இந்தியாவுக்காக விளையாடிய அச்சந்த ஷரத் கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறுகிறார்கள். இது இன்றைய போட்டிகளில் இந்தியா வென்றுள்ள 9ஆவது பதக்கம். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர், அரசுப் பணித்தேர்வு எழுதச் சென்றவர்கள் என்றும் வழிப்போக்கர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?
தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணை வளையத்தில் அந்த நிதி நிறுவனம் உள்ளது. அதன் இயக்குநர்கள் தலைமறைவாகி விட்டனர். அதனால் இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அழுத்தத்தால் வினோத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
இந்திய தேசிய கொடியை அடையாளப்படுத்தும் மூவர்ணத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடைகள் சில கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால், இந்த ஆடையை இடுப்புக்கு கீழே அணிவது குற்றம் என்கிறது இந்திய உள்துறையின் திருத்தியமைக்கப்பட்ட புதிய விதி. இந்த மூவர்ண கொடியை வீடு தோறும் ஏற்றவும், அதை பயன்படுத்த சில தளர்வுகளையும் இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
SSLV-D1 பணியானது 135 கிலோ எடையுள்ள EOS-02 என்ற செயற்கைக்கோளை, சுமார் 37 டிகிரி சாய்வில், பூமத்திய ரேகைக்கு சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள குறைந்த புவி வட்டப்பாதையில் நிலைவைப்பதாகும். மாணவிகளின் பங்களிப்புடன் உருவான AzaadiSAT என்ற செயற்கைக்கோளையும் எஸ்எஸ்எல்வி டி1 சுமந்து சென்றது.
“பின்லேடனை பிடிக்கவும் கொல்லவும் அவரது தலையை பனிப் பெட்டியில் கொண்டு வரவேண்டும்" என்று 9/11 தாக்குதலைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதியன்று கேரி ஷ்ரோனுக்கு சிஐஏ உத்தரவிட்டது.
கொடியேற்றுவது தொடர்பான விதிகள் முன்பு இருந்ததை விட தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், நீங்கள் கொடியேற்றும் போது இந்த 10 அம்சங்களை கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு பொண்ணு ஒரு முடிவு எடுக்கறதுக்கு, அவ மட்டுமே காரணம் இல்ல...அவளோட வசதி, அவளுக்கு அக்கம் பக்கம் இருக்கறவங்க பேசற பேச்சு, அவளோட சூழல்னு எல்லாமேதான் காரணம்... இதல்லாம் சேத்துதான் என்ன அந்த முடிவு எடுக்க தள்ளுச்சு..எனக்கு ரொம்ப மனஅழுத்தம் இருந்துச்சு...
ஆகஸ்ட் 4-ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி எந்த விதமான முன்னறிவுப்புமின்றி கோயிலை அகற்றுவதற்கு வந்துவிட்டார்கள். இந்த வழக்கு தொடர்ந்தவர் அவருடைய அடுக்குமாடி குடியிருப்பை விற்பதற்கு கோயில் இருப்பது இடையூராக இருப்பதால் அதனை ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்ற வேண்டும் என உத்தரவு பெற்றுள்ளார் என்று பரவுகிறது செய்தி.
ஆட்டோவால் மோதி நீதிபதி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாா்க்கண்டில் ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமய சார்பற்ற இந்தியாவை இந்து ராஷ்டிரத்தின் திசையில் கொண்டு செல்வது பற்றி ஒருவர் பேசினால், அரசியலமைப்பின் அடிப்படையில் இதுபோன்ற விஷயங்கள் கற்பனையாக மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால், இன்றும் அப்படியே இருக்கிறதா?
காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. அதன் முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
"இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை கவனத்தில் கொண்டு" இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
நகரங்கள் அல்லாத தொலைதூர பகுதிகள் மற்றும் செல்பேசி சிக்னல் சரிவர கிடைக்காத பகுதிகளில்ல் கூகுள் மேப் உதவியுடன் சாலைகளில் பயணம் செய்யும்போது இத்தகைய சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சீல் வைப்பதை கண்டித்து இன்று தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் டாக்டர் சி. என். ராஜா தெரிவித்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக பிரசவ வலியுடன் ஆட்டோ ஓட்டுவதும் பிரசவம் முடிந்த கையுடன் வீட்டுக்கு வரும்போதும் கூட தானே ஆட்டோ ஓட்ட வேண்டிய சூழல் இருந்ததாகவும், தன் வாழ்க்கையில் நடந்தவற்றை நினைவுகூர்கிறார் ஹேம்லதா.
2ஜி அலைக்கறை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது குறித்த ஒரு புகைப்படத் தொகுப்பு.
படுக்கையறையை முடிந்தவரை இருட்டறையாக வைத்துக்கொள்ள வேண்டும். மிகக்குறைவான வெளிச்சம் தரும் விளக்குகள் மற்றும் திரைச்சீலைகளை முறையாக பயன்படுத்தவது ஆகியவற்றின் மூலம் இதை சாதிக்கமுடியும்.
“நான் உனக்கு முன்பே செல்வேன். நான் போகும்போது நீ அழக்கூடாது. திருமணத்தின்போது மேளதாளங்களோடும் வாத்தியங்களோடும் வந்ததைப் போலவே என்னை கல்லறைக்கும் நீ கொண்டு செல்ல வேண்டும்.” - உயிரிழந்த மோனிகா சோலங்கியின் வார்த்தைகள் இவை.
தாய்ப்பால் கொடுப்பதில் நிறைய சந்தேகங்கள் இருப்பதைப் போலவே, குழந்தை பிறந்து மூன்று அல்லது ஆறு மாதங்களில் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்போதும் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்று நினைக்கும்போது அதற்கு பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் உதவுகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவுடனான முக்கிய ஒத்துழைப்புகளை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்திருக்கிறது.
சோனியா காந்தியிடமும் ராகுல் காந்தியிடமும் பல மணி நேர விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி முடித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் வெளி வருகின்றன. அப்படியொரு நிலை வந்தால் யார் அந்த கட்சியின் அடுத்த தலைவர் என்ற விவாதம் காங்கிரஸ் கட்சிக்குள் தீவிரமாக நடந்து வருகிறது.