணம் என கடந்து சென்றுவிடுகிறோம். உண்மையில் இது பொக்கிஷம் என்பதை விபத்திற்குப் பிறகே உனர்கிறேன்.
கிரிக்கெட்டை மிகவும் மிஸ் செய்கிறேன். விரைவில் நலமடைந்து விளையாட காத்திருக்கிறேன். எனது ரசிகர்களுக்கு இந்திய அணிக்கும், ஐபிஎல்லில் தில்லி அணிக்கும் உங்களது ஆதரவினை தெரிவியுங்கள். உங்களது அன்பினால் நான் விரைவில் நலமடைவேன்.
நடிகை சமந்தா தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை. திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
யசோதா திரைப்படம் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது. சாகுந்தலம் ஏப்.14ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் ரூஸோ சகோதரர்கள் இயக்கும் எபிசோடில் சமந்தா, வருண் தவானுடன் ‘சிட்டாடல்’ தொடரிலும் நடித்து வருகின்றனர். பிரியங்கா சோப்ரா இந்த தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
அதில் அவரது கைகளில் ரத்த காயங்கள் உள்ளது. அந்தப் புகைப்படத்திற்கு ‘சண்டைக்காட்சிகளின்போது கிடைத்த வெகுமதி’ என தலைப்பிட்டுள்ளார். இந்த காயம் வருண்தவானுடன் நடிக்கும் ‘சிட்டாடல்’ எனும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட இந்தியாவில் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து படக்குழு செர்பியா, தென்னாப்பிரிக்கா சென்று படப்பிடிப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்துப் பேசினார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்துப் பேசினார். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இல்லத்தில் பாஜக பிரமுகர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி அம்மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் பண்டி, தருண் சுங் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி அவரது மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி அவரது மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் இளைய மகளான ஜான்வி கபூர் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தமிழில் வெற்றிபெற்ற கோலமாவு கோகிலா பட ஹிந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரியில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடித்திருந்தார். இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சில ஹிந்தி படங்கள் சுமாரான வெற்றியைத் தந்தன.
இதையும் படிக்க: ஆகஸ்ட் 16,1947 படத்தின் முதல் பாடல் வெளியீடு...
இதற்கிடையே, தமிழில் ஜான்வி கபூர் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் பரவி வந்தது. இத்தகவலை மறுக்கும் விதமாக ஜான்வி கபூர் இதுவரை எந்தத் தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள்(பிப்.24) நெருங்க உள்ளதால் ஜான்வி கபூர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘அம்மா..இப்போதும் அனைத்து இடங்களிலும் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் உன்னை பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன். எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் அது துவங்குவதும் முடிவதும் உன்னால்தான்..’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ரோஹிணி குழந்தையுடன் பேசும் விடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன்.
பிரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்தப் படம் வெளியாக உள்ளதால் இதில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமாக நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: முகநூல் பதிவு எதிரொலி: மூத்த நடிகரின் சம்பள பாக்கியை அளித்த பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்
சிவகாரத்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சீன்னா...சீன்னா’ பாடல் வெளியானது.
மோகோபாட் காமிரா இதற்குமுன் விஜய்யின் பீஸ்ட், கமல் ஹாசனின் விக்ரம், அஜித்தின் துணிவு படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்த்தி நடித்துவரும் ஜப்பான் படத்திலும் இது பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் படத்திலும் இந்த மோகோபாட் காமிரா பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் விடியோ வெளியானது.
இதையும் படிக்க: பகாசூரன் படத்திற்காக திரையுலகினரின் பாராட்டை அள்ளும் செல்வராகவன்!
இந்தப்படத்தில் ஆர்ஜே ரோஹிணியும் நடித்துள்ளார். இவர் ஏற்கனவெ எல்கேஜி, இப்படை வெல்லும், கந்தசாமி படங்களில் நடித்துள்ளார். இவரது குழந்தையுடன் சிவகார்த்திகேயன் க்யூட்டாக பேசியுள்ளார்.
இதையும் படிக்க: பதான் ரூ.1,000 கோடி வசூல்!
