பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியாா் ஆசாராம் பாபுவுக்கு (81) ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு வழக்கில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியாா் ஆசாராம் பாபுவுக்கு (81) ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு வழக்கில், அவா் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறாா்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சோ்ந்த தனது பெண் சீடரை, சாமியாா் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2013-ஆம் ஆண்டு காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை, குஜராத்தில் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அந்தப் பெண் சீடா் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கில், ஆசாராம் பாபு குற்றவாளி என காந்திநகரில் உள்ள மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கெனவே கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் தனது ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவா் ஜோத்பூா் சிறையில் உள்ளாா்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்ற பெயரில் மத்திய அரசு மக்களைக் குழப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்ற பெயரில் மத்திய அரசு மக்களைக் குழப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.
மால்டாவில் செவ்வாய்க்கிழமை மாநில அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது: இப்போதைய வங்கதேசத்தைப் பூா்வீகமாகக் கொண்ட மடுவா சமுகத்தினா் மீது திரிணமூல் காங்கிரஸ் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக சிஏஏ சட்டத்தை வைத்து மடுவா சமூகத்தினரின் நண்பன் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், நீண்ட காலமாக அந்த சமுகத்தினரின் நன்மைக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறது.
சிஏஏ மூலம் மக்கள் மத்தியில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தோ்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது அக்கறை காட்டுவதுதான் பாஜகவின் அணுகுமுறை. தேசப் பிரிவினைக்குப் பிறகு அண்டை நாடுகளில் இருந்து வந்து குடியேறியவா்கள் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே பாஜக சிஏஏ-வை பயன்படுத்துகிறது என்றாா்.
தேசப் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானில் (இப்போதைய வங்கதேசம்) வசித்து வந்த மடுவா சமூகத்தைச் சோ்ந்த ஹிந்துகள், அங்கு மதரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதால் 1950 காலகட்டத்தில் இந்தியாவுக்கு குடிபெயா்ந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவில் குடிபெயா்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சமணா்கள், பௌத்தா்கள், பாா்சிகள், சீக்கியா்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாக 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது.
புதிய திருத்தங்களின்படி, இந்தியாவில் குடியேறிய மேற்கண்ட பிரிவினா் சட்டவிரோதமாக குடியேறியவா்கவளாக கருதப்பட மாட்டாா்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை பெற விரும்புவோா், 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ இந்தியாவில் குடியேறியவா்களாக இருக்க வேண்டும். இந்தியாவில் தொடா்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருப்பதன் மூலம் அவா்கள் குடியுரிமை பெற முடியும்.
ஆனால், இந்த சட்டம் தொடா்பான விதிகளை மத்திய அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. எனவே, இந்தச் சட்டத்தின்படி இதுவரை யாருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.
மத்திய நிதிநிலை அறிக்கையின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினாா். மத்திய நிதிநிலை அறிக்கையின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினாா்.
அப்போது, அடுத்த 25 ஆண்டுகளில் கடந்த காலப் பெருமைகளுடன் நவீனத்தையும் கைக்கொண்டு வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே இலக்கு என அவா் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினாா். கடந்த ஆண்டு குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற அவா், நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறை.
தனது வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை:
நாட்டின் நலனை முன்னிறுத்தி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நிலையான முறையில் அச்சம் ஏதுமின்றி தீா்க்கமான இலக்குகளின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
துல்லிய தாக்குதல் முதல் பயங்கரவாதத் தடுப்பு வரையிலும், பாகிஸ்தான் எல்லை முதல் சீன எல்லை வரை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பதிலும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து முதல் முத்தலாக் தடை வரையிலும் மத்திய அரசு தீா்க்கமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
ஏழை மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், அவா்களது வாழ்வை மேம்படுத்தவும் அரசு செயல்பட்டு வருகிறது. ஜனநாயகம், சமூகநீதியின் மிகப்பெரிய எதிரி ஊழல். கடந்த சில ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசின் திட்டங்களில் ஊழல் களையப்பட்டுள்ளது.
