பேரறிவாளனைத் தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வரும் 23-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-வது ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இன்று (புதன்கிழமை) பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் செல்லும் கப்பலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பேச வாய்ப்பு கொடுக்காததால் திமுக கவுன்சிலர்கள் மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியின் ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாக இந்து மகா சபா புகார் கூறி உள்ளது. இவற்றை மீட்டெடுக்கும்படி வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி கடிதம் எழுதியுள்ளார்.
பேரறிவாளன் தீர்ப்பு தொடர்பான பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு, மீசையும் இல்லையா என்று கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளார் திமுக எம்பி செந்தில் குமார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மூன்றாம் பாலினத்தவருக்காக மாநகராட்சி பிரத்யேக கழிப்பறையைக் கட்டி வருகிறது. இதேபோல் பஸ்நிலையம் மற்றும் பொதுஇடங்களிலும் கழிப்பறைகளை அமைக்க இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியினர் நாளை (மே 19) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அவரவர் பகுதியில் உள்ள முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு அறப்போராட்டம் நடத்த வேண்டும் என்று மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
"பேரறிவாளன் விடுதலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி. இது முழுக்க முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றிதான்" ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் மற்ற 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்களோடு கலந்துபேசி அவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘திருவாலங்காடு-அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட திருவள்ளூர்-அரக்கோணம் தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன
தகவல் பெறும் உரிமை தொடர்பாக மாநில தகவல் ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவிட்டும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் உடுமலை மின்வாரியத்தின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
முதுநிலை மருத்துவப் படிப்பு ‘நீட்’ தேர்வுக்கான தமிழக விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சருக்கு தருமபுரி எம்பி அவசர கடிதம் அனுப்பியுள்ளார்
அரசு ஊழியர்களுக்காக சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ.452.94கோடியில் 1,891 வாடகை குடியிருப்புகள் கட்டும் பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சிஎஸ்.முருகன் ஆய்வு செய்தார்.
"மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில், மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிகக் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் என்று பேரறிவாளனை விடுதலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பில், ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் என்று பாஜக தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை தூத்துக்குடியில் இருந்து தோணிகள் மூலம் அனுப்பி, நலிவடைந்து வரும் பாரம்பரிய தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என, தோணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தியை 25 சதவீதத்திலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்