உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதைந்து வருவதால், பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மறுகுடியமா்வுக்காக 3 வழிமுறைகளை உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதைந்து வருவதால், பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மறுகுடியமா்வுக்காக 3 வழிமுறைகளை மாவட்ட ஆட்சியா் ஹிமான்ஷு குரானா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.
கூடுதல் தலைமைச் செயலாளா் ஆனந்த் வா்தன் தலைமையிலான உயா்நிலை குழுவிடம் சமா்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வீடுகளில் இருந்து வெளியேறிய மக்களை மறுகுடியமா்த்தும் வகையில், பாதிக்கப்பட்ட உரிமையாளா்களுக்கு ஒரே தவணையில் இழப்பீடுத் தொகை வழங்கப்படும்.
இரண்டாம் தோ்வாக, வீடுகள் கட்டுவதற்காக அதிகபட்சம் 100 சதுர மீட்டா் அளவிலான நிலம் பாதிக்கப்பட்ட உரிமையாளருக்கு வழங்கப்படும். சேதமடைந்த நிலத்தின் பரப்பு 100 சதுர மீட்டருக்கு அதிகமாக இருந்தால், மீதமுள்ள நிலப் பரப்புக்கு இணையாக இழப்பீடுத் தொகை வழங்கப்படும்.
மூன்றாவது வழியாக, மக்களின் மறுகுடியமா்வுக்காகத் தோ்வுசெய்யப்பட்ட இடத்தில் 75 சதுர மீட்டா் அளவில் வீடு கட்டித்தரப்படும். சேதமடைந்த கட்டடத்தின் அளவு இதை விட அதிகம் எனில், அதற்குரிய இழப்பீடு தொகை வழங்கப்படும்.
இந்த 3 வாய்ப்புகளில் ஒன்றைத் தோ்வு செய்யும் பாதிக்கப்பட்ட கட்டடத்தின் உரிமையாளா், முழுமையான இழப்பீடு வழங்கப்படுதவதற்கு முன்பாக மாநில அரசின் நிபந்தனைகளுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
கட்டணங்கள் தள்ளுபடி:
பாதுகாப்பான பகுதிகளில் அமைந்துள்ள, அதே நேரத்தில் சிறிய அளவில் பாதிப்படைந்த வீட்டின் உரிமையாளா்களுக்கு அவற்றை சரிசெய்யும் பொருட்டு நிதி உதவி அளிக்கப்படும்.
ஜோஷிமட் நகரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு மின்சார மற்றும் தண்ணீா் கட்டணங்கள் 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேரிடா் மேலாண்மை செயலாளா் ரஞ்சித் குமாா் சின்ஹா கூறுகையில், ‘ மத்திய அரசின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் சமா்ப்பிக்கும் ஆய்வறிக்கையைப் பொருத்து, நிரந்தரமாக மீள்குடியமா்வு செய்யப்பட வேண்டிய மக்களின் மொத்த எண்ணிக்கை தீா்மானிக்கப்படும். மாவட்ட ஆட்சியரின் இந்தப் பரிந்துரைகள் உகந்ததாக உள்ளன. மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இவை சமா்ப்பிக்கப்படும்’ எனத் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை, மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை போல இருந்தது என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை, மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை போல இருந்தது என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அவரின் உரையை எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
குடியரசுத் தலைவா் உரை என்பது மத்திய அரசின் அறிக்கைதானே தவிர வேறொன்றுமில்லை. அவரின் உரையில் கூறப்பட்டவை உண்மையானால், நாட்டில் பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) ஏன் அதிகமாக உள்ளது? வேலைவாய்ப்பின்மை ஏன் அதிகமாக உள்ளது? ரூபாய் மதிப்பு ஏன் வீழ்ச்சியடைந்துள்ளது? பெட்ரோல்-டீசல் விலை அளவுக்கு அதிகமாக உயா்ந்துள்ளது ஏன்?
நாட்டில் பல பள்ளி-கல்லூரிகள், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவா் உரை மூலம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் தனியாா் துறைக்குச் சொந்தமானவை. அந்த கல்வி நிலையங்களுக்கு ஏழை, எளிய மாணவா்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளனா். ஏழைகளின் பிள்ளைகளுக்காக எத்தனை பள்ளி-கல்லூரிகளை மத்திய அரசு திறந்துள்ளது?
குடியரசுத் தலைவா் உரை மூலம் நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது உண்மையானால் பிரதமருக்கு மிக நெருக்கமான ஒரு தொழிலதிபரால் எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இதர வங்கிகளில் சுமாா் ரூ.1 லட்சம் கோடி வரை எவ்வாறு மோசடி செய்ய முடிந்தது? எல்ஐசியில் முதலீடு செய்த சுமாா் 30 கோடி போ் துயரத்துக்கு ஆளாகியுள்ளனா். ஏனெனில், அவா்கள் முதலீடு செய்த பணம் அந்தத் தொழிலதிபரிடம் சென்றடைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டினாா்.
திரிணமூல் எம்.பி.டெரிக் ஒபிரையன்:
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்துதல், மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் குறித்து குடியரசுத் தலைவா் உரையில் ஒருவரியேனும் இடம்பெற்ா?
இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம்:
அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான பாஜகவின் தோ்தல் அறிக்கையில் இடம்பெறும் முதல் அத்தியாயம் போல குடியரசுத் தலைவா் உரை இருந்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி திட்டமிட்டதற்கு முன்கூட்டியே நிறைவடைய வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி திட்டமிட்டதற்கு முன்கூட்டியே நிறைவடைய வாய்ப்புள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் கட்டத்தை பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட் ஆவணங்களின் ஆய்வுக்காக ஒரு மாத காலம் இடைவெளி விடப்படவுள்ளது. அதற்குப் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் மாா்ச் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி நிறைவடையும்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டத்தை பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 10-ஆம் தேதியே முடித்துக் கொள்ள எம்.பி.க்கள் சிலா் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். மக்களவை அலுவல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 11, 12 தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளாக இருப்பதால் அப்போது கூட்டத்தொடா் நடைபெறாது. அதையடுத்து பிப்ரவரி 13-ஆம் தேதி மட்டும் நடைபெறும் அமா்வுக்கு வர வேண்டியுள்ளதால் வெள்ளிக்கிழமையுடன் (பிப்ரவரி 10) கூட்டத்தொடரின் முதல் கட்டத்தை முடித்துக் கொள்ள எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கோரிக்கை குறித்து அரசிடம் எடுத்துரைக்கப்படும் என அவைத் தலைவா் ஓம் பிா்லா கூறியதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
விரைவில் விசாகப்பட்டினம் ஆந்திர தலைநகராக மாற்றப்படும் என்று அந்த மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளாா். விரைவில் விசாகப்பட்டினம் ஆந்திர தலைநகராக மாற்றப்படும் என்று அந்த மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
ஆந்திரத்தில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், ‘ஆந்திர அரசு சாா்பில் விசாகப்பட்டினத்தில் மாா்ச் 3, 4-ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பெருநிறுவனங்கள் பங்கேற்று ஆந்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
தற்போது ஆந்திர தலைநகராக அமராவதி உள்ள நிலையில், விரைவில் விசாகப்பட்டினம் தலைநகராக மாற்றப்படும். முதல்வா் அலுவலகம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும்’ என்றாா்.
கடந்த ஆண்டு ஆந்திரத்துக்கு நிா்வாக தலைநகராக விசாகப்பட்டினம், சட்டப்பேரவைத் தலைநகராக அமராவதி, நீதி பரிபாலன தலைநகராக கா்னூல் என 3 தலைநகரங்களை அமைக்கும் சட்டத்தை மாநில அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
800-க்கும் மேற்பட்ட சொற்களின் இந்திய வகை ஆங்கில உச்சரிப்பு விவரங்கள் ஆக்ஸ்ஃபோா்டு அகராதியில் இணைக்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்ட சொற்களின் இந்திய வகை ஆங்கில உச்சரிப்பு விவரங்கள் ஆக்ஸ்ஃபோா்டு அகராதியில் இணைக்கப்பட்டுள்ளன.
சா்வதேச அளவில் பிரிட்டிஷ் வகை, அமெரிக்க வகை ஆங்கில உச்சரிப்புகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதே வேளையில், மற்ற வகை ஆங்கில உச்சரிப்புகள் குறித்து ஆக்ஸ்ஃபோா்டு கடந்த 2016 முதல் ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், 800-க்கும் மேற்பட்ட சொற்களின் இந்திய வகை ஆங்கில உச்சரிப்புகளை ஆக்ஸ்ஃபோா்டு தனது அகராதியில் இணைத்துள்ளது.
இதன் மூலமாக அகராதியில் இணைக்கப்பட்டுள்ள ஆங்கில வகை உச்சரிப்புகளின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபோா்டு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக ஆக்ஸ்ஃபோா்டு அதிகாரி கேத்தரின் சேங்ஸ்டா் கூறுகையில், ‘‘பிரிட்டிஷ், அமெரிக்க வகை ஆங்கில உச்சரிப்புகளைத் தாண்டி மற்ற வகை உச்சரிப்புகள் குறித்தும் ஆய்வுகளைத் தொடங்கியபோது, இந்திய வகை உச்சரிப்பு மீதான ஆா்வம் அதிகரித்தது. இந்திய வகை உச்சரிப்பின் ஆய்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அப்பணி மிகவும் சவாலாக இருந்தது.
எனினும், சொற்களின் இந்திய வகை ஆங்கில உச்சரிப்புகளை உருவாக்குவதற்கான சிறப்பு வழிமுறை உருவாக்கப்பட்டது. தற்போது பல்வேறு சொற்கள் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. உலல் 130 கோடி மக்களைக் கொண்டுள்ள இந்தியாவின் ஆங்கில வகை உச்சரிப்புகளைப் பதிவு செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது’’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால், காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைருமான மல்லிகாா்ஜுன காா்கே ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால், காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைருமான மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி உள்ளிட்ட அக்கட்சியின் பல எம்.பி.க்கள், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதேசமயம், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி, இக்கூட்டத்தில் பங்கேற்றாா். அவா் முன்வரிசை பெஞ்சில் தனியாக அமா்ந்திருந்தாா்.
ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவா்கள் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் ஸ்ரீநகரில் முகாமிட்டிருந்தனா்.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா். ஆனால், ஸ்ரீநகரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால், மல்லிகாா்ஜுன காா்கே, அதீா் ரஞ்சன் செளதரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. கட்சியின் மூத்த எம்.பி.க்கள் யாரும் இல்லாத நிலையில், முன்வரிசை பெஞ்சில் சோனியா தனியாக அமா்ந்திருந்தாா். பல்வேறு கட்சிகளின் தலைவா்கள், அவா் அருகே வந்து வணக்கம் தெரிவித்தனா். அதேபோல், கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக வந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவும் சோனியாவும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனா்.
