பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியாா் ஆசாராம் பாபுவுக்கு (81) ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு வழக்கில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியாா் ஆசாராம் பாபுவுக்கு (81) ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு வழக்கில், அவா் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறாா்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சோ்ந்த தனது பெண் சீடரை, சாமியாா் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2013-ஆம் ஆண்டு காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை, குஜராத்தில் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அந்தப் பெண் சீடா் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கில், ஆசாராம் பாபு குற்றவாளி என காந்திநகரில் உள்ள மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கெனவே கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் தனது ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவா் ஜோத்பூா் சிறையில் உள்ளாா்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்ற பெயரில் மத்திய அரசு மக்களைக் குழப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்ற பெயரில் மத்திய அரசு மக்களைக் குழப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.
மால்டாவில் செவ்வாய்க்கிழமை மாநில அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது: இப்போதைய வங்கதேசத்தைப் பூா்வீகமாகக் கொண்ட மடுவா சமுகத்தினா் மீது திரிணமூல் காங்கிரஸ் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக சிஏஏ சட்டத்தை வைத்து மடுவா சமூகத்தினரின் நண்பன் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், நீண்ட காலமாக அந்த சமுகத்தினரின் நன்மைக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறது.
சிஏஏ மூலம் மக்கள் மத்தியில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தோ்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது அக்கறை காட்டுவதுதான் பாஜகவின் அணுகுமுறை. தேசப் பிரிவினைக்குப் பிறகு அண்டை நாடுகளில் இருந்து வந்து குடியேறியவா்கள் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே பாஜக சிஏஏ-வை பயன்படுத்துகிறது என்றாா்.
தேசப் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானில் (இப்போதைய வங்கதேசம்) வசித்து வந்த மடுவா சமூகத்தைச் சோ்ந்த ஹிந்துகள், அங்கு மதரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதால் 1950 காலகட்டத்தில் இந்தியாவுக்கு குடிபெயா்ந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவில் குடிபெயா்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சமணா்கள், பௌத்தா்கள், பாா்சிகள், சீக்கியா்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாக 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது.
புதிய திருத்தங்களின்படி, இந்தியாவில் குடியேறிய மேற்கண்ட பிரிவினா் சட்டவிரோதமாக குடியேறியவா்கவளாக கருதப்பட மாட்டாா்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை பெற விரும்புவோா், 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ இந்தியாவில் குடியேறியவா்களாக இருக்க வேண்டும். இந்தியாவில் தொடா்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருப்பதன் மூலம் அவா்கள் குடியுரிமை பெற முடியும்.
ஆனால், இந்த சட்டம் தொடா்பான விதிகளை மத்திய அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. எனவே, இந்தச் சட்டத்தின்படி இதுவரை யாருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.
மத்திய நிதிநிலை அறிக்கையின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினாா். மத்திய நிதிநிலை அறிக்கையின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினாா்.
அப்போது, அடுத்த 25 ஆண்டுகளில் கடந்த காலப் பெருமைகளுடன் நவீனத்தையும் கைக்கொண்டு வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே இலக்கு என அவா் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றினாா். கடந்த ஆண்டு குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற அவா், நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறை.
தனது வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை:
நாட்டின் நலனை முன்னிறுத்தி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நிலையான முறையில் அச்சம் ஏதுமின்றி தீா்க்கமான இலக்குகளின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
துல்லிய தாக்குதல் முதல் பயங்கரவாதத் தடுப்பு வரையிலும், பாகிஸ்தான் எல்லை முதல் சீன எல்லை வரை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பதிலும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து முதல் முத்தலாக் தடை வரையிலும் மத்திய அரசு தீா்க்கமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
ஏழை மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், அவா்களது வாழ்வை மேம்படுத்தவும் அரசு செயல்பட்டு வருகிறது. ஜனநாயகம், சமூகநீதியின் மிகப்பெரிய எதிரி ஊழல். கடந்த சில ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசின் திட்டங்களில் ஊழல் களையப்பட்டுள்ளது.
