சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கிண்டி, அண்ணா சாலை, கோடம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை விடாமல் பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எதற்காக இப்படி உத்தரவிடப்பட்டது? கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் நிலை என்ன? போன்றவை குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாடு: என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க சிறப்பு செயலாளர் சேகர் பேசுகையில், வருகிற 18-ம் தேதி நள்ளிரவு முதல் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
கோவை மாநகராட்சியில் உள்ள 6000 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் களத்தில் உள்ளனர் எனவும் மழை பாதிப்பு குறித்து வரக்கூடிய புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது என கோவை மாநகாரட்சி ஆணையர் தெரிவித்தார்.
தமிழ்நாடு: பிசியோதெரபி சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதி, 6 மாத சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி வந்தார். பின்னர் அங்கிருந்து கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூருக்கு ஒரே ஆண்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி ஆச்சரியம் அளித்துள்ளன. இதன்மூலம் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளனர்.
‘தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும்.
Chennai Rain Latest News Updates: தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் பால் உள்ளிட்ட அத்தியாவச பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நகரமே பரபரப்பான நிலையில் காணப்படுகிறது.
TN Govt Namakkal District Hospital Jobs : பொது சுகாதாரத்துறையின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் 27 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரத்தை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
தொடர் மழையால் மதுரை வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோரிப்பாளையம் மேம்பால பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இயந்திரங்கள் வெளியேற்றபட்டுள்ளன. இதனால் மேம்பால பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மிக கனமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
கூல்-லிப் போன்ற போதைப் பொருள் பாக்கெட்டுகளில் மண்டை ஓடு படம் அச்சிடப்படாதது ஏன் என குட்கா நிறுவனங்களுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது
கடந்த 2015 பெருவெள்ளம் மற்றும் கடந்தாண்டு பெய்த கனமழையில் கற்றுக்கொண்ட வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தி உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படவில்லை என்பதை கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.