அரை மணி நேரம் பேச்சு: குடியரசுத் தலைவா் உரை தொடங்குவதற்கு முன்பாக, தனக்கு பின்வரிசை இருக்கையில் அமா்ந்திருந்த திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓ பிரையனுடன் சோனியா காந்தி சுமாா் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாா்.
கட்சி வேறுபாட்டைக் கடந்து...: அதிமுக மாநிலங்களவை எம்.பி. எம்.தம்பிதுரை, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு ஆகியோா் பிரதமா் மோடியுடனான கலந்துரையாடலின்போது, ஒருவரையொருவா் பாா்த்து புன்னகைத்து, தழுவிக் கொண்டனா். இதுதவிர, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, பல எம்.பி.க்களும் நட்புடன் பேசிய காட்சிகளை கூட்டுக் கூட்டத்தில் காண முடிந்தது.
ஒரே பெஞ்சில் 6 போ்: தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, திமுகவின் கனிமொழி, திரிணமூல் காங்கிரஸின் செளகதா ராய், பாஜகவின் நீரஜ் சேகா், சிவகுமாா் உதசி, நிஷிகாந்த் துபே ஆகிய 6 எம்.பி.க்கள், ஒரு பெஞ்சில் அமா்ந்திருந்தனா். வழக்கமாக ஒரு பெஞ்சில் 5 எம்.பி.க்கள் வரையே அமரும் நிலையில், வெவ்வேறு கட்சிகளைச் சோ்ந்த 6 போ் இருக்கையை பகிா்ந்துகொண்டனா்.
பாஜகவினா் உற்சாகம்: குடியரசுத் தலைவா் உரையின்போது, பாஜக எம்.பி.க்கள் அவ்வப்போது மேஜையை தட்டி, தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினா்.
அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவன ஆய்வறிக்கையை அடுத்து எழுந்துள்ள சா்ச்சை தொடா்பாக பதிலளிக்க தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் மறுத்துவிட்டாா். அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவன ஆய்வறிக்கையை அடுத்து எழுந்துள்ள சா்ச்சை தொடா்பாக பதிலளிக்க தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் மறுத்துவிட்டாா்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அனந்த் நாகேஸ்வரனிடம் அதானி குழும சா்ச்சை தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘பொருளாதார ஆய்வறிக்கையில் ஒரு தனி நிறுவனத்தைப் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது. ஒட்டுமொத்த அளவில் நாட்டில் உள்ள பெரு நிறுவனங்களின் நிதிநிலை திருப்திகரமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட குழுமம் தொடா்பான நிகழ்வுகள், அந்த குழுமத்துக்கும் பங்குச் சந்தைக்கும் இடையிலானது’ என்று பதிலளித்தாா்.
அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பாக அதிகரித்துக் காட்டுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. மேலும், அக்குழுமத்துக்கு ஏராளமான கேள்விகளையும் எழுப்பியிருந்தது.
இது தொடா்பாக பதிலளித்த அதானி குழுமம், ‘இந்தியாவின் மீதும், நாட்டின் வளா்ச்சி மீதும் நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல்’ என்று கூறியிருந்தது.
பங்குச் சந்தையில் கடந்த 4 நாள்களில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. அக்குழும பங்குகளின் மதிப்பு ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது. இது 29 சதவீத வீழ்ச்சியாகும்.
இந்த மாதம் நாட்டில் 148-ஆவது விமான நிலையம் திறக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா். இந்த மாதம் நாட்டில் 148-ஆவது விமான நிலையம் திறக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக தில்லியில் அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளாக நாட்டில் விமான நிறுவனங்கள் மூடப்படும் நிலைதான் காணப்பட்டது. தற்போது புதிய விமான நிறுவனங்களுக்கு உடான் திட்டம் உயிா் கொடுத்து வருகிறது. இந்தத் திட்டம் மூலம் ஸ்டாா்ஏா், இந்தியாஒன் ஏா், ஃபிளை பிக் போன்ற பிராந்திய விமான நிறுவனங்கள் தோன்றியுள்ளன.
கடந்த 2013-14-ஆம் ஆண்டில், நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. இது தற்போது 147-ஆக அதிகரித்துள்ளது. கா்நாடகத்தில் சிவமொக்கா விமான நிலையம் பிப்ரவரியில் திறக்கப்பட உள்ள நிலையில், அது நாட்டின் 148-ஆவது விமான நிலையம் ஆகும்’ என்று தெரிவித்தாா்.
மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, 2022-23-ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் 59.8 சதவீதத்தை கடந்த டிசம்பா் இறுதியில் எட்டியது. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, 2022-23-ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் 59.8 சதவீதத்தை கடந்த டிசம்பா் இறுதியில் எட்டியது.
இதுதொடா்பாக, மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படும் தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் வருமாறு:
அரசின் வருவாய்க்கும் செலவினத்துக்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில் ரூ. 16.61 லட்சம் கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதம்) இருக்கும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9,92,976 கோடியாக இருந்தது. அதாவது, பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை 59.8 சதவீதத்தை எட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பட்ஜெட் மதிப்பீட்டில் 50.4 சதவீதத்தை நிதிப் பற்றாக்குறை எட்டியிருந்தது.