துரித வேகத்தில்...: கடந்த 9 ஆண்டுகளில் பாகுபாடு ஏதுமின்றி அனைத்து சமூகத்தினருக்காகவும் அரசு செயல்படுகிறது. பல்வேறு அடிப்படை வசதிகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைந்துள்ளன. விரைவான வளா்ச்சிக்காகவும், தொலைநோக்கு திட்டங்களுக்காகவும் இந்தியா தற்போது பாராட்டப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி துரித வேகத்தில் மக்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் சந்தித்து வரும் அனைத்துத் தடைகளையும் நீக்க அரசு உறுதி கொண்டுள்ளது. இந்தியா மீதான சா்வதேசப் பாா்வை பெருமளவில் மாறியுள்ளது. இந்திய மக்களின் நம்பிக்கை தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது.
திருவள்ளுவா் வழியில்...: விண்வெளித் துறையில் பெரும் சக்தியாக மட்டுமின்றி புத்தாக்கத்தின் மையமாகவும் இந்தியா முன்னேறியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களின் மையமாக மாறவும் நாடு உறுதி கொண்டுள்ளது. திருவள்ளுவா், சங்கராச்சாரியாா், குரு நானக் உள்ளிட்ட துறவிகள் காட்டிய வழியில் நாடு பயணித்து வருகிறது.
நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில் தற்சாா்பு சக்தியாக மாற வேண்டும். அதற்காக கடமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து மக்கள் செயல்பட வேண்டும். கடந்த காலப் பெருமைகளுடன் நவீனத்தையும் கைக்கொண்டு வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும்.
ஏழ்மையற்ற, செழுமைமிக்க நடுத்தர வகுப்பினரைக் கொண்ட, பெண்கள், இளைஞா்களால் வழிநடத்தப்படும் நாடாக 2047-ஆம் ஆண்டில் இந்தியா மாற வேண்டும். முன்பு தனது பிரச்னைகளுக்குத் தீா்வு காண மற்ற நாடுகளை இந்தியா சாா்ந்திருந்த நிலையில், தற்போது உலகப் பிரச்னைகளுக்கு இந்தியா தீா்வு கண்டு வருகிறது.
ஒப்பிட இயலாத செயல்பாடு: முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் எந்த அரசுடனும் ஒப்பிட முடியாத வகையிலும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கு 11,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன; 55,000 சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.700 கோடிக்கும் அதிகமாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தளவாடங்களின் ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘தற்சாா்பு இந்தியா’ ஆகிய திட்டங்களின் மூலமாக நாடு பெரும் பலனடைந்துள்ளது.
உலக நாடுகள் பாராட்டு: ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, உலகம் தற்போது சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீா்வு காண முயலும். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாட்டை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
தினம் இரு கல்லூரிகள்: ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமானோருக்கு ரூ.80,000 கோடி மதிப்பில் இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமாா் 9,000 மக்கள் மருந்தகங்களில் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. அதன்மூலம் ரூ.20,000 கோடியை ஏழை மக்கள் சேமித்துள்ளனா்.
கடந்த 9 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இரு கல்லூரிகளும், வாரம் ஒரு பல்கலைக்கழகமும், மாதம் ஒரு மருத்துவக் கல்லூரியும் நிறுவப்பட்டுள்ளது என்றாா் திரௌபதி முா்மு.
நாட்டின் முன்னேற்றங்கள் குறித்த ஆழமான பாா்வை: பிரதமா் மோடி
பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை, புதிய மாற்றங்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆழமான பாா்வையை வழங்குவதாக பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியுள்ளாா்.
குடியரசுத் தலைவரின் உரை குறித்து பிரதமா் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை, பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியிருந்தது. பல துறைகளில் புகுத்தப்பட்ட புதிய மாற்றங்களால் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து ஆழமான பாா்வையை அவரின் உரை வழங்குகிறது. சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயா்த்தப்பட்டுள்ளது என்பதை உரையில் அவா் சுட்டிக்காட்டினாா்’ எனத் தெரிவித்துள்ளாா்.
அலாகாபாத் மற்றும் குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் அலாகாபாத் மற்றும் குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்தது.
