கேன்ஸ்: ‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கிய நிலையில், பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை என்று நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை குறிப்பிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியா சார்பில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் கமல்ஹாசன
பாரிஸ்: இந்திய திரைப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளார். மேலும் கதை எழுதும் விதம் மற்றும் விநியோகம் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என நினைக்கிறேன் என கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளா
கொழும்பு: இலங்கையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உட்பட 4 பேருக்கு வரும் 25ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்டதாக 4 பேரும் கைது செய்யப்பட்டன
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, மகிந்த ஆதரவாளர்
பீஜிங்: சீன விமான விபத்தில் 133 பேரின் சாவுக்கு, அந்த விமானத்தின் விமானியே காரணம் என்றும், அவர் வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கி விபத்து ஏற்படுத்தியதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சீன போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 133 பேரும் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த தகவல், அனை
டெக்சாஸ்: அமெரிக்காவில் இந்திய அமெரிக்க மாணவர் கொடுமைப்படுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெக்சாஸில் உள்ள (COPPELL MIDDLE SCHOOL) உணவு கூடத்தில் அமர்ந்திருந்த 14 வயது இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க மாணவர் எழுந்திரிக்க சொல்லி மிரட்டுவதும், பின்னர் மாணவர் கழுத்தை தனது கைகளால் நெரித்து இழுத்து தரையில் தள்ளும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. நிகழ்வின் போது
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மற்றொரு நாட்டின் உதவி இல்லாமல் நிலைத்து நின்றுவிட முடியாது. காரணம், அனைத்து தேவைகளையும் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்திட முடியாது. ஏதோ ஒரு வழியில், ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டை சார்ந்தே இருக்கிறது. உதாரணத்திற்கு நெல், கோதுமை, உணவு தானியங்கள் ஒரு பூமியில் விளையும், எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்கள் ஒரு பூமியில் உற்பத்தி செய்யப்படும், ராணுவ தொடர்பான நவீன ஆயுதங்கள், போ
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நடந்த போராட்டம் மற்றும் வன்முறையால் கடந்த 9ம் தேதி மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், நாட்டை ஆட்டி படைக்கும் உச்சப்பட்ச அதிகாரத்தை கையில் வைத்துள்ள அதிபர் கோத்தபய
கீவ்: மரியுபோல் தொழிற்சாலையில் பதுக்கி ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்ட 260க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் பலத்த காயத்துடன் ரஷ்ய படையிடம் சரணடைந்தனர். ரஷ்யா - உக்ரைன் போர் 3 மாதமாக தொடரும் நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்ய படைகள், நேற்று முன்தினம் கார்கிவ் நகரில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இருப்பினும், துறைமுக நகரமான மரியுபோல், கருங்கடல் பகுதியில் உ
லண்டன்:உலகின் நம்பர்-1 பணக்காரரான, அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கப் போவதாக அறிவித்தார். ரூ.3.3 லட்சம் கோடியில் டிவிட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தம் உறுதியாகி விட்டதாக கூறினார். டிவிட்டர் நிர்வாகமும் மஸ்க்கின் விலை பேரத்தை ஏற்றுக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்காக, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஒரு பகுதியை விற்று பணம் திரட்டு
கிங்ஸ்டன்: ஜமைக்காவில் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சாலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஜமைக்கா நாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் ஜமைக்கா கவர்னர் ஜெனரல் பேட்ரிக்குடன் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அந்நாட்ட
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.92 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,292,252 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 523,744,953 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 493,621,141 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,860 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர
கேன்ஸ்: 75வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரையுலகினருடன் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேசியதாவது: இந்தியாவும், பிரான்சும் தூதரக உறவுகளின் 75வது ஆண்டி
வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது.சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலு
கனடா : ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை கனடா அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது பல தடைகளை கனடா விதித்த நிலையில், கனடாவிற்குள் நுழைய புதினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளத
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார். இன்றைய கூட்டத்தில் மாஜி பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் போராட்டத்தால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது குடும்பத்தினர் பதவி விலகினர். இதையடுத்து, நாட்டின் 26வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்த நிலையில் இலங்கையில்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கைனத் இம்தியாஸ் (29) என்பவரது திருமண போட்டோஷூட் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மார்ச் 30ம் தேதி தொழிலதிபர் அர்ஷ்மந்த் அலியுடன் திருமணம் செய்து கொண்டபோது எடுக்கப்பட்ட திருமண போட்டோஷாப் புகைப்படங்களில், கிரிக்கெட் பேட், பந்துடன் மணக்கோலத்தில் அணிகலன்கள் அணிந்தவாறு அவர் கொடுத்த ‘போஸ்’ அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகர் பதவிக்கு நடந்த தேர்தலில் அஜித் ராஜபக்சே 109 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அஜித் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ரோஹிணி 78 ஓட்டுகள் மட்டும் பெற்று தோல்வியை தழுவினார
கொழும்பு: இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசின் பொருளாதார நலன்சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவு. ரணிலின் ஆட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைக்கு எதிராக அமைந்தால் ஆதரவு திரும்ப பெறப்படும் எனவும் சஜித் கூறியுள்ளார
இஸ்லாமாபாத் : உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக் கொல்ல சதி நடக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அப்போதைய பிரதமர் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. தனது அரசை கவிழ்த்ததின் பின்னணியில், அமெரிக்கா உள்ளதாக கூறினார். தற்போது அவர் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகிறார். அதேநே
கொழும்பு: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முடிவு எடுத்துள்ளது. நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவே ரணில் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக விளக்கம் அளித்துள்ளார். இலங்கை
ரஷ்யா: ரஷ்யாவில் இருந்து வெளியேற அமெரிக்காவின் பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் அந்நாட்டிலிருந்து வெளியேற மெக்டொனால்ட்ஸ் முடிவு செய்துள்ளத
நொய்டா: தலைநகர் டெல்லி அருகே அமைந்துள்ள நகரமான நொய்டாவின் செக்டார்-104ல் அமைந்துள்ள உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதற்காக ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உணவகத்தில் உணவு சப்ளை செய்வதற்காக 2 ரோபோக்கள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ரோபோக்கள், வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவுகளை டேபிளுக்கு கொண்டு வந்து கொடுக்கின்றன. இதுகுறித்து உ
கொழும்பு: இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் உரையாற்றி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, நமது நாட்டின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இன்று நாட்டு மக்
நியூயார்க்: கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வடகொரியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று உருவாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல் முறையாக வடகொரியா தொற்று பாதிப்பை உலகிற்கு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு க
இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும் என்று முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷித் அகமது, ஆளும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சரும், அவாமி முஸ்லிம் லீக் (ஏஎம்எல்) தலைவருமான ஷேக் ரஷித் அகமது, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் அந்நாடு மிகப்பெரிய சவ
லும்பினி: ‘இந்தியா, நேபாளம் இடையேயான உறவு இமயமலைப் போல அசைக்க முடியாத வலுவானது’ என லும்பினியில் பிரதமர் மோடி பேசினார். நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி புத்த பூர்ணிமாவையொட்டி ஒரு நாள் அரசுமுறை பயணமாக நேபாளம் சென்றார். புத்தரின் பிறப்பு, ஞானோதயம், இறப்பு ஆகிய மூன்றும் மே மாதம் பவுர்ணமி நாளில் புத்த பூர்ணிமாவாக பவுத்தர்களால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேபாளத்தில்
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.89 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,289,402 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 522,740,138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 492,784,166 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,188 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர
பாரீஸ் :பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல் 28ம் தேதி வரை நடைபெறும் விழாவில் மாதவன் நடிப்பில் உருவான Rocketry உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர்.மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா
வாஷிங்டன் : கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49 கோடியே 27 லட்சத்து 84 ஆயிரத்து 166 பேர் குணமடைந்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நட