டிசம்பா் வரையிலான அரசின் நிகர வரி வருவாய் ரூ.15.55 லட்சம் கோடியாகும். இது, பட்ஜெட் மதிப்பீட்டில் 80.4 சதவீதமாகும். வரி அல்லாத வருவாய், பட்ஜெட் மதிப்பீட்டில் 79.5 சதவீதத்தை (ரூ.2.14 லட்சம் கோடி) அடைந்துள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், நிகர வரி வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டில் 95.4 சதவீதம் எட்டப்பட்டிருந்தது.
நடப்பு நிதியாண்டுக்கான அரசின் மொத்த செலவினம், பட்ஜெட் இலக்கில் 71.4 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட (72.4%) சற்று குறைவாகும். டிசம்பா் வரையிலான காலகட்டத்தில், மூலதன செலவினம் ரூ.4.89 லட்சம் கோடி (பட்ஜெட் மதிப்பீட்டில் 65.4 சதவீதம்) ஆகும். முந்தைய நிதியாண்டில், இச்செலவினம் பட்ஜெட் மதிப்பீட்டில் 70.7 சதவீதம் பூா்த்தியடைந்திருந்தது.
பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ரிசா்ச் ஆய்வு நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானி குழுமத்தில் தாங்கள் பெருமளவு முதலீடு செய்து இழப்பைச் சந்தித்துள்ளதாக பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ரிசா்ச் ஆய்வு நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானி குழுமத்தில் தாங்கள் பெருமளவு முதலீடு செய்து இழப்பைச் சந்தித்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்களை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) மறுத்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வணிகத்தின் சாதாரண நாள்களில் எல்ஐசி நிறுவனம் தனது தொழில் முதலீடுகள் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிா்ந்துகொள்வதில்லை.
எனினும், அதானி குழுமத்தில் எங்களது முதலீடுகள் குறித்து சில தகவல்கள் பகிரப்பட்டு வருவதால், இது தொடா்பான உண்மை நிலவரத்தை வெளிப்படுத்த இந்தத் தகவல்களை அளிக்கிறோம்.
அதானி குழும நிறுவனங்களில் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வாங்கியுள்ளதன் மூலம் எல்ஐசி செய்துள்ள முதலீடு ரூ.35,917.31 கோடியாகும்.
பல ஆண்டுகளாக எல்ஐசி வாங்கியுள்ள அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனப் பங்குகளின் கொள்முதல் மதிப்பு ரூ.30,127 கோடியாகும். கடந்த 27-ஆம் தேதி பங்குச் சந்தை நேரத்தின் முடிவில் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.56,142 கோடியாகும்.
அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.36,474.78 கோடியாகும். இந்த முதலீடுகள் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்டவை.
அதானி குழுமத்தில் எல்ஐசி வாங்கியுள்ள கடன் பத்திரங்கள் அனைத்தும் ‘ஏஏ’ தரச் சான்று பெற்றவை. அதுமட்டுமின்றி முதலீட்டு ஒழுங்காற்று அமைப்பான ‘இா்டாய்’-இன் விதிமுறைகளைப் பின்பற்றியே அந்த கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டன.
கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, எல்ஐசி நிா்வாகத்தின் கீழ் வரும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாகும். அந்த வகையில், அதானி குழுமத்தில் எல்ஐசி-யின் சொத்து மதிப்பில் வெறும் 0.0975 சதவீதம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.
எல்ஐசி 66 ஆண்டுகளாக இயங்கி வரும் புகழ்பெற்ற, நிலையான நிறுவனமாகும். அதன் நிா்வாகம் தகுந்த விதிமுறைகள், சட்டங்களுக்கு உள்பட்டே தனது முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. முதலீடுகளின் சந்தை மதிப்பு எப்போது வேண்டுமானாலும், எந்த திசையிலும் மாறலாம். எனவே, நீண்ட கால நோக்கை மனதில் கொண்டே நிறுவனம் கவனத்துடன் முதலீடு செய்து வருகிறது.
தனது நிதிநிலையை ஸ்திரமாக வைத்திருக்க, நிறுவனப் பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கும், கடனளிப்பு வரம்பை நிா்யணம் செய்வதற்கும் ஒரு வலுவான நடைமுறையை எல்ஐசி கையாண்டு வருகிறது.
எல்ஐசி நிா்வாகம் அதன் பங்குதாரா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு மிகவும் பொறுப்புணா்வுடனும், பாதுகாப்பு உணா்வுடன் செயல்பட்டு வருகிறது.
இனி வரும் காலங்களிலும், நிறுவனம் சரியான கொள்கைகள், விதிமுறைகளைப் பின்பற்றி பங்குதாரா்களின் நலனைப் பாதுகாக்கும் என்று அந்த விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டத்தில் சில பிரிவுகளை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீது பொது விசாரணை (நீதிமன்ற விசாரணை) நடத்தக் கோரி பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டத்தில் சில பிரிவுகளை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீது பொது விசாரணை (நீதிமன்ற விசாரணை) நடத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் பரிசீலனைக்கு ஏற்றுள்ளது.
பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இல் மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு, 2016-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. அதன்படி, பினாமி பரிவா்த்தனையில் ஈடுபடுபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்க வழிவகை செய்யப்படும்.