நடிகை ரோஹிணி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “குழந்தைகளின் உரையாடல்களை புரிந்து கொள்வதில் வல்லவர். எனது குழந்தை சிவகார்த்திகேயனிடம் அன்பான நேரத்தை செலவிட்டாள்” என கூறியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
SK has d most Understanding skills from Kids conversation. My Daughter had a lovely time tq SK ji @Siva_Kartikeyan @SKfanatics @SKFans_Team #Sivakarthikeyan #SivaKartikeyan #maaveeranfirstsingle pic.twitter.com/wK4spk4UqE
— RJ Rohini (@rohicutey) February 20, 2023
ஏகே 62-ல் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏகே 62-ல் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்த துணிவு திரைப்படம் ஜன.11ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் சில பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து அஜித் விலகுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
ஆனால், விக்னேஷ் சிவன் தன் டிவிட்டர் பக்கத்தில் ஏகே 62 பற்றிய தகவலை நீக்கியதும் அவர் படத்திலிருந்து விலகியது உறுதியானது.
இதையும் படிக்க: பதான் ரூ.1,000 கோடி வசூல்!
அவருக்கு பதிலாக ‘கலகத்தலைவன்’ படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் அஜித் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ’ஏகே 62’ படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியாகியுள்ளதாகவும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர்கள் அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோருடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அருண் விஜய் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் குமாருக்கு வில்லனாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அரசியலுக்குள் எப்போது நுழைவீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை கங்கனா ரணாவத் டிவிட்டரில் பதிலளித்துள்ளார். அரசியலுக்குள் எப்போது நுழைவீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை கங்கனா ரணாவத் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.
பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் கங்கனா ரணாவத். தமிழில் தாம்தூம் மூலம் அறிமுகமான இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுகளை பெற்றார்.
தற்போது தமிழில் சந்திரமுகி 2 படத்திலும், ஹிந்தியில் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எமர்ஜென்சி திரைப்படத்தை கங்கனாவே இயக்கி வருகிறார்.
இதையும் படிக்க | பதான் ரூ.1,000 கோடி வசூல்!
இதற்கிடையே, அவ்வப்போது அரசியல் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடும் கங்கனா சர்ச்சையில் மாட்டிக் கொள்வதும் உண்டு.
இந்நிலையில், டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு கங்கனா பதிலளிக்கையில், ‘அரசியலுக்குள் எப்போது நுழைவீர்கள்?’ என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த கங்கனா, அதை நான் உறுதியாக சொல்ல முடியாது. கலைக்காக இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியது உள்ளது என பதிலளித்திருந்தார்.
மேலும், சினிமா சார்ந்து ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு டிவிட்டரில் கங்கனா பதிலளித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணான கண்ணே சீரியல் நவம்பர் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் மற்றும் ராகுல் ரவி மற்றும் பப்லு ப்ரிதிவிராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தத் தொடர் தெலுங்கு தொலைக்காட்சி தொடரான பௌர்ணமியின் ரீமேக் ஆகும்.
இதையும் படிக்க | செம்பருத்தி நாயகியின் புதிய சீரியல் மிஸ்டர் மனைவி
கண்ணான கண்ணே என்ற முகப்பு பாடலுக்கு ஜி கே வி என்பவர் வரிகள் எழுத பிரபல பாடகி சித்ரா என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு சாம் என்பவர் இசை அமைத்துள்ளார்.
தந்தை - மகள் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சில நாள்களுக்கு முன்னர், 700வது எபிசோடை எட்டியதாக சீரியல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | அபியும் நானும் - சீசன் 2 வேண்டும்: ரசிகர்கள் ஆர்வம்!
இந்த நிலையில் கண்ணான கண்ணே சீரியல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரோஜா தொடர் நிறைவடைந்த நிலையில், கண்ணான கண்ணே தொடர் நிறைவடைவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பிரபல ஹிந்தி நடிகை ஆலியா பட் தனது புதிய நண்பரை அறிமுகப்படுத்தியுள்ளார். ஹிந்தியில் பிரபலமான ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொணடனர். இருவரும் இணைந்து பிரம்மாஸ்திரா படத்தில் நடித்து வந்தனர். இப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் மாதம் வெளியானது. பிறகு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
நவம்பரில் குழந்தையும் பிறந்தது. ராஹா எனும் பெயரை வைத்தனர். தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். கங்குபாய் கைத்யவாடி திரைப்படத்தில் நடித்ததற்காக ஆலியாவிற்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிக்கைக்கான விருது கிடைத்தது. ரன்பீர் கபீருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. அவருக்கு பதிலாக ஆலியாவே அந்த விருதினையும் பெற்றார்.
