டெல்லி: டெய்லிஹன்ட் மற்றும் ரெட் எப்எம் இணைந்து பேச்சு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கும் வைப்செக் நிகழ்ச்சி Goafest 2022ல் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. கோவாவில் மே 5 முதல் மே 7 வரை Goafest நடந்தது. இணையதளம், செயலி, சமூக வலைதளம் வழியாக சந்தைப்படுத்துதலில் புதுமுறையை கையாண்டவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. ‛தி அட்வர்டைசிங் கிளப் ஏற்பாடு
முல்லைத்தீவு: இலங்கையின் முள்ளிவாய்க்காலில் 13 அண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் நினைவாக பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவஞ்சலி செலுத்தினர். அதேபோல் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு நடைபெற்றது. இதில் சிங்களரும் பங்கேற்றனர். இலங்கையின் பூர்வகுடிகளான ஈழத் தமிழர்கள் தமிழீழம் தனி நாடு
ஜோலார்பேட்டை: 31 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தனது ஜோலார்பேட்டை வீட்டில் உறவினர்களை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீரில் நனைகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிசசந்திரன் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தனர். இந்த நிலையில் பேரறிவாளன்
ஜோலார்பேட்டை: நல்லவர்கள் வாழ்வதும் கெட்டவர்கள் வீழ்வதும் என்பதே இயற்கையின் நியதி என பேரறிவாளன் முதல்முறையாக தனது விடுதலைக்கு பிறகு பேட்டி அளித்தார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையையும் தாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின்படி
பனாஜி: கோவா தனியார் விடுதியில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட நிலையில் அவரை கொலை செய்ததாக நண்பர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ‛கூகுள்பே மூலம் துப்பு துலக்கி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பாண்டா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் விர்னோத்கர் . இவர் மே மாதம் 9ம் தேதி கோவாவில் உள்ள
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா இன்று விசாரிக்க உள்ளனர். திங்களன்று அந்த மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கிடைத்ததாக ஹரிஷங்கர்
ஒரு மின் நிறுவனத்தில் பணியாற்ற சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு விசாவைப் பெறுவதற்காக 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ப.
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை இந்தியா நிராகரித்துள்ள நிலையில் ‛‛இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களி்ல் மூக்கை நுழைக்காதீங்க. இந்த தீர்மானம் கேலிக்கூத்தானது. இதை நிராகரிக்கிறோம். முதலில் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்த்துவிட்டு எல்லை தாண்டும் தீவிரவாதத்தை நிறுத்துங்கள் என இந்தியா விளாசியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு
பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம் என்று கருதுவதாக அமெரிக்க போக்குவரத்து துறை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் 21ம் தேதி சீனாவில் மிகப்பெரிய விமான விபத்து ஒன்று ஏற்பட்டது. சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்படாத மிக மோசமான விபத்து இது என்று
மாஸ்கோ: உக்ரைன் போர் இரு மாதங்களைக் கடந்து தொடரும் நிலையில், இப்போது இந்த போரே ரஷ்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். இறுதியில் போரை ஆரம்பித்தது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்துத் தாக்குதலைத் தொடங்கியது. இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்கள் மட்டுமே தாக்குதல்கள் எதுவும்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்ஓ குடிநீர் வினியோக நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த 15 நாளில் வடஇந்தியர்கள் 2 பேர் பிக்கப் வேன், ரூ.2 லட்சம் பணம் மற்றும் பிற பொருட்களை திருடி சென்றனர். மேலும் எங்களை பிடிக்க முடியாது என அவர்கள் முதலாளிக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் கோபி
சென்னை: மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதில் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறது சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கி வரும் மெட்டா நீட் அகாடமி. நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ஆம் தேதி எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற இருக்கிறது நீட் தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர நீட் தேர்வில் அதிக
போபால்: மத்திய பிரதேசத்தில் வீட்டை விற்பனை செய்யும் நோக்கத்தில் தந்தையை அடித்து விரட்டிய மகனுக்கு நீதிமன்றம் விசித்திர தண்டனை வழங்கியது. அனைவரின் கண்முன்னே தந்தையின் பாதங்களை கழுவ அறிவுறுத்திய நீதிமன்றம், வீட்டை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என மகனுக்கு உத்தரவிட்டது. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சில வித்தியாசமான தீர்ப்புகள் வழங்கப்படுவது உண்டு. மேலும் தீர்ப்புகளின் போது நீதிபதிகள்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை உச்சியில் உள்ள ரூப்கண்ட் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மர்மம் இன்னும் விலகாமலேயே உள்ளது. உத்தராகண்டின் குமான் பிரிவுக்கு உட்பட்ட இமயமலைப் பகுதியில் ரூப்கண்ட் என்ற ஏரி அமைந்துள்ளது. இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! கடல் மட்டத்திலிருந்து 500
பனாஜி (கோவா) : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கோவாவில் நடைபெறும் பல் மருத்துவர்கள் மாநாட்டில் உரையாற்றியுள்ளார். தடயவியல் படிப்புகளை மேற்கொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன், அந்தத் துறையில் அரசு ஊழியராகவும் பணியாற்றியுள்ளார். ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி... ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான் தடயவியல், கு
மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தனது 69வது வயதில் தந்தையாக போவதாகவும், அவரது ரகசிய காதலியான முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கணை அலினா கபேவா கர்ப்பமாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி மாத இறுதியில் துவங்கியது. தற்போது 3வது மாதத்தை நெருங்க
அகர்த்தலா: திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க இருக்கிறார். ஆளுநர் மாளிகையில் அவரின் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது. இவருடன் புதிய அமைச்சர்களும் மீண்டும் பதவி ஏற்க உள்ளனர். 2018ல் இருந்து திரிபுரா முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார் தேவ் நேற்று
சென்னை : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானதோடு சொந்த நாட்டு மக்களே பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நாட்டைவிட்டு விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இலங்கை உருப்படாது என ரஜினிகாந்த் பேசியது பலித்து உள்ளதாக அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரது பேச்சை
ஶ்ரீவில்லிப்புத்தூர்: சினிமா சூட்டிங் பணத்தை வைத்து நூதனமான முறையில் ஏமாற்றும் சதித் திட்டம் தீட்டியதாக திமுக நிர்வாகி உட்பட 5 பேரை ஶ்ரீவில்லிப்புத்தூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ67 லட்சம் டம்மி பணம், சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை - சேதுநாராயணபுரம் விலக்கு பகுதியில் கேரளாவைச்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தியில் வழங்க வேண்டும் என்பதே தங்களின் அடுத்த திட்டம் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் உத்தராகண்டில் உள்ள பள்ளிகளில் பகவத் கீதையும் வேதங்களும் போதிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அவர் இன்று தனது அடுத்த திட்டத்தை அறிவித்து
வாடிகன்: வாடிகனில் உள்ள கத்தோலிக்க கத்தோலிக்க திருச்சபையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதன்மூலம் புனிதர் பட்டம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை தேவசகாயம் பிள்ளை பெற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற கிராமத்தில் 1712 ம்
அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் மணப்பெண் ஒருவர் தாலி கட்டுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மணமகன் மடியில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாகுளம் ஜலமுருவைச் சேர்ந்தவர் ஸ்ரீஜனா (22). இவர்களது குடும்பம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஹைதரபாத்திலிருந்து ஸ்ரீகாகுளம் வந்தது. ஸ்ரீஜனா பிகாம் பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்ய அவரது வீட்டார்
காந்திநகர்: வானில் இருந்து பறந்து வந்த பந்து வடிவிலான பொருட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள 3 கிராமங்களில் அடுத்தடுத்து விழுந்தன. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் தடயவியல் துறையினர் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தி நடந்தது என்ன என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளனர். விண்வெளியில் தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கினற்ன. இதுகுறித்து தினமும் உலகம் முழுவதும் பல்வேறு
பியாங்கியாங்: வடகொரியாவில் கடந்த 3 நாட்களில் 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொரோனா பரவல் ஏற்பட்டது. இதன் மூலம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா பரவியது. தற்போது அந்தந்த நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலை என வீசி வருகிறது. ஆனால் கொரோனா
ஜெய்பூர்: 23 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித்தை டெல்லி போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மகேஷ் ஜோஷி. இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!
அகர்தலா: திரிபுரா மாநில புதிய முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ள மாணிக் சஹா இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்தவர். இப்படி வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களுக்கு முதலமைச்சர் பதவியை அக்கட்சி வழங்கி இருக்கிறது. திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க
நெல்லை : நெல்லை கல்குவாரி விபத்து காரணமாக இதுவரை 3 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடந்து 14 மணி நேரமாகியும் கூட இதுவரை திமுக அமைச்சர்களோ, பேரிடர் மீட்பு குழுவினரோ இங்கு வராதது ஏன்? திமுக அரசு என்ன செய்கிறது? என அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லை பொன்னாக்குடி அருகே
நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து மீட்பு பணியில் 15 மணி நேரமாக கண்முன்னே ஊசலாடிக் கொண்டிருக்கும் இளைஞரின் உயிரை ஊரே கூடி நின்றும் மீட்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் என்ற கிராமத்தில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு
ஜெய்ப்பூர்: ‛‛ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிராக போராடுவதே எனது லட்சியம். நம்மை போன்று மாநில கட்சிகளால் ஒருபோதும் போராட முடியாது. நான் யாரிடமும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியது இ
உதய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டை 50 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றிய இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது தேர்தல்களில் சரிவை சந்தித்து வருகிறது. கட்சியை புனரமைக்கவும், தேர்தல் அரசியலில்