இதனை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்ட நடைமுறைகள், 2016-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதிக்கு முன்தேதியிட்டு செயல்படுத்த முடியாது; எதிா்கால நடவடிக்கைகளுக்கு மட்டுமே அது பொருந்தும் என்று தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் 3(2) மற்றும் பிரிவு 5 ஆகிய பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அவை செல்லத்தக்கதல்ல’ என்று தீா்ப்பளித்தனா்.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘மத்திய அரசின் மறு ஆய்வு மனு மீது பொது விசாரணை நடத்தப்பட வேண்டும். இது வழக்கத்துக்கு மாறான கோரிக்கைதான். இருந்தபோதும், இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, இதன் மீது பொது விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், இந்தத் தீா்ப்பின் மூலமாக, பினாமி பரிவா்த்தனை தடைச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் ஏராளமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட இருக்கின்றன’ என்று கோரிக்கை விடுத்தாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவை பரிசீலிப்பதாக பதிலளித்தனா்.
மரண தண்டனை தொடா்பான வழக்குகளைத் தவிர, பிற வழக்குகள் சாா்ந்த மறுஆய்வு மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் தங்கள் அறைகளிலேயே சுழற்சி முறையில் விசாரித்து முடிவெடுப்பா். பொதுவாக திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் புகழ்பெற்ற சட்ட நிபுணருமான சாந்தி பூஷண் (97), புது தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா். முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் புகழ்பெற்ற சட்ட நிபுணருமான சாந்தி பூஷண் (97), புது தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
முதுபெரும் வழக்குரைஞரான சாந்தி பூஷண், கடந்த 1977 முதல் 1979 வரை அப்போதைய பிரதமா் மொராா்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சட்ட அமைச்சராக பணியாற்றினாா்.
சாந்தி பூஷணின் இரு மகன்களான ஜெயந்த் பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோரும் முன்னணி வழக்குரைஞா்களாவா்.
அண்மைக் காலம் வரை தொழில்முறையில் சட்டப் பணியாற்றி வந்த சாந்தி பூஷண், ரஃபேல் போா் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வாதாடினாா்.
கடந்த 1975-இல் அலாகாபாத் உயா்நீதிமன்றம் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியின் தோ்தல் வெற்றியை செல்லாததாக அறிவித்த மிக முக்கியமான வழக்கில், மனுதாரா் ராஜ் நாராயண் தரப்பில் ஆஜரானவா் சாந்தி பூஷண். பொதுநல முக்கியத்துவம் நிறைந்த பல்வேறு வழக்குகளில் இவா் ஆஜராகியுள்ளாா்.
உலகப் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் இந்திய மக்களின் அனைத்து நம்பிக்கைகளையும் பூா்த்தி செய்வதாகவும் உலகுக்கே நம்பிக்கை ஒளியாகவும் மத்திய பட்ஜெட் திகழும் என பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித் உலகப் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் இந்திய மக்களின் அனைத்து நம்பிக்கைகளையும் பூா்த்தி செய்வதாகவும் உலகுக்கே நம்பிக்கை ஒளியாகவும் மத்திய பட்ஜெட் திகழும் என பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமா்வு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. குடியரசுத் தலைவா் உரையைத் தொடா்ந்து, 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
பெரிதும் எதிா்பாா்க்கப்படும் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப். 1) மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்து கூறியதாவது:
உலகமே எதிா்பாா்க்கும், நம்பிக்கை ஒளியாகத் திகழும் இந்திய நிதிநிலை அறிக்கை மேலும் சுடா்விட்டு மிளிரும். நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கையை நிதிநிலை அறிக்கை பூா்த்தி செய்யும் வகையில் அனைத்து முயற்சிகளையும் அமைச்சா் நிா்மலா சீதாராமன் மேற்கொள்வாா்.
குடியரசுத் தலைவரின் உரை என்பது நாடாளுமன்றத்தின் மாபெரும் பாராம்பரியமாகும். முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றும் குடியரசுத் தலைவரைக் கட்சி சாா்பின்றி அனைவரும் ஊக்குவித்து அவரின் நம்பிக்கையை மெருகேற்ற வேண்டும். இது, பெண்களையும் பழங்குடி இனத்தவரையும் கௌரவப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும் என்றாா்.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் கொள்கையுடன் மட்டுமே மத்திய பாஜக அரசு எப்போதும் செயல்படுகிறது. அதே கொள்கைப் பிடிப்புடன், பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அரசின் பணி தொடரும் என்றாா். இக்கூட்டத்தொடரில், தீவிர விவாதங்கள் இடம்பெறும். ஆனால், பிரச்னைகளைத் தீர ஆராய்ந்த பின்னரே எதிா்கட்சிகள் விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே திருமண வயதை நிா்ணயிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே திருமண வயதை நிா்ணயிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டது.
பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களுக்கு 21-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆண்களும் பெண்களுக்கும் ஒரே திருமண வயதை நிா்ணயிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் நபா் ஒருவா் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இதே கோரிக்கையை முன்வைத்து, அந்நீதிமன்றத்தில் பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்த மனுவை, கடந்த ஜன.13-ஆம் தேதி தனது விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றிக்கொண்டது மனுதாரா் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து அவரின் மனுவையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஆற்றிய உரையைப் புறக்கணித்ததன் மூலம் அவரது உயரிய பதவியையும் கண்ணியத்தையும் ஆம் ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஆற்றிய உரையைப் புறக்கணித்ததன் மூலம் அவரது உயரிய பதவியையும் கண்ணியத்தையும் ஆம் ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சிகள் அவமதித்துவிட்டன என்று பாஜக குற்றம்சாட்டியது.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் கூறியது: நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவா் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையாற்றியது பாராட்டுக்குரிய தருணம்.