தற்போது ஹார்ட் ஆஃப் ஸ்டோன் எனும் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று விருது பெற்றவுடன் இன்ஸ்டாகிராம் தன்னுடைய புதிய நண்பர் என்று தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
A post shared by Alia Bhatt
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் lsquo;கேப்டன் மில்லர் rsquo; திரைப்படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார்.
இதையும் படிக்க: அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்?
1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாகிவருகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களான ராக்கி, சாணிக் காயிதம் படங்களைப் போல் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்சன் படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், கேப்டன் மில்லரை இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாகக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கானின் பதான் திரைப்படம் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கானின் பதான் திரைப்படம் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.
பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இதையும் படிக்க: ’எல்லாமே உனக்காக அம்மா..’: ஜான்வி கபூர் உருக்கம்
இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் இத்திரைப்படம் ரூ.1,000 கோடியை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆயிரம் கோடி வசூலித்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்கிற சாதனையை ‘பதான்’ பெற்றுள்ளது.
முன்னதாக, இப்படம் இந்தியாவில் ரூ.630 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#Pathaan hits 1000 crores worldwide Book your tickets here: https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBjCelebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/CshkhHkZbd— Yash Raj Films (@yrf) February 21, 2023
நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் ஒன்றாக காரில் பயணம் செய்யும் விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். 2019இல் அவரது அருவம் படம் வெளியானது.தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார்.
அதிதி ராவ் ஹைதரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களும் பலர் நடிகர் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்தனர். சித்தார்த் கூறிய வாழ்த்து செய்தி மட்டும் சமூக வலைதளங்களில் வைரலானது.
சித்தார்த்துக்கு பல நடிகைகளுடன் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் தற்போது அதிதி ராவுடன் காதல் இருப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அந்த பதிவில் சித்தார்த், “இதய ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களது சிறிய, பெரிய அனைத்து விதமான கனவுகளுக்குமாக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எழுதி இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு இருந்தார். இதனால் இருவரும் காதலிக்கிறார்களோ என சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் மும்பை ஹோட்டலில் உணவருந்திவிட்டு ஒன்றாக காரில் ஏறும்போது எடுக்கப்பட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில் சித்தார்த் மட்டும் முககவசம் அணிந்துள்ளார். ஆனாலும் அது அவர்தானென நன்றாகவே தெரிகிறது. இதனால் இருவரும் காதலிப்பது உறுதியென ரசிகர்கள் கமெண்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெறும் டேட்டிங்காக கூட இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்த ஜோடிகள் இதுகுறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
A post shared by @varindertchawla
பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்தாண்டு அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-வது முறையாக தொகுத்து வழங்கினார்.
இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் அஷீம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டி முடிவடைந்து ஒரு மாதமாகும் நிலையில், மகேஸ்வரியின் வீட்டிற்குச் சென்ற சக போட்டியாளர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
செரினா, ரச்சிதா, விக்ரமன், அசல், செரினா, ஏடிகே, ராம், சிவின் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மகேஸ்வரி பதிவிட்டுள்ளார்.
மற்றொரு புகைப்படத்தில் சிவின், மகேஸ்வரி, ரச்சிதா மற்றும் செரினா மட்டும் உள்ளனர்.
மகேஸ்வரி இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அஷீம், மணிகண்டா, தனலட்சுமி, ஆயிஷா, மைனா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிகின்றது.
இந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பிக் பாஸ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மாறுபட்ட குணம் கொண்ட இரு இதயங்கள் காதலில் இணைந்து அவர்கள் சந்திக்கும் சூழல்களை அடிப்படையாக வைத்து #39;மிஸ்டர் மனைவி #39; என்ற தொடர் அமைக்கப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் மிஸ்டர் மனைவி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகை ஷபானா ஷாஜஹான். இவர் இதற்கு முன்பு விஜயதசமி எனும் தொடரில் நடித்துள்ளார். எனினும் செம்பருத்தி தொடரில் பார்வதி என்ற முதன்மை பாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர் கூட்டத்தை ஈர்த்தவர்.
செம்பருத்தி தொடர் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இந்தத் தொடர் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளது.