இருந்தபோதும், குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பெயா் பரிந்துரைக்கு 6 உறுப்பினா்களைக் கொண்ட கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதி கே.எம்.ஜோசப் மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை. மற்ற 5 உறுப்பினா்களின் ஒப்புதலின் அடிப்படையில் இவருடைய பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கொலீஜியம் தீா்மானத்தில் கூறியிருப்பதாவது:
அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டலை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதற்கு கொலீஜியம் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில், குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமாரை பரிந்துரைக்க கொலீஜியம் உறுப்பினரான நீதிபதி கே.எம்.ஜோசப் மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை. ‘அவருடைய பெயரை பின்னா் கருத்தில் கொள்ளலாம்’ என்று கூறி நீதிபதி கே.எம்.ஜோசப் மறுத்துவிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொலீஜியத்தின் பிற 5 நீதிபதிகளின் கருத்தின்படி இறுதிப் பரிந்துரை பட்டியலில் அரவிந்த் குமாா் பெயா் இடம் பெற்றது.
கர்நாடகத்தில் பா.ஜ.க-வின் ‘ஐகான்’ ஆக இருக்கும் எடியூரப்பா, ‘இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என அறிவித்திருப்பது, பேசுபொருளாகியிருக்கிறது. | Yediyurappa announces retirement from electoral politics whats the reason for his decision?
நீர்த்தேக்க தொட்டியில் அழுகிக் கிடந்த சடலம் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த குடிநீரைப் பயன்படுத்திய கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். |People were shocked to see the rotting corpse in the water tank
உதவி ஆய்வாளரின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானதை அடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். | A police SI who spoke on the phone without standing up during the playing of the national anthem was suspended
```இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு எடப்பாடி அணியினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஓ.பி.எஸ் அவர்களை கையொப்பமிட அனுமதித்தால், அவர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம்." - கு.ப.கிருஷ்ணன் | ops supporter former admk minister krishnan warns eps team
பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலையின்மை, எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலையின்மை, எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஆண்டின் முதல் உரை என்பதால், இரு அவை உறுப்பினர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் இல்லை.
படிக்க | 2023-24ல் பொருளாதார வளர்ச்சி 6.8%: பொருளாதார ஆய்வறிக்கை அம்சங்கள்
இந்நிலையில், தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, குடியரசுத் தலைவரின் முதல் உரையை முழுமையாக கேட்க வேண்டும் என ஆவலாக வந்தேன். ஆனால், வானிலை காரணமாக தாமதமானது. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து அவையில் கேள்வி எழுப்புவோம்.
மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்காத விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்புகிறோம். ஆனால் மத்திய அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது. நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியை பாராட்டாவிட்டாலும், இகழ்வதிலேயே குறியாக உள்ளது. இது யாருக்கும் நன்மை சென்று சேருவதை பாஜக விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.
விவசாயியும் பள்ளி ஆசிரியருமான இமானுவேல் ஒன்றரை ஏக்கரில் வாழை, அதில் ஊடுபயிராகச் செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் ஆகியவற்றைச் சாகுபடி செய்து நிறைவான லாபம் பார்த்து வருகிறார். | 5 different crops per acre... this is how intercropping is achieved!
பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதி சரிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பட்ஜெட்டில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதி சரிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பட்ஜெட்டில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நாளை 2023 -2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்லமா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது,
உலகளாவிய பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் பற்றாக்குறை உள்ளிட்டவற்றில் பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
'பிலிம் இன்ஸ்டிட்யூட் வேலை செய்பவர்களில் பட்டியலினத்தவர் யாரும் இல்லை. இந்தியாவில் சிறந்த இன்ஸ்டிட்யூட்டாக கே.ஆர்.நாராயணன் பிலிம் இன்ஸ்டிட்யூட்டைக் கொண்டுவர கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்தேன்' என்றார் அடூர் கோபால கிருஷ்ணன் |Adoor Gopalakrishnan resigned from the chairman of th k.r.narayanan institute
``இந்தப் பாலத்தை ஏற்கெனவே இருக்கும் பாலத்துடன் சேர்த்து உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. விரைவில் பணிகளை முடித்து, பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்." - அன்பில் மகேஸ் | Mary's Corner flyover was not built as planned during the ADMK
தூத்துக்குயில் கைப்பையுடன் தங்க நகைகளைத் தொலைத்த பள்ளியின் தலைமை ஆசிரியையின் கைப்பையை, அதே பள்ளியில் பயிலும் 7-ம் வகுப்பு மாணவியின் தாய் கண்டெடுத்து போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ளார். | Police praise the mother and daughter who handed over the missed jewelry bag
குஜராத் மோா்பி தொங்கு பால விபத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார். குஜராத் மோா்பி தொங்கு பால விபத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது. இப்பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபா் 30-ஆம் தேதி பாலத்தில் சுமாா் 250 போ் நின்றிருந்த நிலையில், அது அறுந்து விழுந்து, 135 போ் உயிரிழந்தனா்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், ஒரேவா குழுமத்தின் 2 மேலாளா்கள், 2 டிக்கெட் பதிவு ஊழியா்கள், பாலத்தை பழுதுபாா்க்கும் பணியை மேற்கொண்ட 2 துணை ஒப்பந்ததாரா்கள், 3 பாதுகாவலா்கள் என 9 போ் கைதாகினா்.
