திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காலையில் ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டு வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றபட்டது. தொடர் மழையால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாக உயர்த்தப்பட்டத
டெல்லி: சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்யுமாறு நாட்டின் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், இதர வேளாண் பொருள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார
புக்கரெஸ்ட்: சென்னையை சேர்ந்த 16 வயது பிரணவ் வெங்கடேஷ், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார். ருமேனியாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வென்று, கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றார். இந்தியாவிலேயே அதிக கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளத
காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றது. இந்திய வீரர்கள் எல்தோஸ் பால் 17.03 மீ., அப்துல்லா அபுபக்கர் 17.02 மீ. தூரம் கடந்த முறையே தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 16 தங்கம் உட்பட 45 பதக்கங்கள் கிடைத்துள்
காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் நடை போட்டியில் சந்தீப் குமார் வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 10,000 மீட்டர் நடை போட்டியில் 38:42.33 நிமிடங்களில் இலக்கை கடந்து 3-வது இடத்தை சந்தீப் பிடித்துள்ளா
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியில் இருந்து 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. 23,000 கன அடி நீர் நீர்மின் நிலையம் வழியாகவும், 1.07 லட்சம் கன அடி நீர் 16 மதகு வழியாக வெளியேற்றப்படுகிற
காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்றார். மகளிர் பிரிவில் 60 மீட்டர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி வெண்கலம் வென்றுள்ளார். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 16 தங்கமும் உட்பட 47 பதக்கங்கள் கிடைத்துள்
காமன்வெல்த்: இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியானது. ஆடவருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், லக் ஷயா சென் மோத உள்ளனர். பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி என 2 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ள
காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா, பெனான்ல்டி ஷுட் அவுட்டில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 41 பதக்கங்கள் கிடைத்துள்
காமன்வெல்த்: காமன்வெல்த் போட்டி மகளிர் குத்துச் சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நித்து தங்கம் வென்றார். இங்கிலாந்து வீராங்கனை ஜேட் ரெஸ்ட்டானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி நித்து கங்காஸ் வெற்றி பெற்றா
சென்னை: சென்னை கத்திபாரா அருகே சாலை வழிகாட்டி பலகை கீழே விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது வழிகாட்டி பலகை விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. வழிகாட்டி பலகை விழுந்ததில் அந்த வழியாக வந்த அரசு மாநகர பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தத
ஈரோடு: கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க மருத்துவ அதிகாரிகள் வந்துள்ளனர். மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி, துணை இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தன
சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் ஆர்காடி வேர்க்கோவிச் தேர்வாகியுள்ளா
வேலூர்: காட்பாடி அருகே சேவூரில் ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் முகவர் வினோத்குமார் (28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐ.எப்.எஸ். நிறுவனத்துக்கு முகவர் வினோத்குமார் ரூ.50 லட்சம் வசூலித்து கொடுத்துள்ள நிலையில் தற்கொலை செய்துள்ளார். பணம் செலுத்தி சில மாதங்கள் ஆன நிலையில் 2 மாதமாக வட்டித் தொகை வழங்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பணம் கொடுத்தவர்கள் வினோத்குமாரிடம் வட்டித் தொகை கேட்டு வந்த நிலையில் த
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.15 லட்சத்திலிருந்து 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் மின் நிலையம் வழியாக 23,000, 16 கண் மதகுகள் வழியாக 87,000 என 1.10 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.06 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.56 டிஎம்சி மற்றும் காளவாய் பாசனத்திற்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வீக்க மாறுபாடு காரணமாக நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள
சென்னை: சீன கப்பல் இலங்கை வருவது தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அன்புமனி தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீன கப்பல் இலங்கை வருவது தடுக்கப்பட்டது. சீனாவின் யுவான் வாங்-5 உளவுக்கப்பல் அம்பன்தோட்டா வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. ஒப்பந்தத்தை இலங்கை அரசு மதித்து நடப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமனி கூறியுள்ளா
டெல்லி: வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் கூட்டத்தில் தேசியக்கல்வி கொள்கை, நகராட்சி நிர்வாகம் பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளன
நீலகிரி; தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 13 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர் மழையால் மேல் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட 13 அணைகளும் நிரம்பி உள்ளது. அவலாஞ்சியில் கனமழையால் அணைகள் நிரம்பியதை அடுத்து மின்உற்பத்தி அதிகரிப்பு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ள
சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை homesec@tn.govt.in என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 12-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ள
சென்னை: 33-வது கொரோனா தடுப்பூசி முகாமில் காலை 11.30 மணி வரை 19,195 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1,12,207 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். காலை 11.30 நிலவரப்படி 2,38,614 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட
திருவனந்தபுரம்: திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என பினராயி விஜயன் புகழ்ந்துள்ளார். கலைஞரின் வாழ்வும், நினைவும் அரசியலமைப்பை பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் என பினராயி விஜயன் கூறியுள்ளார். கலைஞரின் நினைவு நாளையொட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில் அஞ்சலி செலுத்தினா
அமராவதி: எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. EOS-02, AzaadiSAT ஆகிய செயற்கைக் கோள்களை காலையில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது. செயற்கைக் கோள்களில் இருந்து சிக்னல்களை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளா
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கடந்த 31- ம் தேதி தேர் கவிழ்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ராஜகுமார் (64) உயிரிழந்துள்ளார். திருக்கோகர்ணத்தில் ஜூலை 31-ம் தேதி பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் மூதாட்டி ராஜகுமாரி உள்பட 9 பேர் காயம் அடைந்தன
தென்காசி: 6 நாட்களுக்கு பிறகு குற்றால மெயின் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆபத்தான பகுதியில் யாரும் சென்றுவிடாதபடி தடுப்புக் கயிறு கட்டி பாதுகாப்புடன் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள
பிர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று இந்திய வீரர் அவினாஷ் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் 1998 முதல் 2018 வரை கென்ய வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று இந்திய வீரர் அவினாஷ் வரலாற்றை மாற்றி எழுதினா
சென்னை: கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்த பேரணியானது ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கலைஞரின் நினைவிடம் வரை நடைபெறுகிற
சென்னை: கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் நினைவிடத்தில் மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தின