படிக்க | அடுத்த வாரம் முதல் புதிய தொடர்: சித்தி -2 வெண்பா நடிக்கும் மலர்
இந்தத் தொடருக்கு அடுத்தபடியாக ஷபானா எந்த தொடரில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள மிஸ்டர் மனைவி என்ற பாத்திரத்தில் அவர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள மிஸ்டர் மனைவி தொடரின் முன்னோட்ட விடியோ மூலம் இது உறுதியாகியுள்ளது.
இந்தத் தொடரில் ஷபானாவுக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடிக்கிறார். தெலங்கானாவைச் சேர்ந்த இவர், தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்துள்ளார். முதல்முறையாக தமிழ் சின்னத் திரையில் அறிமுகமாகிறார்.
படிக்க | சன் டிவியின் பிரபல சீரியல் நிறைவடைகிறது?
மாறுபட்ட குணம் கொண்ட இரு இதயங்கள் காதலில் இணைந்து அவர்கள் சந்திக்கும் சூழல்களை அடிப்படையாக வைத்து மிஸ்டர் மனைவி என்ற தொடர் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தொடர் எப்போதுமுதல் ஒளிபரப்பாகும் என்ற தகவலை சன் தொலைக்காட்சி விரைவில் அறிவிக்கும்.
ஜீ தமிழுக்கு அடுத்தபடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஷபானா நடிக்கவுள்ளதால், மிஸ்டர் மனைவி தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படிக்க | எத்தனை தொடர் வந்தாலும்.. எதிர்நீச்சல் சீரியலுக்கு குவியும் பாராட்டு!
பத்து தல திரைப்படத்தின் புரோமோ விடியோ குறித்து இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார்.
பத்து தல திரைப்படத்தின் புரோமோ விடியோ குறித்து இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.
கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
இதையும் படிக்க: ’கேப்டன் மில்லர்’ வெளியீடு எப்போது?
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்நிலையில், இப்படத்தின் புரோமோ விடியோ ஒன்றை படக்குழு உருவாக்கி வருகிறார்கள். இதில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.
இதனை மறுக்கும் விதமாக இயக்குநர் கிருஷ்ணா ‘புரோமோ விடியோவில் நடிகர் சிம்பு நடிக்கவில்லை. நாங்கள் திட்டமிட்டே இந்த ஐடியாவில் புரோமோ விடியோவை எடுத்து வருகிறோம். அவருடையப் பெயரை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். பத்து தல படத்தின் விளம்பர புரோமோஷன் குறித்து தயாரிப்பாளர்களுக்கு தெளிவான யோசனை உள்ளது. நாங்கள் வெறுப்புப் பேச்சை வெறுக்கிறோம்’ என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Dear all , just want to make it clear, our original idea itself not to bring @SilambarasanTR_ in our promo video as per our strategy so, don’t abuse his name for no reason our producer @kegvraja @StudioGreen2 has clear idea about promotion of #PathuThala We hate ,hate speech
— Obeli.N.Krishna (@nameis_krishna) February 21, 2023
அக்கா, தங்கையின் பாசத்தை அடிப்படையாக வைத்து புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் அக்கா, தங்கையின் பாசத்தை அடிப்படையாக வைத்து புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
மலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சித்தி -2 தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்த பிரீத்தி ஷர்மா நடிக்கிறார்.
படிக்க | செம்பருத்தி நாயகியின் புதிய சீரியல் மிஸ்டர் மனைவி
சன் தொலைக்காட்சியில் அதிக எண்ணிக்கையில் சின்னத் திரை தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பிரைம் டைம் என சொல்லப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். எனினும் நண்பகல் நேரத் தொடர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
அந்தவகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் மலர் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. அக்கா - தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இந்தத் தொடரில் சித்தி -2 தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்த பிரீத்தி ஷர்மா நடிக்கிறார்.
படிக்க | எத்தனை தொடர் வந்தாலும்.. எதிர்நீச்சல் சீரியலுக்கு குவியும் பாராட்டு!
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர், தமிழ் சின்னத் திரை தொடர்களில் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் நடித்து வருகிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் அனிதாவாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் சித்தி–2 தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அவர் தற்போது மலர் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் நிவிஷா, அக்னி, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படிக்க | சன் டிவியின் பிரபல சீரியல் நிறைவடைகிறது?
