இளையராஜாவுக்கு இந்திய அரசு ஏற்கெனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்து இருக்கிறது. அந்தவகையில் இப்போது அவரை ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக அறிவித்து மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.
“ஒருசிலரின் அரசியலுக்கு அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? சிலரின் சுய விருப்பு, வெருப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இது போன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? சொந்த வீட்டிற்கே சூன்யம் வைத்து விட்டீர்களே” என்று வி.கே சசிகலா வேதனை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும். பொதுக்குழுவில் இ.பி.எஸ் நினைப்பது நடக்கும் என்று வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து தெரிவித்துள்ளார்.
Political commentator savukku shankars Twitter account has been suspended Tamil News: அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதளத்தை நடத்தி வருபவருமான பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்க கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, “இந்தியாவில் 2 பெரிய அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள், ஒன்று மோடி, இரண்டு அமித்ஷா, கருவறுத்துவிடுவார்கள்” என்று எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை தெரிவித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே ஒற்றைத் தலைமைக்கான மோதல் நடந்துவரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தீவிர அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், 80% அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட அணியே அதிமுகவாக கருத வேண்டும்; 80% உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் உயில் அதிமுக விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என்றும் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஜூலை 6ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, ஒசூர், ஒரக்கடம் உள்ளிட்ட இடங்களில் ரூ.1497 கோடி முதலீட்டில் 12 நிறுவனங்களின் வணிக உற்பத்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், 7050 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 5 அரசு பள்ளிகளில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கற்பிக்கும் வகையில், வி.ஆர். லேப் பயன்பாட்டை தொடங்கி வைத்துப் பேசிய உதயநிதி, உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் என்று தைரியமாக கேட்ட மாணவிகளை வியந்து பாராட்டிப் பேசினார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ், அதிமுக பொதுக்குழுவில் இ.பி.எஸ் தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக பரபரப்பு குற்றம்சாட்டினார்.
திருச்சி நீதிமன்றம் அருகே பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், திருச்சியில் மின் தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
Chennai power disruption July 5, 6: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.