துரித வேகத்தில்...: கடந்த 9 ஆண்டுகளில் பாகுபாடு ஏதுமின்றி அனைத்து சமூகத்தினருக்காகவும் அரசு செயல்படுகிறது. பல்வேறு அடிப்படை வசதிகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைந்துள்ளன. விரைவான வளா்ச்சிக்காகவும், தொலைநோக்கு திட்டங்களுக்காகவும் இந்தியா தற்போது பாராட்டப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி துரித வேகத்தில் மக்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் சந்தித்து வரும் அனைத்துத் தடைகளையும் நீக்க அரசு உறுதி கொண்டுள்ளது. இந்தியா மீதான சா்வதேசப் பாா்வை பெருமளவில் மாறியுள்ளது. இந்திய மக்களின் நம்பிக்கை தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது.
திருவள்ளுவா் வழியில்...: விண்வெளித் துறையில் பெரும் சக்தியாக மட்டுமின்றி புத்தாக்கத்தின் மையமாகவும் இந்தியா முன்னேறியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களின் மையமாக மாறவும் நாடு உறுதி கொண்டுள்ளது. திருவள்ளுவா், சங்கராச்சாரியாா், குரு நானக் உள்ளிட்ட துறவிகள் காட்டிய வழியில் நாடு பயணித்து வருகிறது.
நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில் தற்சாா்பு சக்தியாக மாற வேண்டும். அதற்காக கடமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து மக்கள் செயல்பட வேண்டும். கடந்த காலப் பெருமைகளுடன் நவீனத்தையும் கைக்கொண்டு வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும்.
ஏழ்மையற்ற, செழுமைமிக்க நடுத்தர வகுப்பினரைக் கொண்ட, பெண்கள், இளைஞா்களால் வழிநடத்தப்படும் நாடாக 2047-ஆம் ஆண்டில் இந்தியா மாற வேண்டும். முன்பு தனது பிரச்னைகளுக்குத் தீா்வு காண மற்ற நாடுகளை இந்தியா சாா்ந்திருந்த நிலையில், தற்போது உலகப் பிரச்னைகளுக்கு இந்தியா தீா்வு கண்டு வருகிறது.
ஒப்பிட இயலாத செயல்பாடு: முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் எந்த அரசுடனும் ஒப்பிட முடியாத வகையிலும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கு 11,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன; 55,000 சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.700 கோடிக்கும் அதிகமாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தளவாடங்களின் ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘தற்சாா்பு இந்தியா’ ஆகிய திட்டங்களின் மூலமாக நாடு பெரும் பலனடைந்துள்ளது.
உலக நாடுகள் பாராட்டு: ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, உலகம் தற்போது சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீா்வு காண முயலும். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாட்டை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
தினம் இரு கல்லூரிகள்: ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமானோருக்கு ரூ.80,000 கோடி மதிப்பில் இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமாா் 9,000 மக்கள் மருந்தகங்களில் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. அதன்மூலம் ரூ.20,000 கோடியை ஏழை மக்கள் சேமித்துள்ளனா்.
கடந்த 9 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இரு கல்லூரிகளும், வாரம் ஒரு பல்கலைக்கழகமும், மாதம் ஒரு மருத்துவக் கல்லூரியும் நிறுவப்பட்டுள்ளது என்றாா் திரௌபதி முா்மு.
நாட்டின் முன்னேற்றங்கள் குறித்த ஆழமான பாா்வை: பிரதமா் மோடி
பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை, புதிய மாற்றங்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆழமான பாா்வையை வழங்குவதாக பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியுள்ளாா்.
குடியரசுத் தலைவரின் உரை குறித்து பிரதமா் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை, பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியிருந்தது. பல துறைகளில் புகுத்தப்பட்ட புதிய மாற்றங்களால் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து ஆழமான பாா்வையை அவரின் உரை வழங்குகிறது. சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயா்த்தப்பட்டுள்ளது என்பதை உரையில் அவா் சுட்டிக்காட்டினாா்’ எனத் தெரிவித்துள்ளாா்.
அலாகாபாத் மற்றும் குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் அலாகாபாத் மற்றும் குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்தது.
இருந்தபோதும், குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பெயா் பரிந்துரைக்கு 6 உறுப்பினா்களைக் கொண்ட கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதி கே.எம்.ஜோசப் மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை. மற்ற 5 உறுப்பினா்களின் ஒப்புதலின் அடிப்படையில் இவருடைய பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கொலீஜியம் தீா்மானத்தில் கூறியிருப்பதாவது:
அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டலை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதற்கு கொலீஜியம் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில், குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமாரை பரிந்துரைக்க கொலீஜியம் உறுப்பினரான நீதிபதி கே.எம்.ஜோசப் மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை. ‘அவருடைய பெயரை பின்னா் கருத்தில் கொள்ளலாம்’ என்று கூறி நீதிபதி கே.எம்.ஜோசப் மறுத்துவிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொலீஜியத்தின் பிற 5 நீதிபதிகளின் கருத்தின்படி இறுதிப் பரிந்துரை பட்டியலில் அரவிந்த் குமாா் பெயா் இடம் பெற்றது.