இந்தத் தொடரை ஜவஹர் கான் இயக்குகிறார். பிப்ரவரி 27ஆம் தேதி முதல் பிற்பகல் 3 மணிக்கு மலர் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
rsquo;ஜாக்சன் துரை rsquo; படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’ஜாக்சன் துரை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபி சத்யராஜ், சத்யராஜ், பிந்து மாதவி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான காமெடி பேய்ப் படமான ஜாக்சன் துரை சுமாரான வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: ’சிம்புவை இழுக்காதீர்கள்..’: கோரிக்கை வைத்த ‘பத்து தல’ இயக்குநர்
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய தரணிதரன் இந்தப் பாகத்தையும் இயக்குகிறார். சிபி, சத்யராஜ், சம்யுக்தா உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர்.
Happy to join hands with Appa and my Lucky team again for..JACKSON DURAIThe Second ChapterBIGGER AND STRONGER!Written and directed by@Dharanidharanpv Produced by@SriGreen_Offl #Sathyaraj @samyukthavv@sidvipin #JDsecondchapter pic.twitter.com/GcD94hoOQK— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) February 20, 2023
பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜின் lsquo;கடுவா rsquo; திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் மலையாளத்தில் வெளியான பிருத்விராஜின் ‘கடுவா’ திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. ஷாஜி கைலாஸ் இயக்கிய இந்தப் படத்தில் சம்யுக்தா நாயகியாக நடித்திருந்தார். ஓடிடியிலும் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலானது குறிப்பிடத்தக்கது.
90களில் நடைபெறும் கதை. பிருத்விராஜ் (வியாபாரி) மற்றும் விவேக் ஓபராய் (காவல்துறை அதிகாரி) இருவருக்கும் இடையே நடைபெறும் ஈகோ கதையாக உள்ளது. தமிழ் ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து படக்குழு தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளது.
இந்தத் திரைப்படம் மாரச் மாதம் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அல்போன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘கோல்டு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்னர் வெளியான ‘காப்பா’ திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் கடுவா திரைப்படம் அவருக்கு மீண்டும் நல்ல பெயரினை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷின் 50-வது படத்திற்கான இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்.17ஆம் தேதி திரையரங்களில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தற்போது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும் தனுஷ் மீண்டும் இயக்குநராக புதிய படத்தினை இயக்குவார் எனத் தகவல் வெளியானது.
சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.
முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மரியான், ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் lsquo;தங்கலான் rsquo; படத்தில் ஆங்கில நடிகர் இணைந்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாக வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் பார்வதி நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு தற்போது கே.ஜி.எஃப்பில் நடைபெற்று வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ’தி பியானோ’ திரைப்படத்தில் நடித்தவர்.
நடிகர் விகரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இவரை அறிமுகப்படுத்தியுள்ளார். வேட்டைக்காரனை தங்கலான் படப்பிடிப்பிற்கும் சமூக வலைதளத்திற்கும் வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
நடிகை தமன்னாவின் உடற்பயிற்சி விடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு புகழை தந்தது. தற்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பல்வேறு பிரபல நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
தற்போது போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவுயுடன் நடித்து வருகிறார். தமன்னா எப்போதும் உடலை சரியாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பவர். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர். குர்துண்ட சீதாகாலம் பட நடிகை தமன்னாவில் உடற்பயிற்சி விடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார். இதில் தமன்னா இதயம் மற்றும் உடலை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை செய்கிறார். அவரது அழகுக்கு இந்த தொடர் உடற்பயிற்சிதான் காரணமென ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Monday Motivation @tamannaahspeaks #Tamannaah #tamannaahbhatia #TamannaahBhatia #TamannaahSpeaks #tammu #tammy #TamannahBhatia #TamannahBhatiahot #LatestTamannaah #tamanna #tamannah #workout #gymlife #fitness #LadyMegaStarTamannaah pic.twitter.com/1QQlXUr41B
— ♥️Sneha Tamannaah
துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது.
இதையும் படிக்க: ‘தங்கலான்’ படத்தில் இணைந்த ஆங்கில நடிகர்!
தற்போது, சீதா ராமம் வெற்றியைத் தொடர்ந்து கிங் ஆஃப் கோதா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். இந்தப் படமும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ‘தமன்னாவின் அழகுக்கு இதுதான் காரணமா?’- வைரலாகும் உடற்பயிற்சி விடியோ!