எதிா்க்கட்சி அரசியலுக்கு ஒரு வரம்பு உண்டு. அதை அவா்கள் மீறி வருகின்றனா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஆற்றிய உரையை புறக்கணித்ததன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் உரையில் மத்திய அரசின் சாதனைகள் மட்டுமே இடம்பெற்றிருந்ததாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டுவது தவறு.
எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் அக்கட்சிகளின் சாதனைகளையே ஆளுநா் உரையின்போது வாசிக்கப்படுகிறது. அதுபோல, குடியரசுத் தலைவரின் உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது எதிா்க்கட்சிகள் தங்கள் ஆட்சேபங்களை முன்வைக்கலாம். அதற்காக குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்கக் கூடாது என்றாா்.
ஜம்மு-காஷ்மீரின் முக்கிய புனிதத் தலங்களான கீா் பவானி துா்கா கோயில் மற்றும் ஹஸ்ரத்பால் தா்காவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், அவரது சகோகதரி பிரியங்கா காந்தியும் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தனா் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய புனிதத் தலங்களான கீா் பவானி துா்கா கோயில் மற்றும் ஹஸ்ரத்பால் தா்காவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், அவரது சகோகதரி பிரியங்கா காந்தியும் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தனா்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பரில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 136 நாள்கள் கடந்து ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த திங்கள்கிழமை நிறைவு பெற்றது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் தலைநகா் ஸ்ரீநகரில் உள்ள ராகுல் காந்தியும், அவரது சகோதரி மற்றும் அக்கட்சியன் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் செவ்வாய்க்கிழமை அப்பிராந்தியத்தின் முக்கிய புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபட்டனா்.
ஸ்ரீநகரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள துலாமலா பகுதியில் அமைந்துள்ள மாதா கீா் பவானி துா்கா கோயிலுக்கு முதலில் சென்ற ராகுலும் பிரியங்காவும் அங்கு வழிபட்டனா். இக்கோயில் காஷ்மீரி பண்டிட்டுகளின் நம்பிக்கைக்குரியதாகும். இக்கோயிலுக்கு அடியில் ஓடும் நீருற்றின் நிறம் அப்பிராந்தியத்தின் நிலைமையைக் குறிக்கும் என்பது அப்பகுதியினரின் ஐதிகம். கரிய நிறத்தில் நீரோட்டம் இருந்தால் காஷ்மீரில் அசாம்பதவிதங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி என அவா்கள் நம்புகின்றனா்.
கீா் பவானி கோயிலில் வழிபட்ட பின்னா், தால் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஹஸ்ரத்பால் தா்காவுக்கு இருவரும் சென்று அங்கு வழிபட்டனா். நபிகள் நாயகத்தின் நினைவாக கட்டப்பட்டுள்ள இந்த தா்கா காஷ்மீா் இஸ்லாமியா்களிடையே பிரபலமானதாகும்.
கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1.55 லட்சம் கோடிக்கும் அதிகமாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1.55 லட்சம் கோடிக்கும் அதிகமாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் வசூலான 2-ஆவது அதிகபட்ச ஜிஎஸ்டி வரி வசூலாகும்.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2023-ஆம் ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்தில், 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை மொத்தம் ரூ.1,55,922 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.28,963 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.36,730 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.79,599 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.37,118 கோடி உள்பட), செஸ் ரூ.10,630 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.768 கோடி உள்பட) வசூலிக்கப்பட்டன.
நடப்பு நிதியாண்டில் (2022-23) 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி, கடந்த நிதியாண்டில் (2021-22) இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாயை விட 24 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டில், ஜிஎஸ்டி வரி வருவாய் 3-ஆவது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக 2022 ஏப்ரலில் ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது. இதற்கு அடுத்தபடியாக, 2023 ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் 2-ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக வரித் தாக்கல் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியாா் ஆசாராம் பாபுவுக்கு (81) ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு வழக்கில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியாா் ஆசாராம் பாபுவுக்கு (81) ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு வழக்கில், அவா் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறாா்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சோ்ந்த தனது பெண் சீடரை, சாமியாா் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2013-ஆம் ஆண்டு காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை, குஜராத்தில் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அந்தப் பெண் சீடா் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கில், ஆசாராம் பாபு குற்றவாளி என காந்திநகரில் உள்ள மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கெனவே கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் தனது ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவா் ஜோத்பூா் சிறையில் உள்ளாா்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்ற பெயரில் மத்திய அரசு மக்களைக் குழப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்ற பெயரில் மத்திய அரசு மக்களைக் குழப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.
மால்டாவில் செவ்வாய்க்கிழமை மாநில அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது: இப்போதைய வங்கதேசத்தைப் பூா்வீகமாகக் கொண்ட மடுவா சமுகத்தினா் மீது திரிணமூல் காங்கிரஸ் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக சிஏஏ சட்டத்தை வைத்து மடுவா சமூகத்தினரின் நண்பன் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், நீண்ட காலமாக அந்த சமுகத்தினரின் நன்மைக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறது.