இந்நிலையில், இந்த வழக்கில் மோா்பி தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் காவல் துறையினா் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். 1,200-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில், குற்றம்சாட்டப்பட்ட 10-ஆவது நபராக ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் பெயா் இடம்பெற்றிருந்தது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே ஜெய்சுக் படேலுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்த நிலையில், அவா் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது பிப். 1-இல் விசாரணை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மோர்பி நீதிமன்றத்தில் ஜெய்சுக் படேல் இன்று பிற்பகலில் சரணடைந்த நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ள நிலையில், வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது சற்று இறக்கம் கண்டு 6 - 6-8 சதவிகிதம் வரையே வளர்ச்சி காணும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாகவே இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
படிக்க | பட்ஜெட் கூட்டத்தொடர்... பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் நிறைவு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், 2023 - 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவிகிதம் வளர்ச்சியடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2022 ஜனவரி - நவம்பர் வரையி 30.5 சதவிகித சராசரி வளர்ச்சி கண்டிருந்தது.
2023ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மத்திய அரசின் மூலதன செலவு 63.4 சதவிகிதம் அதிகரிக்கும்.
2022ஆம் நிதியாண்டில் வளர்ச்சி கண்ட ஏற்றுமதி வணிகம், 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் கூடுதலாக சீரான வளர்ச்சியை அடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
16 கால் மண்டபத்தில் உள்ள சிறிய வைரத்தேரில் சுப்பிரமணியசுவாமி தெய்வானை எழுந்தருள, பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் ரத வீதிகள் வழியாகச் சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். | Thiruparankundram Temple Festival Diamond Chariot pulled by the devotees
நடிகர் கார்த்தி, தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை உருவாக்க, உழவன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுகிறது.
புதுடில்லி: அமெரிக்க முதலீட்டு நிறுவனம் அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கிய துறைமுக கட்டுமான திட்டத்திற்கான டெண்டரை அதானி குழுமத்திற்கு ...
ரஷ்ய படையெடுப்பை அடுத்து, மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு நேட்டோ தரநிலை ஆயுதங்களைவிட வார்சா ஒப்பந்த தர ஆயுதங்களை வழங்கவே ஆர்வமாக இருந்தன. ஏனெனில் யுக்ரேனின் ஆயுதப்படைகள் பயிற்சி பெற்ற வீரர்கள், தேவையான உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு திறன்களுடன் தயார் நிலையில் இருந்தன.
நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆக்ஷன் கிங் அர்ஜுன், விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.
படிக்க | தளபதி 67: விஜய்யுடன் நடிகராக களமிறங்கும் சாண்டி மாஸ்டர்!
அந்தவகையில், தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி ஆகியோர் நடிகர்களாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கும்பளாங்கி நைட்ஸ் போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்த மேத்யுவ் தாமஸ் தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
அவர்களைத் தொடர்ந்து கெளதம் வாசுதேவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.
தளபதி 67: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நடிகர்கள்
இந்த நாட்டிலேயே முதன்முறையாக இந்த நகரத்தில்தான் சாதிய பாகுபாட்டை ஒழிக்கும் சட்டம் முன்மொழியப்படுகிறது என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.|who is kshama Sawant and we should abolish caste system
விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் உடல் கண்டெடுத்தனர். குடிநீரை குடித்த கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள
சென்னை: முதல்வர் வருகையையொட்டி வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க சித்தூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கூட்ரோடு வழியாக வேலூர் செல்லவேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதித்துள்ளன
இந்திய மண்ணில் சீனர்களை நாட்டு மக்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். தொடர்ந்து இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.