அமெரிக்காவில் உலகில் புகழ்பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் நான் சந்திப்பு நடத்தினேன். இதில் 19 நிறுவனங்களுடன் தொழில் முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
தொழில்முனைவோர்கள் உடனான கலந்துரையாடலில், ஜி.எஸ்.டி வரி குறித்து நகைச்சுவையாகப் பேசிய ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஹோட்டல் உரிமையாளருக்கு பா.ஜ.க வினர் மிரட்டல் விடுத்து கோவை மக்களை அவமானப்படுத்தியது வன்மையானக் கண்டனத்துக்குரியது என்று தி.மு.க அவருக்கு துணை நிற்கும் கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடக்க உறுதுணையாக இருந்த தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவருந்தி கௌரவித்த நெகிழ்ச்சியான நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா: பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அமைச்சர் ஐ.பெரியசாமி 30-ம் தேதி ஆஜராக வேண்டும் என எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஜீ தமிழின் வீரா மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல்களில் நாயகிக்கு தெரியாமல் திருமணம் நடந்துள்ள நிலையில், இந்த தாலி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஃபோர்டு நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தங்கள் தயாரிப்பு பணிகளை நிறுத்திக்கொண்டது. அதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் கார் ஏற்றுமதியையும் நிறுத்தியது.
புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த உப்பளம் வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியில் மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.4 கோடி செலவில் 32-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டது.
தமிழ்நாடு: நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும், ஓட்டல் தொழிலுக்காக அவ்வாறு கூறியதாகவும் வருத்தம் தெரிவித்தார்
சென்னை மெட்ரோ 2 கட்டத்தை மாநில அரசு திட்டமாக செயல்படுத்துகிறோம் என்று கூறியது தமிழக அரசு தான்; ஆனாலும் தேவையான கடன் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் செலவு செய்யவில்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
1946 இல் தொடங்கிய மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் 99 ஆண்டு குத்தகையை நிறுத்துவதற்கான முடிவு, சர்ச்சையைத் தூண்டியுள்ளது; பொது மக்களுக்கு சேவை செய்ய நிலத்தை பயன்படுத்த விரும்புவதாக தமிழக அரசு கூறுகிறது
சென்னை மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
சென்னையில் இன்று (செப்டம்பர் 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பெரியவர் கேள்வி கேட்டார். ஜனரஞ்சகமாக அவர் பேசியதால் ஜி.எஸ்.டி பற்றி பேசியதற்கு பதில் இதுதான். இந்த சம்பவத்தை ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டு விட்டார் என செல்லாம். விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கூல் லிப்’ என்னும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகி வருவதாகவும் இந்த தடை செய்யப்பட்ட பொருளுக்கு ஜி.எஸ்.டி வரி வசூல் செய்யப்படுகிறது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.