டேராடூனில் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் அங்கு அடித்து உதைக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் மழையால் சேதமடைந்த பகுதிகளை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார்.
அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், இதுவரை 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய உயிர் எரிபொருள் திட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (18/05/2022) ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத்தின் மோர்பியில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.
தில்லியில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருவதால் அங்குள்ள தேசிய உயிரியல் பூங்காவில் வனவிலங்குகளுக்கு வெப்பத்தை தணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தில்லி முன்ட்காவில் நேரிட்ட தீ விபத்தின் போது, ஒரு நொடி கூட தாமதிக்காமல், தனது கிரேன் மூலம் 50க்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறார் தயானந்த் திவாரி.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி ஞானவாபி மசூதி வளாகத்தில் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், அளவிடும் பணி திங்கள்கிழமை 3-ஆவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், தெஹ்ரிக்-இ-தலிபானை (டிடிபி) சேர்ந்த பயங்கரவாதிகள் 30 பேரை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.