கிங் ஆஃப் கோதா திரைப்படம் 2023, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக துல்கர் தனது இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதில் காரைக்குடிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)
துணிவு திரைப்படத்தின் rsquo;சில்லா சில்லா rsquo; பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.
துணிவு திரைப்படத்தின் ’சில்லா சில்லா’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் குமார் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ படப்பிடிப்பு நிறைவு!
மேலும், இப்படம் பிப்.8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்நிலையில், துணிவு படத்தின் ‘சில்லா..சில்லா’ பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
தமிழில் வரவேற்பைப் பெற்ற விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக் துவங்கியுள்ளது.
தமிழில் வரவேற்பைப் பெற்ற விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக் துவங்கியுள்ளது.
தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான படம் விநோதய சித்தம். விமர்சன ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து சமுத்திரக்கனி ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. சமுத்திரக்கனி இயக்கும் இந்தப் படத்தில் பவன் கல்யாணுடன் அவரது சகோதரி மகனும் நடிகருமான சாய் தரம் தேஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதையும் படிக்க | ’சில்லா..சில்லா’ துணிவு பாடல் விடியோ வெளியீடு
விநோதய சித்தம் திரைப்படம் உயிரிழந்த ஒருவர் தனக்கு சில கடமைகள் இருப்பதாகக் கடவுளிடம் அனுமதிவாங்கி மீண்டும் உயிர் பெற்றுவருவது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். தெலுங்கில் சமுத்திரக்கனி வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா வேடத்தில் சாய் தரம் தேஜும் நடிக்கவிருக்கின்றனர்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கினாலும் வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை.
இதையும் படிக்க: அனுஷ்காவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்..
குறிப்பாக, இப்படம் ரூ.300 கோடி வரை வசூலித்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.
மேலும், அமேசான் பிரைம் தளத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஹிந்தியிலும் இப்படம் வெளியாகிறது.
நடிகை அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. தமிழில் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சிங்கம், வானம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
முக்கியமாக, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் பெரிதாக பிரபலமடைந்தார்.
ஆனால், இஞ்சி இடுப்பழகி என்கிற படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை அதிகரித்து நடித்தார். அப்படம் தோல்வியடைந்தது. அதன்பின், அதிகரித்த உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால், பல பட வாய்ப்புகளையும் இழந்தார்.
இதையும் படிக்க: ’விநோதய சித்தம்’ தெலுங்கு ரீமேக் துவக்கம்
இந்நிலையில், அதிக உடல் எடையுடன் வயதான தோற்றத்தில் அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதனைக் கண்ட அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ்(42) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ்(42) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
சுபி சுரேஷ் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில மலையாளப் படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
சின்னதிரையில் தொகுப்பாளினியாக இருந்து வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகையாகப் பயணித்தவர். நகைச்சுவையுடன் இவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்தது.
அவரின் நகைச்சுவைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதன்மூலம் சுபி சுரேஸுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன.
2006-ம் ஆண்டு இயக்குனர் ராஜசேனன் இயக்கத்தில் உருவான கனக சிம்ஹாசனம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனது என்ட்ரியை பதிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து பஞ்சவர்ண தந்தை, ஆண்குட்டி, ட்ராமா என 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
படிக்க: ஓடிடியில் வெளியானது ‘வாரிசு’
எர்ணாகுளம், திரிபுனித்துராவில் பிறந்த இவர் சினிமாலா என்று நகைச்சுவைத் தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
சமீப காலமாக கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் மறைவு மலையாள திரையுலகத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயனின் lsquo;ஜலபுல ஜங்கு rsquo; பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் ‘ஜலபுல ஜங்கு’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜலபுல ஜங்கு’ பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூப் தளத்தில் 10 கோடி(100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியானது ‘வாரிசு’
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடி வசூலித்து வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.
#39;துணிவு rsquo; திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
துணிவு’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் குமார் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ‘காலம் தப்பி பிறந்துவிட்டேன்; இருந்தாலும் சம்யுக்தாவை காதலிக்கிறேன்’- இயக்குநர் பாரதிராஜா!
மேலும், இப்படம் பிப்.8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்நிலையில், துணிவு தமிழ், ஹிந்தி ஆகியவை நெட்பிளிக்ஸில் உலகளவில் ஆங்கில மொழி அல்லாத பிரிவில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
#BREAKING: For the first time, an Indian movie gets two spots "Within Top 5" of @netflix s Global Top 10 Non-English weekly charts..