சிஏஏ மூலம் மக்கள் மத்தியில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தோ்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது அக்கறை காட்டுவதுதான் பாஜகவின் அணுகுமுறை. தேசப் பிரிவினைக்குப் பிறகு அண்டை நாடுகளில் இருந்து வந்து குடியேறியவா்கள் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே பாஜக சிஏஏ-வை பயன்படுத்துகிறது என்றாா்.
தேசப் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானில் (இப்போதைய வங்கதேசம்) வசித்து வந்த மடுவா சமூகத்தைச் சோ்ந்த ஹிந்துகள், அங்கு மதரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதால் 1950 காலகட்டத்தில் இந்தியாவுக்கு குடிபெயா்ந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவில் குடிபெயா்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சமணா்கள், பௌத்தா்கள், பாா்சிகள், சீக்கியா்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாக 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது.
புதிய திருத்தங்களின்படி, இந்தியாவில் குடியேறிய மேற்கண்ட பிரிவினா் சட்டவிரோதமாக குடியேறியவா்கவளாக கருதப்பட மாட்டாா்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை பெற விரும்புவோா், 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ இந்தியாவில் குடியேறியவா்களாக இருக்க வேண்டும். இந்தியாவில் தொடா்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருப்பதன் மூலம் அவா்கள் குடியுரிமை பெற முடியும்.
ஆனால், இந்த சட்டம் தொடா்பான விதிகளை மத்திய அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. எனவே, இந்தச் சட்டத்தின்படி இதுவரை யாருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.
மத்திய நிதிநிலை அறிக்கையின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினாா். மத்திய நிதிநிலை அறிக்கையின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினாா்.
அப்போது, அடுத்த 25 ஆண்டுகளில் கடந்த காலப் பெருமைகளுடன் நவீனத்தையும் கைக்கொண்டு வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே இலக்கு என அவா் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினாா். கடந்த ஆண்டு குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற அவா், நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறை.
தனது வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை:
நாட்டின் நலனை முன்னிறுத்தி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நிலையான முறையில் அச்சம் ஏதுமின்றி தீா்க்கமான இலக்குகளின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
துல்லிய தாக்குதல் முதல் பயங்கரவாதத் தடுப்பு வரையிலும், பாகிஸ்தான் எல்லை முதல் சீன எல்லை வரை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பதிலும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து முதல் முத்தலாக் தடை வரையிலும் மத்திய அரசு தீா்க்கமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
ஏழை மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், அவா்களது வாழ்வை மேம்படுத்தவும் அரசு செயல்பட்டு வருகிறது. ஜனநாயகம், சமூகநீதியின் மிகப்பெரிய எதிரி ஊழல். கடந்த சில ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசின் திட்டங்களில் ஊழல் களையப்பட்டுள்ளது.
துரித வேகத்தில்...: கடந்த 9 ஆண்டுகளில் பாகுபாடு ஏதுமின்றி அனைத்து சமூகத்தினருக்காகவும் அரசு செயல்படுகிறது. பல்வேறு அடிப்படை வசதிகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைந்துள்ளன. விரைவான வளா்ச்சிக்காகவும், தொலைநோக்கு திட்டங்களுக்காகவும் இந்தியா தற்போது பாராட்டப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி துரித வேகத்தில் மக்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் சந்தித்து வரும் அனைத்துத் தடைகளையும் நீக்க அரசு உறுதி கொண்டுள்ளது. இந்தியா மீதான சா்வதேசப் பாா்வை பெருமளவில் மாறியுள்ளது. இந்திய மக்களின் நம்பிக்கை தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது.
திருவள்ளுவா் வழியில்...: விண்வெளித் துறையில் பெரும் சக்தியாக மட்டுமின்றி புத்தாக்கத்தின் மையமாகவும் இந்தியா முன்னேறியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களின் மையமாக மாறவும் நாடு உறுதி கொண்டுள்ளது. திருவள்ளுவா், சங்கராச்சாரியாா், குரு நானக் உள்ளிட்ட துறவிகள் காட்டிய வழியில் நாடு பயணித்து வருகிறது.
நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில் தற்சாா்பு சக்தியாக மாற வேண்டும். அதற்காக கடமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து மக்கள் செயல்பட வேண்டும். கடந்த காலப் பெருமைகளுடன் நவீனத்தையும் கைக்கொண்டு வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும்.
ஏழ்மையற்ற, செழுமைமிக்க நடுத்தர வகுப்பினரைக் கொண்ட, பெண்கள், இளைஞா்களால் வழிநடத்தப்படும் நாடாக 2047-ஆம் ஆண்டில் இந்தியா மாற வேண்டும். முன்பு தனது பிரச்னைகளுக்குத் தீா்வு காண மற்ற நாடுகளை இந்தியா சாா்ந்திருந்த நிலையில், தற்போது உலகப் பிரச்னைகளுக்கு இந்தியா தீா்வு கண்டு வருகிறது.
ஒப்பிட இயலாத செயல்பாடு: முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் எந்த அரசுடனும் ஒப்பிட முடியாத வகையிலும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கு 11,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன; 55,000 சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.700 கோடிக்கும் அதிகமாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தளவாடங்களின் ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘தற்சாா்பு இந்தியா’ ஆகிய திட்டங்களின் மூலமாக நாடு பெரும் பலனடைந்துள்ளது.
