சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கிண்டி, அண்ணா சாலை, கோடம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை விடாமல் பெய்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை வந்த நிலையில் அதுகுறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
‘தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும்.
பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணியிலிருந்து தீபக்கும், பெண்கள் அணியிலிருந்து தர்ஷாவும் தற்போது அணி மாறியுள்ளனர், இதற்கான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
கூல்-லிப் போன்ற போதைப் பொருள் பாக்கெட்டுகளில் மண்டை ஓடு படம் அச்சிடப்படாதது ஏன் என குட்கா நிறுவனங்களுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது
கடந்த 2015 பெருவெள்ளம் மற்றும் கடந்தாண்டு பெய்த கனமழையில் கற்றுக்கொண்ட வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தி உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படவில்லை என்பதை கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 36-வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"நெறிமுறையின்படி, விமானம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட விரிகுடாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, நிலையான இயக்க நடைமுறையைப் பின்பற்றியது" என்று இண்டிகோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்டுகள் அத்தியாவசிய நிதி கருவிகளாக உருவாகியுள்ளன, பயணம் மற்றும் கொள்முதல் பாதுகாப்பு போன்ற காப்பீட்டு நன்மைகளை வழங்குகின்றன. இந்த விருப்பங்கள் மற்றும் அவற்றின் விதிமுறைகளைப் புரிந்துகொள்வது அட்டைதாரர்களை எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிராக பாதுகாக்கும்.
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், அந்த விவகாரம் குறித்து ஓவியா திரிச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை வண்டியூர் கண்மாய் உபரிநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் வயல்வெளிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
என்எல்சி நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கக் கோரி புதுச்சேரியில் உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது
கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான புகாரில் சீமான் மீது தாந்தோணிமலை போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த கரூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கங்குவா சர்ப்ரைஸ்.. சூர்யாவின் குரல் ஏ.ஐ. நுட்பம் மூலம் பல மொழிகளில் டப்பிங்.. 3500 தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் என கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த செய்தியில் கதாநாயகனான கூல் சுரேஷ் முதல்.. பல மொழிகளில் பேசும் சூர்யா வரை பல சுவாரசியமான செய்திகள் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - பாந்த்ரா கிழக்கு பகுதியில் சனிக்கிழமை (அக்.12) அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் சுட்டுக் கொலை.