Actor #AjithKumar s #Thunivu (Tamil) at No.3 and #Thunivu (Hindi) at No.4 for the week of Feb 6th - Feb 12th.. pic.twitter.com/bvXFEmX2Dz
— Ramesh Bala (@rameshlaus) February 15, 2023
lsquo;ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைப் (எஃப்டிஏ) பொருத்தவரை, அதில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டியிருப்பதால் ஒப்பந்தம் இறுதி செய்ய நீண்ட நாள்கள் ‘ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைப் (எஃப்டிஏ) பொருத்தவரை, அதில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டியிருப்பதால் ஒப்பந்தம் இறுதி செய்ய நீண்ட நாள்கள் ஆக வாய்ப்புள்ளது’ என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இந்திய வா்த்தகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பு சாா்பில் மும்பையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ‘ெட்னோடெக்ஸ்’ என்ற ஜவுளி தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:
தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரண்டு-மூன்று நாடுகளுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வருவதோடு, ஐரோப்பிய யூனியனுடனும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் விரைவில் நல்ல செய்தி வரும்.
அதே நேரம், ஐரோப்பிய யூனியனைப் பொருத்தவரை அதில் இடம்பெற்றிருக்கும் 27 நாடுகளுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்பதால், அதனுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதியாவது நீண்ட நாள்கள் ஆவதற்கு வாய்ப்புள்ளது என்று அவா் கூறினாா்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டது. பிரிட்டன், இஸ்ரேல், கனடா போன்ற நாடுகளுடன் இதற்கான பேச்சுவாா்த்தையை இந்தியா தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அவா் மேலும் கூறுகையில், ‘ஜவுளி துறையில் தொழில்நுட்ப ஆராய்ச்சி இயக்கத்தின் கீழ் மத்திய அரசு ரூ. 1,400 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், ஜவுளி துறை சாா்ந்த ஆராய்ச்சி மேம்பாடு தொடா்பாக ரூ. 250 கோடி மதிப்பு அளவிலான விண்ணப்பங்கள் மட்டும மத்திய அரசிடம் வந்துசோ்ந்துள்ளன. எனவே, ஜவுளி நிறுவனங்கள் இதற்கான முயற்சியை தீவிரப்படுத்துவது அவசியமாகும்.
ஜவுளி துறையைப் பொருத்தவரை கைத்தறி ஜவுளி வா்த்தகத்தில் மட்டுமின்றி தொழில்நுட்பம் சாா்ந்த உற்பத்தி வணிகத்திலும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, இத்துறையில் முதலீடுகளை நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் தற்போதைய 10 முதல் 12 சதவீத அளவிலான இந்திய சந்தை வேகமான வளா்ச்சியைப் பெற முடியும். ரூ. 1.82 லட்சம் கோடியாக உள்ள இந்திய ஜவுளித் துறை வரும் 2047-இல் ரூ.10.34 லட்சம் கோடியாக உயா்த்துவதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். இதற்கு, நிறுவனங்கள் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இந்தத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக திறன்மிக்க தொழிலாளா்கள் குறைந்துவருவதைக் கருத்தில் கொண்டு, 2 லட்சம் பேருக்கு ஜவுளி தொழில்நுட்ப நிபுணா்கள் உதவியுடன் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க இரண்டு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது என்று கூறினாா்.
மேலும், நீடித்த மற்றும் சுழற்சி பொருளாதாரத்தில் கவனம் செலுத்த ஜவுளி துறையினரைக் கேட்டுக்கொண்ட மத்திய அமைச்சா், எதிா்க் கட்சியினரின் விமா்சனங்களை சுட்டிக்காட்டி, ‘பிரதமா் நரேந்திர மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களால் செய்யப்பட்ட மேலாடையை அணிவதற்கும், பிரபல ஆடை வடிமைப்பாளா் லூயிஸ் வியூட்டன் வடிவமைத்த உயர்ரக காலா் அணிவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை மறைமுகமாக சாடினாா்.
இந்தியா உயா் வளா்ச்சியை அடைந்து வருவது உலகில் பல நாடுகளை கவலையடையச் செய்திருக்கிறது. இதனைத் தடுக்கவும் அவா்கள் முயற்சிக்கின்றனா் என்றும் அவா் கூறினாா்.