லைகா மற்றும் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஆகிய நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை மீட்க தொழில்நுட்பக்குழுவினர் முயன்று வருகின்றனர்.
மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கும் ராஜமௌலி, அந்த படத்தில் கமலையும் நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வேதேச திரைப்பட விழாவான கேன்ஸ் படவிழாவில் தமிழ்ப்படமான ராக்கெட்ரி திரையிடப்பட உள்ளது. அந்தப்பட விழாவில் திரையிடப்படவுள்ள இந்தியப் படங்களின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
கடந்த 100 நாட்களாக தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்த தனது குழந்தை தற்போது வீட்டில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் வேட்டுவம் படம் மற்றும் இணையத்தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது.
மறைந்த நடிகரும் முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் 35-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில், அவரது சிலையை கமல்ஹாசன் நேற்று திறந்து வைத்தார்.
மிதிவண்டியில் அலைந்து திரிந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் ஓர் எளிய குடும்பத்தின் அப்பா (சமுத்திரக்கனி), தனது ஒரே மகனை (சிவகார்த்திகேயன்) இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார்
முதலாம் ஆஸ்கர் விருது, சிறந்த படம், கலைப் படம், நடிகர், நடிகை, சொந்தத் திரைக்கதை, மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதை, இயக்குநர், நகைச்சுவைப் பட இயக்குநர், ஒளிப்பதிவு, எஞினியரிங் எஃபெக்ட்ஸ், தலைப்பு வடிவமைப்பு ஆகிய 12 பிரிவுகளில்தாம் வழங்கப்பட்டன.
நேர்மையான தலைமைக் காவலரின் மகன் ஏழுமலை (ஜி.வி.பிரகாஷ்). மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவர். ஏழை மக்களுக்கு பயன்படும்வகையில் பல கருவிகளை கண்டுபிடிக்கிறார்.