கர்நாடகத்தில் பா.ஜ.க-வின் ‘ஐகான்’ ஆக இருக்கும் எடியூரப்பா, ‘இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என அறிவித்திருப்பது, பேசுபொருளாகியிருக்கிறது. | Yediyurappa announces retirement from electoral politics whats the reason for his decision?
நீர்த்தேக்க தொட்டியில் அழுகிக் கிடந்த சடலம் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த குடிநீரைப் பயன்படுத்திய கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். |People were shocked to see the rotting corpse in the water tank
உதவி ஆய்வாளரின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானதை அடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். | A police SI who spoke on the phone without standing up during the playing of the national anthem was suspended
```இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு எடப்பாடி அணியினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஓ.பி.எஸ் அவர்களை கையொப்பமிட அனுமதித்தால், அவர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம்." - கு.ப.கிருஷ்ணன் | ops supporter former admk minister krishnan warns eps team
பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலையின்மை, எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலையின்மை, எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஆண்டின் முதல் உரை என்பதால், இரு அவை உறுப்பினர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் இல்லை.
படிக்க | 2023-24ல் பொருளாதார வளர்ச்சி 6.8%: பொருளாதார ஆய்வறிக்கை அம்சங்கள்
இந்நிலையில், தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, குடியரசுத் தலைவரின் முதல் உரையை முழுமையாக கேட்க வேண்டும் என ஆவலாக வந்தேன். ஆனால், வானிலை காரணமாக தாமதமானது. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து அவையில் கேள்வி எழுப்புவோம்.
மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்காத விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்புகிறோம். ஆனால் மத்திய அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது. நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியை பாராட்டாவிட்டாலும், இகழ்வதிலேயே குறியாக உள்ளது. இது யாருக்கும் நன்மை சென்று சேருவதை பாஜக விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.
விவசாயியும் பள்ளி ஆசிரியருமான இமானுவேல் ஒன்றரை ஏக்கரில் வாழை, அதில் ஊடுபயிராகச் செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் ஆகியவற்றைச் சாகுபடி செய்து நிறைவான லாபம் பார்த்து வருகிறார். | 5 different crops per acre... this is how intercropping is achieved!
பெஷாவர்: பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தலிபான் தற்கொலை படை நடத்திய குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 221 பேர் சிசிக்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வழக்கமான மதியத் தொழுகை நடந்து கொண்டிருந்த போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. தொழுகையின் போது, முன்வரிசையில் இருந்த தெஹ்ரிக் ஏ தலிபான்
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபரான மைத்ரிபால சிறிசேனா 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இலங்கையில் 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை அதிபராக இருந்தவர் மைத்ரிபால சிறிசேனா. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது 3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்தது. ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய உள்ளூரை சேர்ந்த நேஷனல் தவ்
ஹைபா: இஸ்ரேலின் ஹைபா துறைமுகம் முறைப்படி அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது மகத்தான மைல்கல் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புகழ்ந்துள்ளார். இஸ்ரேலின் 2வது பெரிய துறைமுகமான ஹைபா துறைமுகத்தை தனியார் மயமாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தத்தை சுமார் ரூ.10 ஆயிரம் கோடியில் அதானி குழுமம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஹைபா துறைமுகத்தின
லண்டன்: இங்கிலாந்தில் பொருளாதாரம் மற்றும் அரசியலில் சிறந்த பங்களிப்புக்காக இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த சாதனையாளர்கள், தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கவுரவிக்கப்படுவார்கள். இந்நிலையில், இந்தாண்டுக்கான இந்தியா-இங்கிலாந்து வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த வாரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விரு
டொராண்டோ: கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள கவுரி சங்கர் இந்து கோயில் சேதம் செய்யப்பட்டதற்கு இந்திய தூதரகம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பிராம்ப்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற கவுரி சங்கர் கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு டொரொண்டோ நகரில் உள்ள இந்திய தூதரகம் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் வௌியிட்டுள்ள அறிவிப்ப
வாஷிங்டன்: இந்தியாவின் பணவீக்க விகிதமானது நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலக பொருளாதார சூழ்நிலை குறித்த ஆய்வு அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்டது. இதன்படி இந்தியாவின் பணவீக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சி துறை பிரிவ