உலக நாடுகள் பாராட்டு: ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, உலகம் தற்போது சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீா்வு காண முயலும். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாட்டை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
தினம் இரு கல்லூரிகள்: ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமானோருக்கு ரூ.80,000 கோடி மதிப்பில் இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமாா் 9,000 மக்கள் மருந்தகங்களில் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. அதன்மூலம் ரூ.20,000 கோடியை ஏழை மக்கள் சேமித்துள்ளனா்.
கடந்த 9 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இரு கல்லூரிகளும், வாரம் ஒரு பல்கலைக்கழகமும், மாதம் ஒரு மருத்துவக் கல்லூரியும் நிறுவப்பட்டுள்ளது என்றாா் திரௌபதி முா்மு.
நாட்டின் முன்னேற்றங்கள் குறித்த ஆழமான பாா்வை: பிரதமா் மோடி
பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை, புதிய மாற்றங்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆழமான பாா்வையை வழங்குவதாக பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியுள்ளாா்.
குடியரசுத் தலைவரின் உரை குறித்து பிரதமா் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை, பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியிருந்தது. பல துறைகளில் புகுத்தப்பட்ட புதிய மாற்றங்களால் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து ஆழமான பாா்வையை அவரின் உரை வழங்குகிறது. சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயா்த்தப்பட்டுள்ளது என்பதை உரையில் அவா் சுட்டிக்காட்டினாா்’ எனத் தெரிவித்துள்ளாா்.
அலாகாபாத் மற்றும் குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் அலாகாபாத் மற்றும் குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்தது.
இருந்தபோதும், குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பெயா் பரிந்துரைக்கு 6 உறுப்பினா்களைக் கொண்ட கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதி கே.எம்.ஜோசப் மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை. மற்ற 5 உறுப்பினா்களின் ஒப்புதலின் அடிப்படையில் இவருடைய பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கொலீஜியம் தீா்மானத்தில் கூறியிருப்பதாவது:
அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டலை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதற்கு கொலீஜியம் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில், குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமாரை பரிந்துரைக்க கொலீஜியம் உறுப்பினரான நீதிபதி கே.எம்.ஜோசப் மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை. ‘அவருடைய பெயரை பின்னா் கருத்தில் கொள்ளலாம்’ என்று கூறி நீதிபதி கே.எம்.ஜோசப் மறுத்துவிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொலீஜியத்தின் பிற 5 நீதிபதிகளின் கருத்தின்படி இறுதிப் பரிந்துரை பட்டியலில் அரவிந்த் குமாா் பெயா் இடம் பெற்றது.
கர்நாடகத்தில் பா.ஜ.க-வின் ‘ஐகான்’ ஆக இருக்கும் எடியூரப்பா, ‘இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என அறிவித்திருப்பது, பேசுபொருளாகியிருக்கிறது. | Yediyurappa announces retirement from electoral politics whats the reason for his decision?
நீர்த்தேக்க தொட்டியில் அழுகிக் கிடந்த சடலம் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த குடிநீரைப் பயன்படுத்திய கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். |People were shocked to see the rotting corpse in the water tank
உதவி ஆய்வாளரின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானதை அடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். | A police SI who spoke on the phone without standing up during the playing of the national anthem was suspended
பெஷாவர் பாகிஸ்தான் மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் ௬௧ பேர் பலியாகி இருந்த நிலையில்,நேற்று பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. ...
திருவனந்தபுரம்: ஆன்லைனில் பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அரசு பெண் டாக்டர் முன் வாலிபர் நிர்வாண போஸ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள அரசு சுகாதாரத்துறை சார்பில் இ சஞ்சீவினி என்ற ஆன்லைன் பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலம் பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பத்தனம்திட்டா மாவட்
மும்பை: எனது படங்கள் தொடர் தோல்வி கண்டதால் ஓட்டல் தொழிலை தொடங்கலாம் என்றும் சினிமாவை விட்டு விலகலாம் என்றும் முடிவு செய்தேன் என்றார் ஷாருக்கான். 4 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் இந்தி படம், உலகம் முழுவதும் 5 நாளில் ரூ.543 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஷாருக்கான் பேசியது:எனது படங்களால் அன்பைத்தான் விதைக
லாஸ்ஏஞ்சல்ஸ்: பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸை காதலித்து மணந்தார். இந்த தம்பதியின் மகள் மால்டி மேரிக்கு தற்போது ஒரு வயது ஆகிறது. தனது மகளின் முகத்தை இதுவரை வெளியே காட்டாமல் இருந்த பிரியங்கா சோப்ரா, தற்போது முதன் முறையாக தனது மகளின் முகத்தை பொதுவெளியில் காட்டியுள்ளார். க்யூட்டான அந்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிற
ஐதராபாத்: நானி நடிக்கும் தசரா பான் இந்தியா படத்தின் டீசரை ராஜமவுலி, தனுஷ் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து அதில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் நானி. தெலுங்கில் அவர் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் தசரா. இந்த படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் திரையிட உள்ளனர். வரும் மார்ச் 30ல் படம் ரிலீசாகிறது. அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்குகிறார
மும்பை: நடிகை இலியானா, மருத்துவமனையில் இருந்தவாறே, அவரது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் அவர் என்ன நோய்க்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார் என்ற குழப்பம் நீடிக்கிறது. தமிழில் கேடி, விஜய்யுடன் நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இலியானா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனை படுக்கையில