இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள யுவ மோர்ச்சா கூட்டத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பங்கேற்கிறார் எனத் தெரிவித்திருந்தார் அம்மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர். இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 16 வயதான ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தோனியின் பார்வைக்கு சென்றுள்ளது. அதை சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டது டெல்லி கேபிடல்ஸ் அணி.
சென்னையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்துவதற்கான தமிழக அரசின் கொள்கை அளவிலான இசைவு கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது அந்த அணி
ஆறாவது முறையாக இத்தாலி ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச். இது நடப்பு ஆண்டில் அவர் வென்றுள்ள முதல் சாம்பியன் பட்டமாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை புகழ்ந்துள்ளார் தோனி. அந்த வீரர் நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.
மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கான மூன்று அணிகளில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பட்டியலை அனைத்திந்திய மகளிர் தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது. இந்த தொடர் வரும் 23 முதல் 28 வரையில் நடைபெறவுள்ளது.
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில், போட்டி நடைபெற உள்ள விடுதியில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ
மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மின்தடை காரணமாக DRS ரிவ்யூ சிஸ்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சென்னனை வீரர் டெவான் கான்வே.
"ஜெனரேட்டர் மூலம் கிடைக்கும் மின்சாரம் மைதான விளக்குகளுக்கு மட்டும் தானா?" என பவர்-பிளே ஓவர்களில் ஏற்பட்ட மின் தடை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.
மான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட கிளப் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான செர்ஜியோ அகுரோவுக்கு சிலை நிறுவியுள்ளது அந்த அணி. இது கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
"விராட் கோலிக்கு பேட்டிங்கில் ஆலோசனை சொல்வதென்பது சூரியனுக்கே டார்ச்லைட் ஒளியை காட்டுவது போன்றது" என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.
"மருத்துவ ஆலோசனையின் படியே ஜடேஜா விடுவிக்கப்பட்டுள்ளார். மற்றபடி வேறெதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல்லின் திருமண வரவேற்பு விழாவில் ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் விராட் கோலி. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.