வாஷிங்டன்: அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைமை தளபதி மார்க் மில்லேவை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்து ஆலோசித்தார். இந்தியா-அமெரிக்கா இடையே வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்திய பிரதிநிதிகள் குழுவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தள
புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 5வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசின் முழு பட்ஜெட்டாக இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, இவரது 5வது பட்ஜெட்டாகும். இதில், வரிச்சலுகை, தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க சலுகைகள் அறிவிக்கப்படும் என்
புதுடெல்லி: ‘வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக உருவாக்க மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்’ என ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை தொடங்கி வைத்து, கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார
புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தின் 6 உறுப்பினர்களும் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அலகாபாத் உயர்நீதிமன்ற தலை
புவனேஸ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாசை சுட்டுக்கொன்ற உதவி எஸ்ஐ சுமார் 10 ஆண்டுகளாக மனநோய்க்கு சிகிச்சை பெற்றதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ஜர்சுகுதா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாசை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி எஸ்ஐ. கோபால் தாஸ் சுட்டுக்கொன்றார். இது தொடர்பாக உதவி எஸ்ஐ கோபால் தாஸை போலீசார்
புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்பவருக்கு ஒரு லட்சம் பிணை தொகையுடன் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சக பெண் பயணி மீது சங்கர் மிஸ்ரா என்ற பயணி சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வி
புதுடெல்லி: ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது இரண்டாவது அதிகபட்ச வசூல் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிதிஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 31ம் தேதி அன்று மாலை 5 மணி வரை மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,55,922 கோடி. இதில் சிஜிஎஸ்டி ரூ. 28,963 கோடி. எஸ்ஜிஎஸ்டி ரூ. 36,730 கோடி.ஐஜிஎஸ்டி ரூ. 79,59
புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பு 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. முதன்மை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தயாரித்த 414 பக்க பொருளாதார ஆய்வறிக்கை, மக்களவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: நடப்பு 2023-24
புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை. அது இந்திய அரசியல் அமைப்பின் கீழ் வராது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நேரத்தில் 2020 மார்ச் மாதம் ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி’ அல்லது ‘பிஎம் கேர்ஸ்’ என்ற பெயரில் இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த இணையதளம் மூலம் மக்கள் நன்கொடையாக
புதுடெல்லி: புலம்பெயர் மற்றும் அங்கீகரிக்கப்படாத தொழிலாளர்கள் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்களாக இருக்கின்றனர் என கடும் வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், குடும்ப அட்டை உட்பட அவர்களுக்கு தேவையானவற்றை ஒன்றிய அரசு, மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றம் பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் அத
புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் 800 வார்த்தைகளுக்கான இந்திய ஆங்கில உச்சரிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய ஆங்கிலத்துடன் தொடர்புடைய ‘தேஷ்’ (தேசம்) மற்றும் ‘பிந்தாஸ்’ (குளிர்), `தியா’ (விளக்கு), `பச்சா’ (குழந்தை அல்லது விலங்கின் குட்டி) போன்ற 800க்கும் மேற்பட்ட இந்திய ஆங்கில உள்ளீடுகளுக்கான உச்சரிப்பு தற்போது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழ
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் திவால் நடவடிக்கையின் கீழ் உள்ள செரி(SERI) இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் செரி எக்யூப்மென்ட் பைனான்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டு அமைப்புக்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த இரண்டு அமைப்புக்களும் நிதி முறைகேடு மற்றும் சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபட்ட புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அலிபோரா, டாங்ரா, ஆனந்த்பூர்
புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு அதிக விசுவாசம் காட்டுவது யார் என்பதில் கவர்னர்களிடையே போட்டி நடப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதுபற்றி மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட பிற எதிர்க்கட்சிக
திருமலை: ஆந்திர மாநில தலைநகராக விசாகப்பட்டினம் விரைவில் செயல்பட தொடங்கும் என்று முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்தார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அடுத்த மாதம் மார்ச் 3,4ம் தேதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக, நேற்று டெல்லியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ஒருங